• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பிரதீப் ரங்கநாதன் – K-Town-ல் ‘ஸ்டார்’ ஆக உயர்ந்து வரும் புதிய ‘டியூட்’

by Tamil2daynews
July 28, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பிரதீப் ரங்கநாதன் – K-Town-ல் ‘ஸ்டார்’ ஆக உயர்ந்து வரும் புதிய ‘டியூட்’

 

திரைபடங்களைத் தாண்டி ரசிகர்களிடம் பெரும் பாசமும் பெருமிதமும் பெற்ற சிலரே உள்ளனர். அந்த வரிசையில், பிரதீப் ரங்கநாதன் இளைஞர்களிடம் ஒரு புரட்சி அலையை உருவாக்கியிருக்கிறார். அவரைப் பார்த்து பலர் உற்சாகமும் நம்பிக்கையும் பெறுகிறார்கள். ரசிகர்களுக்கு அவர் வெறும் ‘டியூட்’ மட்டுமல்ல, சினிமா தொழில்நுட்ப ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் ஒரு நம்பகமான பெயராக மாறிவிட்டார்.

‘லவ் டுடே’ மற்றும் ‘டிராகன்’ என இரு படங்கள் மூலமாக வசூலிலும் வெற்றியிலும் உச்சத்தைத் தொட்டிருக்கும் இயக்குநர்-நடிகர் பிரதீப், தனது மூன்றாவது படத்துக்கே பண்டிகை தின ரிலீஸ் எனும் முக்கியமான உயர்வை எளிதாகப் பெற்றிருக்கிறார் . இது பலருக்கு கனவாகவே இருந்தாலும்! மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், தீபாவளிக்கு அவரது அடுத்த படம் ‘டியூட்’ வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு, மைத்ரி மூவி மேக்கர்ஸ் அவரின் ஸ்பெஷல் லுக் ஒன்றை வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமாருடன் பணியாற்றிய அனுபவம் உள்ள நவீன் யெர்நேனி மற்றும் Y.ரவி சங்கர் ஆகியோர் இப்போது *டியூட்* படத்தை தயாரிக்கின்றனர் . “பிரதீப்பின் பிரபலத்துக்கு எல்லைகள் தாண்டி வர்த்தக வரவேற்பு இருக்கிறது. படத்தின் பூஜை நாள் முதலே வியாபாரரீதியாக வரவேற்பை பெற்றுள்ளது” என அவர்கள் கூறுகின்றனர்.

2025 தீபாவளி ரிலீஸாக இருக்கிற டியூட் ஒரு கலகலப்பான ரொமான்டிக் காமெடி படமாகும். புதிய இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கும் இப்படத்தில், மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்க, சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பல முன்னணி நடிகர்களும் இணைந்துள்ளனர். சமீபமாக இளைய நெஞ்சங்களை தன் இசையால் கொள்ளைகொண்ட இசை அமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார் ,நிகேத் பொம்மி ஒளிப்பதிவில் , தேசிய விருது பெற்ற பூர்ணிமா ராமசாமி உடை அலங்காரத்தில், பரத் விக்ரமன் எடிட் செய்ய , லதா நாயுடு தயாரிப்பு நிர்வாகத்தை கையாளுகிறார் .
Previous Post

மஹா அவதார் நரசிம்மா – விமர்சனம்

Next Post

வார் 2 டிரெய்லர்: ‘இந்த போரில் எந்த பக்கம் சேருவது என்பது எளிதாக இருக்காது’ என்ற வசனத்தோடு ரித்திக் ரோஷன் கூறுகிறார்..

Next Post

வார் 2 டிரெய்லர்: 'இந்த போரில் எந்த பக்கம் சேருவது என்பது எளிதாக இருக்காது' என்ற வசனத்தோடு ரித்திக் ரோஷன் கூறுகிறார்..

Popular News

  • ZEE5 announces first ever virtual reality based thriller series “PUBGOA”

    ZEE5 announces first ever virtual reality based thriller series “PUBGOA”

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய கிராமங்களின் ஆன்மாவை கொண்டாடும் படம் “பெத்தி” – ராம் சரண் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • காட்டாளன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பேட்மிண்டன் விளையாட்டு பின்னணியிலான தமிழ் சினிமாவின் முதல் காதல் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அறிமுக இயக்குநர் படத்தில் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த்..!!

June 2, 2026

தயாள் பத்மநாபனின் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பத்திரிகையாளர் சந்திப்பு!

June 2, 2026

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படம் “மஞ்சணத்தி” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

June 2, 2026
சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

June 2, 2026

‘பென்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவராக இணைந்திருப்பது LCU மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது!

June 2, 2026

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.