• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

டிடி ரிட்டர்ன்ஸ் – விமர்சனம்

by Tamil2daynews
July 28, 2023
in விமர்சனம்
0
0
SHARES
34
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

டிடி ரிட்டர்ன்ஸ் – விமர்சனம்

 

பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தில் சந்தானம்,சுர்பி, ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மாசூம் சங்கர்,டைகர் தங்கதுரை, மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், பெப்சி விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரோகித் ஆபிரகாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். டிடி ரிட்டர்ன்ஸ் படம் முன்னதாக சந்தானம் நடித்து வெளியாகியிருந்த தில்லுக்கு துட்டு படத்தின் 3வது பாகமாகும்.

முன்னொரு காலத்தில் பாண்டிச்சேரியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு பங்களா.. அங்கே சூதாட்டத்தை தொழிலாக கொண்டு போட்டியில் தோற்பவர்களை கொலை செய்யும் குடும்பத்தினர் ஊர் மக்களால் எரித்து கொல்லப்படுகிறார்கள்.
Read all Latest Updates on and about dd returns

இதனிடையே நிகழ்காலத்தில் பாண்டிச்சேரியின் ஊர் பெரிய மனிதர் பெப்சி விஜயனிடம் இருந்த பணம், நகை உள்ளிட்டவை பிபின், முனிஷ்காந்த் குழுவால் கொள்ளையடிக்கப்படுகிறது. இந்த பக்கம் பிபின் போதைப்பொருள் பிசினஸில் சம்பாதிக்கும் பணத்தை திருட மொட்டை ராஜேந்திரன் குரூப் முயல்கிறது. மறுபுறம் சுரபியை பிரச்சினையில் இருந்து காப்பாற்ற சந்தானத்துக்கு ரூ.25 லட்சம் தேவைப்படுகிறது. இந்த நிலையில் பிபின் குழு கொள்ளையடித்த பணம், நகை மொட்டை ராஜேந்திரன் குழுவால் கைப்பற்றப்படுகிறது. அடுத்த நிமிடமே அது சந்தானம் வசமாகிறது. அவரும் சுரபியை மீட்கிறார்.

இதற்கிடையில் போலீஸூக்கு பயந்து மீதமுள்ள பணம், நகைகளை சந்தானத்தின் நண்பர்களான மாறன், சைதை சேது இருவரும் அந்த பங்களாவில் கொண்டு போய் வைக்கின்றனர். பேராசை மனிதர்கள் பேய்களாக அலையும் அந்த பங்களாவில் கேம் விளையாடி வென்றால் பணம்.. இல்லையெனில் மரணம் என நிலை இருக்கிறது. இதனை சந்தானம் தொடங்கி மொட்டை ராஜேந்திரன் வரை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை கலகலப்பாக சொல்லியிருக்கிறார்கள்.

ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதே இப்படத்தின் நோக்கம் என்பதால் அதில் அசால்டாக வெற்றி பெற்றுள்ளார்கள். சந்தானம், ரெடின் கிங்ஸ்லி, பெப்சி விஜயன், மாறன், சைதை சேது, முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், பிபின் என பலரும் காமெடி காட்சிகளில் போட்டிப் போட்டுக் கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். வித்தியாசமான பேயாக வில்லன் நடிகர் , பிரதீப் ராவத் கவர்கிறார். சுரபிக்கு பெரிய அளவில் படத்தில் வேலையில்லை என்றாலும் கதையின் போக்குக்கு பயன்படுத்தப்பட்டுள்ளார்.
DD Returns Movie Critic Reviews | Paytm.comபேய் படத்தில் லாஜிக் பார்க்க்கூடாது என்ற விதி உண்டு. அதனை மறந்து விட்டு படம் பார்த்தால் சிரிப்பு சரவெடி தான். ஆங்காங்கே டைமிங் டயலாக்குகளும் அப்ளாஸ் அள்ளுகிறது. சந்தடி சாக்கில் அரசியல்வாதிகள் தொடங்கி, சினிமா பிரபலங்கள் வரை பகடி செய்கிறார்கள். பேயிடம் சென்டிமென்ட் பாடல், பக்தி பாடல் போட்டு காட்டுவது, யூட்யூப் விளம்பரத்தை நக்கலடிப்பது என காட்சிக்கு காட்சி ரசிக்க வைக்கிறார்கள்.

பயமுறுத்தும் பேய் என சென்று பார்த்தால் பெரிய அளவில் இல்லை என்றாலும் , காமெடி காட்சிகளுக்கு சிறப்பாக பயன்பட்டிருக்கும். 90ஸ் கிட்ஸின் பேவரைட் நிகழ்ச்சியாக “Takeshi’s Castle” நிகழ்ச்சியிலான விளையாட்டு உள்ளிட்டவை கவர்கிறது. படத்திற்கு பாடல்களே தேவையில்லை. பின்னணி இசை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

ஆக மொத்தம் பேய் கான்செப்டில் சந்தானம் மீண்டும் ஒரு சூப்பரான வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
Tags: dd returnsdd returns movie reviewdd returns reviewSanthanamSUARBItamil cinema review
Previous Post

LOVE (லவ்) – விமர்சனம்

Next Post

”மம்முட்டியுடன் நடிப்பது மாபெரும் பாக்கியம்” ஐஸ்வர்யா மேனன்

Next Post

”மம்முட்டியுடன் நடிப்பது மாபெரும் பாக்கியம்” ஐஸ்வர்யா மேனன்

Popular News

  • கண்ணப்பா – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • திருமலை புரொடக்ஷன் கே. கருப்புசாமி தயாரிப்பில் சுகவனம் இயக்கத்தில் கொங்கு மண்ணையும் அதன் மக்களையும் கலப்படமில்லாமல் காட்சிப்படுத்தும் திரைப்படம் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’

    0 shares
    Share 0 Tweet 0
  • “எமகாதகி” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !

    0 shares
    Share 0 Tweet 0
  • “மதகஜராஜா எந்த ஸ்டேஷனிலும் நிற்காமல் போகும் ட்ரெயின்” ; விஷால் உற்சாகம்

    0 shares
    Share 0 Tweet 0
  • வீ.ஆர். சினி கிரியேஷன்ஸ் சார்பில் டாக்டர் அருண் பிரசாத் அவர்களின் முதல் தயாரிப்பில் விரைவில் படப்பிடிப்பு தொடங்க விருக்கும் சைன்ஸ் ஃபிக்ஷன் திரில்லர் திரைப்படம் தீ ஸ்டிங்கர் .

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !!

November 2, 2025

‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா !!

November 2, 2025

தேசிய தலைவர் – விமர்சனம்

November 2, 2025

Verus Productions வழங்கும் கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் “ROOT” – படப்பிடிப்பு நிறைவு!

November 2, 2025

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

November 2, 2025

தடை அதை உடை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

November 2, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.