ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இந்த ஆண்டின் காதல் ஆந்தம் பாடல் பிரம்மாஸ்திரா பாகம் ஒன்று சிவா திரைப்படத்திலிருந்து ‘கேசரியா’: இப்போது 5 மொழிகளில் வெளியாகியுள்ளது !

by Tamil2daynews
July 18, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இந்த ஆண்டின் காதல் ஆந்தம் பாடல் பிரம்மாஸ்திரா பாகம் ஒன்று சிவா திரைப்படத்திலிருந்து ‘கேசரியா’: இப்போது 5 மொழிகளில் வெளியாகியுள்ளது !

 

 

கேசரியா பாடல் இப்போது இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட பதிப்புகளில் கிடைக்கிறது.

இந்தியா – 17 ஜூலை 2022:  கேசரியா பாடல் சமூக ஊடகங்களில் புயலை கிளப்ப, ஒரு  சில வினாடிகளே எடுத்தது.  இந்த பாடலின் டீசர்  டிராக் ஏற்கனவே ரீல்களில் கோலோச்சி வரும் நிலையில்,  அயன் முகர்ஜியின் மகத்தான உருவாக்கத்தில், சோனி மியூசிக் நிறுவனத்துடன் இணைந்து  பிரம்மாஸ்திரா  பாடல் இன்று அறிமுகமாகியுள்ளது. இந்த பாடல் வாரணாசியின் மலைத்தொடர்களில் படமாக்கப்பட்டது, இது இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடல்களில் ஒன்றாகும். இப்பாடலின்  இனிமையான மெல்லிசை மற்றும் பிரமிக்க வைக்கும் காட்சிகள் காரணமாக இசை வரிசையில்  முதலிடம் பெறுவது உறுதி. இந்த பாடல் இன்று இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகியுள்ளது.
பிரம்மாஸ்திரா பாகம் ஒன்றிற்காக பார்வையாளர்கள் ஆவலோடு  காத்திருக்கும் நிலையில்,  படத்திலிருந்து வெளியாகும், ஒவ்வொரு டீஸரும், அது பாடலாக இருந்தாலும், விஷுவலாக இருந்தாலும் அல்லது ‘தி வேர்ல்ட் ஆஃப் அஸ்ட்ராஸ்’ பற்றிய சமீபத்திய கான்செப்ட் வீடியோவாக இருந்தாலும், படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும்  இன்னும் அதிகப்படுத்துவதாக அமைந்துள்ளது.

ஒரு டீஸர் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடலைப் பற்றி நடிகர் ரன்பீர் கபூர் பேசுகையில், “பாடலின் புத்துணர்ச்சி பார்வையாளர்களிடையே நன்றாக எதிரொலித்தது. எண்ணற்ற இதயங்களைத் தொட்ட ஒரு பாடலை உருவாக்கியதற்காக ஒட்டுமொத்த குழுவிற்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், மேலும் முழு பாடலின்  அனுபவத்தை பார்வையாளர்கள் பாராட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன்.
நடிகை ஆலியா பட் கூறுகையில்,
 “என்னைப் பொறுத்தவரை, கேசரியா என்பது ஒருவர் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்கும்போது அனுபவிக்கும் ஒரு உணர்வு. இது பிரம்மாஸ்திரம் சிவா பாகம் ஒன்றிலிருந்து வெளியாகும் முதல் பார்வை இது   எனக்கும் முழு குழுவினருக்கும் இதயத்திற்கு நெருக்கமான படைப்பாகும்.  நான் கேட்கும் போதெல்லாம் இந்த பாடல் என்னை ஈர்க்கிறது, இப்பாடல் பார்வையாளர்களின் இதயங்களைத் தொடும் என்று நான் நம்புகிறேன். ”

இயக்குனர் அயன் முகர்ஜி கூறுகையில்,
“கேசரியாவில் ப்ரீதம் தா, அரிஜித், அமிதாப் பட்டாச்சார்யா மற்றும் ஒட்டுமொத்த குழுவுடன் இணைந்து பணிபுரிந்தது, ஒரு அழகான அனுபவம். யே ஜவானி ஹை தீவானி திரைப்படத்திலிருந்து ப்ரீதம் தா, எப்பொழுதும் எனக்காக சிறந்த இசையை தருகிறார். அரிஜித் சிங், சித் ஸ்ரீராம், சஞ்சித் ஹெக்டே மற்றும் ஹேஷாம் அப்துல் வஹாப் ஆகியோர் இப்பாடலை அனைத்து மொழிகளிலும் மிகவும் அழகாகவும் ஆத்மார்த்தமாகவும் வழங்கியுள்ளனர் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி.   “ரன்பீர் ஆலியாவின்  அற்புதமான கெமிஸ்ட்ரி பாடலுக்கு மேலும் அழகு சேர்த்துள்ளது. உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் ரன்பீர்-ஆலியாவின் காதலை டீஸர் மூலம் கொண்டாடியுள்ளனர், மேலும் இந்த முழு பாடல் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் விஞ்சும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இசையமைப்பாளர் ப்ரீதம் பாடலின் வெளியீடு குறித்து தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டதாவது,
“இப்பாடல் பல உணர்ச்சிகளின் அடுக்குகளைக் கொண்டுள்ளது, இது ஒரு உண்மையான விருந்தாக இருந்தது. டீஸர் வைரலானபோது, எனக்கும், அரிஜித்துக்கும், அமிதாப்புக்கும் இது மறக்கமுடியாத ஒன்று என்று தெரியும்! முழுப் பாடலும் இப்போது வெளியாகியுள்ளது, மேலும் இது  இசை காதலர்கள் அனைவரின் பிளேலிஸ்ட்களையும் சென்றடையும் என்று நம்புகிறேன்.

