• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

வாரண்ட் – விமர்சனம்

by Tamil2daynews
May 27, 2026
in விமர்சனம்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
வாரண்ட் – விமர்சனம் 
விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வாரண்ட்’ இணையத் தொடர் Zee5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. விலங்கு ஓடிடி தொடர் மற்றும் மாமன் படத்தின் மூலம் கவனமீர்த்த  பிரசாந்த் பாண்டியராஜ் இந்த தொடரில் நாயகனாக நடித்துள்ளார்.  காளி வெங்கட் , பாலாஜி சக்திவேல் , அருள்தாஸ் , நம்ரிதா ஆகியோர் இந்த தொடரில் நடித்துள்ளார்கள். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
திருச்சி பொன்மலை காவல் நிலையத்தில் காவல் அதிகாரியாக பணியாற்றுகிறார்  நாயகன் கோட்டைக்கருப்பு (பிரசாந்த் பாண்டியராஜ்) . தனது தந்தையின் ஆசைக்காக எப்படியாவது அரசு வேலையில் சேர்வதற்காக எல்லா தேர்வுகளையும் எழுதுகிறார் நாயகன் கோட்டைக்கருப்பன். ஆனால் எல்லா தேர்வுகளிலும் ஒரு சில மார்க் வித்தியாசத்தில் அரசு வேலையை தவறவிடுகிறார். கோட்டைகருப்பின் மாமா காளி வெங்கட் எஸ் அலுவலகத்தில் டிரைவராக இருப்பதால் அவரது செல்வாக்கை பயன்படுத்தி கருப்புக்கு போலீஸ் வேலை வாங்கி தருகிறார். வீட்டில் அப்பா அம்மாவால் செல்லமாக வளர்க்கப்படும் கருப்பு போலீஸ் வேலையில் சேர்ந்த முதல் நாளில் இருந்தே முற்றிமும் வேற எதார்த்தத்தை எதிர்கொள்கிறார்.

தனது அப்பாவியான குனத்தால் சக அதிகாரிகள் மற்றும் குற்றவாளிகளால் கேலிக்கு ஆளாகும் கோட்டைக்கருப்பு தன்னை போலீஸ் வேலைக்கு ஏற்ற மாதிரியான ஒரு நபராக மாற்றிக் கொள்ளும் முனைப்பில் வழிதவறிப் போவதே இந்த தொடரின் மையக்கதை.

மையக் கதைக்குள் செல்ல ரொம்ப நேரம் எடுத்துக்கொள்ளாமல் தொடங்கிய முதல் சில நிமிடங்களிலேயே கதைக்குள் சென்று விடுகிறார்கள். எதார்த்தமாக நகரும் கதை , அங்கங்கு சின்ன நகைச்சுவைகள் , காவலர்கள் வேலையில் எதிர்கொள்ளும் சவால்கள் என சுவாரஸ்யமாக கதையை கட்டமைத்திருக்கிறார்கள். நாயகனாக நடித்துள்ள பிரசாந்த் பாண்டியராஜ் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற உடல் மொழியையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தி எதார்த்தமாக நடித்துள்ளார். அவரது அப்பாவித் தனம்  பார்வையாளர்களை சீக்கிரமாக கதைக்குள் இழுத்துச் செல்கிறது. மேக்கிங் ரீதியாக பிரம்மாண்டமாக இல்லை கதை சுவாரஸ்யமான திருப்பங்களை எடுப்பதால் அடுத்தடுத்த எபிசோட்களை நோக்கி நகர்கிறோம்.

கோட்டைக் கருப்பு என்கிற கதாபாத்திரத்தை பிரசாந்த் பாண்டியராஜ் மிக எதார்த்தமாக கையாண்டுள்ளார். வன்முறை விரும்பாத கருப்பு போலீஸ் வேலையில் சேர்ந்த பிறகு அந்த இடத்திற்கு ஏற்ற வகையில் தன்னை தகவமைத்துக் கொள்கிறார். அதனை தனது நடிப்பில் சிறப்பாக கொண்டுவந்துள்ளார் பிரசாந்த். குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சியில் அவரது நடிப்பு சிறப்பு . இந்த தொடரில்  ஒவ்வொரு சின்ன கதாபாத்திரத்திற்கும் ஒரு முக்கியமான அங்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அருள்தாஸ் , காளி வெங்கட் , பாலாஜி சக்திவேல் , அருள்தாஸ் , நம்ரிதா ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளார்கள்.

வாரன்ட் தொடர் மொத்தம் 8 எபிசோட்களை கொண்டிருக்கிறது

ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் தொடர்.

வீட்டிலிருந்து பார்ப்பதற்கு பரபரப்பான வெப் சீரிஸ் வாரண்ட்.
Previous Post

‘எல்லம்மா’ படத்திற்கு என்னை சம்மதிக்க வைத்த கிராமம் இது’- ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் நெகிழ்ச்சி!

Next Post

திரைத்துறையினர் ஒன்று கூடிய பிரம்மாண்ட விழாவில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் பெயரில் புதிய விருது அறிவிப்பு!

Next Post

திரைத்துறையினர் ஒன்று கூடிய பிரம்மாண்ட விழாவில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் பெயரில் புதிய விருது அறிவிப்பு!

Popular News

  • “உலகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக சிரிப்பும் காதலும் கலந்த திரைப்படமாக ‘மிஸ்டர் பாரத்’ உருவாகியுள்ளது”-நடிகர் பாரத்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிளாஸ்ட் – விமர்சனம் ரேட்டிங் – 4/5

    0 shares
    Share 0 Tweet 0
  • “தனது முழுத்திறனையும் வெளிப்படுத்தி கோமலி பிரசாத் நடித்திருக்கிறார் ” இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஆகஸ்ட் 14 ல் திரைக்கு வரும் ஃபிளாக் திரைப்படம்

July 24, 2026

“நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா

July 24, 2026

கோலாகலமாக நடைபெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா

July 23, 2026

டாக்ஸிக்’-Toxic திரைப்படத்தின் ‘தடுமாறுதே ‘ பாடல் மூலம் ராயா மற்றும் ரெபெக்கா கதாபாத்திரத்தின் புதிய பரிமாணத்தை ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் மற்றும் தாரா சுதாரியா வெளிப்படுத்துகின்றனர்.

July 23, 2026

நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

July 23, 2026

காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி

July 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.