• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இயக்குநர் R.கண்ணன் இயக்கத்தில், உருவாகும் “காந்தாரி” இரட்டை வேடத்தில் கலக்கும் ஹன்சிகா மோத்வானி !!

by Tamil2daynews
March 2, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இயக்குநர் R.கண்ணன் இயக்கத்தில், உருவாகும்  “காந்தாரி” இரட்டை வேடத்தில் கலக்கும் ஹன்சிகா மோத்வானி !!

 

விடுமுறை கொண்டாட்டமாக வெளிவருகிறது இயக்குநர் R.கண்ணன் இயக்கத்தில், ஹன்சிகா மோத்வானி நடிக்கும்  “காந்தாரி”  திரைப்படம் !!

Masala Pix  நிறுவனம் சார்பில் இயக்குநர், தயாரிப்பாளர் கண்ணண் தயாரித்து, இயக்க,   நடிகை ஹன்சிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும்,   “காந்தாரி”  திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் கோடை விடுமுறைக் கொண்டாட்டமாக இப்படம் வெளிவரவுள்ளது .

தமிழ் திரையுலகில் குடும்பங்களோடு கொண்டாடும் ரசனை மிக்க படங்களை வழங்கி வருபவர் இயக்குநர் கண்ணன்.  குடும்பங்கள் கொண்டாடும் ஜெயம் கொண்டான்,  கண்டேன் காதலைப் படங்களுடன் இளைஞர்கள் கொண்டாடும்  ‘சேட்டை,  இவன் தந்திரன், பிஸ்கோத்’ முதலாக பல வெற்றிப்படங்களை தொடர்ந்து வழங்கி வருகிறார். கடந்த  ஆண்டு R.கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான “தி கிரேட் இண்டியன் கிச்சன்” திரைப்படம், ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதுடன் விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. இந்த வரிசையில்  தற்போது  நாயகி ஹன்சிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்க,  கமர்ஷியல் கலந்த ஹாரர் டிராமாவாக  “காந்தாரி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.

இந்து அறநிலையத்துறை அதிகாரியாக வேலை பார்க்கும் இளம்பெண், பல காலத்திற்கு முன் ஒரு மன்னன் கட்டிய  கந்தர்வக்கோட்டையை ஆராயச் செல்கிறார். பொக்கிசங்களைத் தேடிச் செல்லும் அவருக்கு, அங்கே பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது. பல திருப்பங்களுடன் பரபரப்பான திரைக்கதையில், இப்படம் ரசிகர்களுக்குப் புத்தம் புது அனுபவமாகவும் இருக்கும்.

நடிகை ஹன்சிகா மோத்வானி இப்படத்தில் முதன்முறையாக இந்து அறநிலையத்துறை அதிகாரி, நரிக்குறவப் பெண் என  இரட்டை வேடத்தில், நடிக்கிறார். நரிக்குறவப்பெண்ணாக நடிப்பதற்காக சில பயிற்சி எடுத்துக்கொண்டுள்ளார். அவரது திரைப் பயணத்தில் இப்படம் அவரது நடிப்பிற்குப் பெயர் சொல்லும் படமாக இருக்கும்.

இப்படத்திற்காகச்  சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் 60 லட்சம் ரூபாயில், ஒரு பிரம்மாண்டமான மலைக் குகை அமைத்து, 1943 ல் நடக்கும் ப்ளாஷ்பேக் காட்சிகளைப் படமாக்கியுள்ளது படக்குழு. இப்படத்தின் ஒளிப்பதிவும், இசையும் மிக சிறப்பாக அமைந்துள்ளது.

இப்படத்தில் ஹன்சிகா மோத்வானி முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, மெட்ரோ ஷிரிஷ்,மயில்சாமி, தலைவாசல் விஜய், ஆடுகளம் நரேன், ஸட்ண்ட் சில்வா, வினோதினி, பவன், பிரிகிடா சகா, வடிவேல் முருகன், கலைராணி ஆகியோர் முக்கியப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் கண்ணன் Masala Pix  நிறுவனம் சார்பில் இப்படத்தினை தயாரித்து, இயக்கியுள்ளார்.   இப்படத்தின் கதையைத் தொல்காப்பியன் எழுதியுள்ளார், திரைக்கதையை தனஞ்செயன் எழுதியுள்ளார். வசனங்களை ஸ்ரீனி எழுதியுள்ளார். ஒளிப்பதிவை பாலசுப்பிரணியம் செய்கிறார். படத்திற்கு LV.முத்து கணேஷ் இசையமைத்துள்ளார், எடிட்டிங் பணிகளை ஜிஜிந்த்ரா கவனிக்கிறார். சண்டைக்காட்சிகளை ஸட்ண்ட் சில்வா வடிவமைத்துள்ளார். தயாரிப்பு மேற்பார்வை பணிகளை சிவசங்கரன் செய்துள்ளார். மக்கள் தொடர்பு பணிகளை ஜான்சன் செய்கிறார்.

படத்தின் முழுப்படப்பிடிப்பும் முடிந்த நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். இப்படத்தினை கோடை விடுமுறையை குடும்பங்களோடு  கொண்டாடும் வகையில் வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
Previous Post

பா. இரஞ்சித் தயாரிப்பில் ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது

Next Post

சத்தமின்றி முத்தம் தா – திரில்லர் தான் ஆனால் தலைப்புக்கேற்ற படமாக இருக்கும் – இயக்குநர் ராஜ்தேவ்.

Next Post
சத்தமின்றி முத்தம் தா – திரில்லர் தான் ஆனால் தலைப்புக்கேற்ற படமாக இருக்கும் – இயக்குநர் ராஜ்தேவ்.

சத்தமின்றி முத்தம் தா - திரில்லர் தான் ஆனால் தலைப்புக்கேற்ற படமாக இருக்கும் - இயக்குநர் ராஜ்தேவ்.

Popular News

  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் “An Ordinary Man” திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – இயக்குநராக தன் புதிய பயணத்தை தொடங்கும் ரவி மோகன் ; நகைச்சுவை நாயகனாக யோகி பாபு!

    0 shares
    Share 0 Tweet 0
  • விநாயகர் சதூர்த்தி தினத்தில், விகாஷ் நடித்த “துச்சாதனன்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.