GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர் ஆகியோர் நடிக்க, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படப்புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கம்ர்ஷியல் எண்டர்டெயினர் டிரமாவாக உருவாகும் புதிய திரைப்படம், இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள LV Prasad Lab-ல் சிறப்பான பூஜையுடன் இனிதே துவங்கியது.
பத்திரிகையாளர்கள் முன்னிலையில், நடைபெற்ற இவ்விழாவில், படக்குழுவினர் படம் குறித்தான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
நடிகர் காளி வெங்கட் பேசியதாவது,
”இந்தப் படத்தின் கதையை நான் முழுவதுமாக கேட்டுள்ளேன். ஆனாலும் என்னை நம்பாமல் மீண்டும் படத்தின் கதையை இயக்குநர் எனக்கு அனுப்பியுள்ளார். இயக்குநர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்தப் படம் எனக்கு ஒரு முக்கியமான படமாக இருக்கும். அர்ஜுன் தாஸுடன் ஏற்கனவே இணைந்து நடித்துள்ளேன். ஆனால் எங்கள் இருவருக்கும் சேர்ந்தது போல காட்சிகள் இல்லை. ஆனால், இந்தப் படத்தில் நாங்கள் இருவரும் இணைந்தே பயணம் செய்யவுள்ளது மகிழ்ச்சி. தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள். உங்கள் தைரியமும், நம்பிக்கையும் தான் எங்களுக்கு ஒரு ஆதரவாக இருக்கும். அனைவருக்கும் நன்றி.”
”இயக்குநர் ஒரு அற்புதமான கதையை எழுதியுள்ளார். நாசர் சார் மற்றும் அர்ஜுன் தாஸுடன் இணைந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நானும் இமான் சாரின் மிகப்பெரிய ரசிகை தான். அவரது பாடலுக்காகக் காத்திருக்கிறேன். எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி.”
இயக்குநர் விஷால் வெங்கட் பேசியதாவது,
”என்னுடைய முதல் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த உங்களுக்கு நன்றி. எனக்கு இந்த இடம் கிடைக்க நீங்கள்தான் காரணம். இந்தப் படத்திற்கும் அதே போல உங்கள் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய வெற்றிக்கு என்னுடைய டெக்னிக்கல் குழுதான் காரணம், அவர்களுக்கு எனது நன்றி. இந்தப் படத்தில் நான் தேர்வு செய்துள்ள நடிகர்களுக்கு இந்தப்படம் நல்ல கதாபாத்திரமாக இருக்கும். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இமான் சார் எனக்கு அண்ணன் போல் தான் இருந்தார். அவருடன் பல விஷயங்கள் பேசியுள்ளேன். அவருக்கு எனது நன்றி. அர்ஜுன் தாஸ் மற்றும் ஷிவாத்மிகாவுக்கும் நன்றி. அவர்களுக்கு இந்தப் படம் ஒரு முக்கியப் படமாக இருக்கும். இந்தப் படமும் மனிதர்களைப் பற்றியதாகத்தான் இருக்கும். கூடுதலாக ஒரு எண்டர்டெயின்மெண்ட் படமாகவும் இருக்கும். எங்கள் இளம் குழுவிற்கு உங்கள் ஆதரவைத் தர வேண்டும். அனைவருக்கும் நன்றி.”
நடிகர் நாசர் பேசியதாவது,
”தயாரிப்பாளர் அவர்களுக்கு வாழ்த்துகள். கண்டிப்பாக இந்தப்படம் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். அதற்குக் காரணம் நீங்கள் தேர்வு செய்த இயக்குநர். இயக்குநர் விஷால் வெங்கட் என்னை ஆச்சரியப்பட வைத்தவர். அவரின் முதல் படத்தில் முதல் நாளிலிருந்தே, அவர் என்னை ஈர்த்து விட்டார். தனது பணியில் மிகவும் தெளிவானவர். நடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். உங்களுக்கு இந்தப் படம் மூலம் புது அடையாளம் கிடைக்கும். இந்தப்படம் ஒரு மிகச்சிறந்த படமாக இருக்கும். இயக்குநர் விஷாலுக்கு நான் எப்போதும் ஆதரவாய் இருப்பேன். வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.”
இணை தயாரிப்பாளர்: சுரேந்தர் சிகாமணி
அர்ஜுன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர், அபிராமி, ரமேஷ் திலக், பால சரவணன்.