• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

DNA மெக்கானிக் கம்பெனி வழங்கும் ‘மெளனகுரு’ & ‘மகாமுனி’ புகழ் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ்- தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 1’ பூஜையுடன் தொடங்கியது

by Tamil2daynews
November 5, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

DNA மெக்கானிக் கம்பெனி வழங்கும் ‘மெளனகுரு’ & ‘மகாமுனி’ புகழ் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ்- தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 1’ பூஜையுடன் தொடங்கியது

 

‘மெளனகுரு’, ‘மகாமுனி’ ஆகிய படங்களால் தனது திறமையை நிரூபித்தவர் இயக்குநர் சாந்தகுமார். அவரது அறிமுகப் படமான ‘மெளன குரு’ விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், இந்தப் படம் இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட போதும் அங்கும் வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அவரது இரண்டாவது படைப்பான ‘மகாமுனி’, பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் 30 விருதுகளை வென்றது.
இப்போது இயக்குநர் சாந்தகுமார் தன்னுடைய மூன்றாவது படத்தை ‘டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி’ பேனரின் கீழ் இயக்க இருக்கிறார். கதையின் முன்னணி கதாபாத்திரத்தில் அர்ஜூன் தாஸ் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர். சென்னையில் எளிய முறையிலான பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது.

ஒரு குறிப்பிட்ட வகைக்குள் வராத புதிய ட்ரெண்டை தமிழ் சினிமாவில் உருவாக்கிய படங்கள் என்றால் அது சாந்தகுமாரின் முந்தைய படங்களான ‘மகாமுனி’ மற்றும் ‘மெளனகுரு’. இந்தப் படங்களில் த்ரில்லர், எமோஷன்ஸ், ரொமான்ஸ், ஆக்‌ஷன் மற்றும் புதிர் என அனைத்தும் இருக்கும். அதேபோல, இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் புதிய படமும் குறிப்பிட்ட ஒரு வகைக்குள் இருக்காது.
தன்னுடைய புத்திசாலித்தனமான படங்கள் தேர்வால் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நன் மதிப்பைப் பெற்று வருபவர் நடிகர் அர்ஜூன். ‘கைதி’, ‘மாஸ்டர்’ மற்றும் ‘அந்தகாரம்’  ஆகிய படங்களில் அவருடைய வித்தியாசமான கதாபாத்திரம் சினிமா பயணத்தில் அவரது வளர்ச்சிக்கு அடுத்தக் கட்டமாக அமைந்தது. அந்த வரிசையில் இந்தப் படத்திலும் தனித்துவமான கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார்.

ரேஷ்மா வெங்கடேஷ், சுஜித் ஷங்கர், GM சுந்தர், S ரம்யா மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

தொழில்நுட்பக் குழு விவரம்:
எழுத்து, இயக்கம், தயாரிப்பு: சாந்தகுமார் (DNA மெக்கானிக் கம்பெனி),
ஒளிப்பதிவு: சிவா GRN,
கலை: சிவராஜ் சாமரன்,
சண்டைப் பயிற்சி: ஆக்‌ஷன் பிரகாஷ்,
எடிட்டர்: V.J. சபு ஜோசப்,
இசை: தமன்,
பாடல் வரிகள்: யுகபாரதி,
படங்கள்: M. ஆனந்தன்,
ஆடை வடிவமைப்பு: மீனு சித்ரா கனி,
ஆடை: P. செல்வம்,
ஒப்பனை: வினோத்,
இணை இயக்குநர்கள்: சிவ பிரகாஷ் & கிருஷ்ண மூர்த்தி,
புரொடக்‌ஷன் எக்ஸிகியூட்டிவ்: C சரவணன்,
தயாரிப்பு மேலாளர்: தேனி தமிழ்,
நிர்வாக தயாரிப்பாளர்: S. பிரேம்.

Previous Post

சமந்தாவின் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ‘யசோதா’ திரைப்படம் சென்சார் பெற்றது!

Next Post

மீண்டும் படம் இயக்கும் தினந்தோறும் நாகராஜ். Q சினிமாஸ் சார்பில் சசிகுமார் R தயாரிக்கிறார்.

Next Post

மீண்டும் படம் இயக்கும் தினந்தோறும் நாகராஜ். Q சினிமாஸ் சார்பில் சசிகுமார் R தயாரிக்கிறார்.

Popular News

  • மீசைய முறுக்கு தம்பி’ – ‘பாவி டீச்சர்’ நிஜ வாழ்க்கை ஜோடி!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய நடிகர் ஏகன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • “நான் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுந்தாலும், அங்கும் என்னை மக்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்” – ‘பாகுபலி’ உலகளாவிய தாக்கம் குறித்து பிரபாஸ் உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் யாராவது ஒருவர் வந்து ‘பாகுபலி’ என்று அழைத்துவிடுகிறார்கள்.”-பிரபாஸ்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி- ரசிகர்கள் கொண்டாட்டம்

    0 shares
    Share 0 Tweet 0
  • டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தின் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மத்தகம்” வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘நேரம்’, ‘பிரேமம்’ படங்களைத் தொடர்ந்து ‘விஜயம்’ – நிவின் பாலி & அல்போன்ஸ் புத்திரன் கூட்டணியின் புதிய படத் தலைப்பு வெளியானது!

July 1, 2026

அந்தரன் – விமர்சனம்

July 1, 2026

மக்கள் நாயகன் என்.டி.ஆர் – இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீண்டும் இணையும் பிரம்மாண்ட தெய்வீக திரைப்படம்!

July 1, 2026

ஹொம்பாலே பிலிம்ஸ் ( Hombale Films) – ‘The one’ சூர்யா – இயக்குநர் த.செ.ஞானவேல் வலிமையான கூட்டணியில் S-48 திரைப்படம் உருவாகிறது

July 1, 2026

மம்பட்டியான் ஸ்டார்ஸ் – வெப் தொடர் விமர்சனம்

July 1, 2026

மீசைய முறுக்கு தம்பி’ – ‘பாவி டீச்சர்’ நிஜ வாழ்க்கை ஜோடி!

July 1, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.