• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஹைதராபாத்தில் நடக்கும் ஆத்வி சேஷின் பான்-இந்தியா அதிரடித் திரைப்படமான ‘டகோயிட்’ படப்பிடிப்பில், நடிகை ஸ்ருதி ஹாசன் இணைந்துள்ளார் !!

by Tamil2daynews
June 15, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஹைதராபாத்தில் நடக்கும் ஆத்வி சேஷின் பான்-இந்தியா அதிரடித் திரைப்படமான ‘டகோயிட்’ படப்பிடிப்பில், நடிகை ஸ்ருதி ஹாசன் இணைந்துள்ளார் !!

 

ஆத்வி சேஷின் மெகா பான்-இந்திய ஆக்‌ஷன் திரைப்படமான ‘டகோயிட்’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கி நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் கதாநாயகியாக  நடிக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன் பங்கேற்றுள்ளார். இந்த ஷெட்யூலில்  படத்தின் முக்கியமான காட்சிகள் மற்றும் பிரமாண்டமான ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். நடிகை  ஸ்ருதி ஹாசன் நடிகர் ஆத்வி சேஷுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட  செல்ஃபியைப் பகிர்ந்து, இனிமையான ஷீட்டிங் அனுபவம் எனக்குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு முன்னாள் காதலர்கள், தங்கள் வாழ்க்கையை மாற்ற வேண்டி, தொடர்ச்சியான கொள்ளைகளை ஒன்றாக இணைந்து செய்கிறார்கள். இதனை பரபரப்பான திருப்பங்களுடன் சொல்லும் திரைப்படம் தான்   ‘டகோயிட்’.  ஆத்வி சேஷின் ‘க்ஷணம்’ மற்றும் ‘கூடாச்சாரி’ உள்ளிட்ட பல தெலுங்கு பிளாக்பஸ்டர் படங்களுக்கு  ஒளிப்பதிவாளராக பணியாற்றிய, ஷனைல் தியோ இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஆத்வி சேஷு மற்றும் ஸ்ருதி ஹாசன் முதல் முறையாக இப்படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர்.  இந்த திரைப்படத்தை சுப்ரியா யர்லகட்டா தயாரிக்க, சுனில் நரங் இணை தயாரிப்பு செய்துள்ளார் மற்றும் அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் இப்படத்தினை வழங்குகிறது. இப்படம் இந்தி மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வருகிறது.
இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை ஆத்வி சேஷ் மற்றும் ஷனைல் தியோ ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். 2022 ஆம் ஆண்டு பெரும் பாராட்டுக்களைக் குவித்த  “மேஜர்” திரைப்படத்திற்கு பிறகு உருவாகும், ஆத்வி சேஷின் இரண்டாவது இந்திப் படம் இதுவாகும்.

படம் பற்றிய மற்ற  விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

நடிகர்கள்: ஆத்வி சேஷ், ஸ்ருதி ஹாசன் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு:
இயக்கம்: ஷனைல் டியோ
கதை, திரைக்கதை: ஆத்வி சேஷ் மற்றும் ஷனைல் தியோ
தயாரிப்பாளர்: சுப்ரியா யர்லகட்டா
இணை தயாரிப்பாளர்: சுனில் நரங் வழங்குபவர்கள்: அன்னபூர்ணா ஸ்டுடியோஸ்
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Previous Post

லைகா புரொடக்ஷன்ஸ் வழங்க, நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும், புதிய திரைப்படம் “லாக்டவுன்”

Next Post

ஆஹா வழங்கும் ‘வேற மாறி ஆபீஸ் – சீசன் 2’ இனிதே துவங்கியது !

Next Post

ஆஹா வழங்கும் ‘வேற மாறி ஆபீஸ் - சீசன் 2’ இனிதே துவங்கியது !

Popular News

  • வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆதி புருஷ்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக சைஃப் அலி கான் ஒப்பந்தம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

    0 shares
    Share 0 Tweet 0
  • குற்றம் கடிதலைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரவிருக்கும் ‘குற்றம் கடிதல் 2!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.