மலையாளப் பதிப்பை இசையமைத்திருக்கும் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் கூறும்போது,
“பிரீதம் சாரின் இசையைக் கேட்டு வளர்ந்தவன் நான். ‘குங்குமாமாகே’ பாடலுக்கு அவர் என்னை அழைத்த நாளை என்னால் மறக்க முடியாது, ஆரம்பத்தில் இது ஒரு குறும்பு என்று தான்  நான் நினைத்தேன், ஆனால் அது உண்மையாகவே அவர் என்று உணர்ந்தபோது, ஆச்சர்யத்தில் உறைந்தேன்.  எனக்கு மிகப்பெரிய உத்வேகம் அளித்தவர்களில் ஒருவர் என்பதால் நான் மகிழ்ச்சியில் மூழ்கினேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்காக அவருக்கும், பிரம்மாஸ்திராவின் ஒட்டுமொத்த குழுவிற்கும் முழு மனதுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் மலையாளத்தில் பாடல் வரிகளை எழுத உதவிய ஷபரீஷ் வர்மாவுக்கு இந்நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மலையாளப் பதிப்பை எழுதியுள்ள பாடலாசிரியர் ஷபரீஷ் வர்மா கூறுகையில்,
“குங்குமமாகே கேசரியாவின் மலையாளப் பதிப்பு, இவ்வளவு அழகான பாடல் வரிகளுக்கு எங்கள் பங்களிப்பை கொடுப்பது ஒரு உற்சாகமான சவாலாக இருந்தது. பாடகர் ஹேஷாம் அப்துல் வஹாப் பாடல் வரிகளுக்கு மிகச் சிறந்த இசைப்பணியை தந்துள்ளார். மேலும் இது அனைத்து பார்வையாளர்களும் விரும்பும் பாடலாக இருக்கும் என நம்புகிறேன்.!”

இந்த ரொமாண்டிக் பாடலை அசல் ஹிந்தி பதிப்பில் பாடியது வேறு யாருமல்ல, அரிஜித் சிங், அவரது அழகான  குரலில், அனைவராலும் மிகவும் விரும்பப்படும் இசையமைப்பாளர், வாத்தியக்கலைஞர், கிதார் கலைஞர் ப்ரீதம் உடைய  மெல்லிசை இசையமைப்பில்  இப்பாடல் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமிதாப் பட்டாச்சார்யா எழுதிய பாடல் வரிகளுடன், கணேஷ் ஆச்சார்யாவின்  நடன அமைப்பில்,
துடிப்பான மற்றும் வண்ணமயமான பின்னணியில், முன்னணி நடிகர்களான ரன்பீர்-ஆலியாவைப் பார்க்கும்போது உங்கள் முகத்தில் புன்னகை தவழும் .

Previous Post

பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது ” ஆகாசவாணி சென்னை நிலையம் “

Next Post

விஜய் ஆண்டனியின் கொலை திரைப்படம் வித்தியாசமான கதாப்பாத்திரங்களால் ஆவலை தூண்டுகிறது

Next Post

விஜய் ஆண்டனியின் கொலை திரைப்படம் வித்தியாசமான கதாப்பாத்திரங்களால் ஆவலை தூண்டுகிறது

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • கெவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • ”என் இனிய தனிமையே முதல் பாடல் இன்று வெளியீடு”

    0 shares
    Share 0 Tweet 0
  • மேலாடையை கழற்றி போஸ் கொடுத்த  பிரபல தமிழ் நடிகை.

    7 shares
    Share 7 Tweet 0
  • அசோக்செல்வன், சாந்தனு, ப்ரித்வி இணைந்து நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் ஜெ.எம்.பஷீர்..!

February 2, 2023

ஹன்சிகா நடிப்பில் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட ‘ஒன்றல்ல ஐந்து நிமிடம்’ .

February 2, 2023

‘மைக்கேல்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

February 2, 2023

அதிரடியில் மிரட்டும் நேச்சுரல் ஸ்டார் நானியின் “தசரா” திரைப்பட டீசர் !!

February 2, 2023

அசோக்செல்வன், சாந்தனு, ப்ரித்வி இணைந்து நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

February 2, 2023

திரில்லரான பொழுதுபோக்கு படம்; என்னுடைய கதையை ரசித்துக் கேட்டார் தளபதி விஜய்!- நடிகர் ஆர்.ஜே.பாலாஜி

February 2, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!