அப்புக்குட்டிக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்கும் என்கிறார் “சூரியனும் சூரியகாந்தியும்” படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ஏ.எல்.ராஜா.
பார்த்திபன், தேவயானி நடிப்பில், ‘நினைக்காத நாளில்லை’, ‘தீக்குச்சி’ மற்றும் தெலுங்கில் ‘அக்கிரவ்வா’ ஆகிய படங்களை தொடர்ந்து,இயக்குனர் ஏ.எல்.ராஜா இயக்கியுள்ள புதிய படம் “சூரியனும் சூரியகாந்தியும்”!
நினைக்காத நாளில்லை படத்தில் வடிவேலு, பார்த்திபன் இருவர் கூட்டணியில் ஹலோ யார் பேசறது… நீ தான்டா பேசுற… காமெடி, தீக்குச்சி படத்தில் நரிக்குறவனாக வடிவேலு படம் முழுவதும் செய்த காமெடி போல், விழுந்து சிரிக்க காமெடிகளும், விறுவிறுப்பான காட்சிகளும், இந்தப் படத்திலும் இடம் பெற்றுள்ளது!


சாதிக்க துடிப்பவனை, சாதி எப்படியெல்லாம் தடுக்கிறது என்பதை, உயிரோட்டத்தோடு படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஏ.எல்.ராஜா!
நான்கு பாடல்கள், மூன்று சண்டைக் காட்சிகளுடன் ரசிகர்கள் ரசிக்கவும், மக்கள் சிந்திக்கவும், விரைவில் திரைக்கு வருகிறது “சூரியனும் சூரியகாந்