• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

போர் – விமர்சனம்

by Tamil2daynews
March 3, 2024
in விமர்சனம்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

போர் – விமர்சனம்

 

இரண்டு ஹீரோக்கள், மூன்று ஹீரோக்கள் இணைந்து பிற மொழிகளில் நடிக்கிறார்கள். ஆனால், தமிழ் சினிமாவில் இது எப்போதாவது நடக்கும் விஷயம்.  தற்சமயம்  வளரும் இளம் நடிகர்கள் காளிதாஸ் மற்றும் அர்ஜுன் தாஸ் இணைந்து நடித்துள்ள, ‘போர்’ திரைப்படம் வெளியாகி உள்ளது. பிஜோ நம்பியார் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இந்தத் திரைப்படத்தில் உள்ள சில அம்சங்களைப் பார்ப்போம்.

இந்தப் படத்தில் ஒரு கதை இல்லை. பல கதைகள் உள்ளன. இந்தக் கதைகள் ஒரு கல்லூரியில் நடக்கின்றன. சிறு வயதில் ஏற்பட்ட பாதிப்பால் பழி வாங்கக் காத்திருக்கும் நாயகன், அரசியல்வாதியின் வாரிசு செய்யும் அராஜகங்கள், கல்லூரி தேர்தல், ஜாதியம், உரிமைக்குப் போராடும் பெண் என பல கதைகள். இத்தனைக் கதைகளில் போராட்டம் நடத்தும் பெண்ணின் கதை மட்டுமே மனதில் நிற்கிறார்.
 சமூகத்தில் நடக்கும் பல்வேறு நிலைகளை இயக்குநர் சொல்ல வந்தாலும் திரைக்கதை என்ற நூலில் இந்தக் கதைகளை சரியாகக் கோர்க்கவில்லை என்றே சொல்லலாம். படத்தின் ஆரம்பத்தில் இரண்டு பெண்களின் வழியே திரைக்கதை  நகர்கிறது. இப்படியே சென்றிருந்தால் பெண்களை மையப்படுத்திய சிறந்த படமாக இது அமைந்திருக்கும். மாறாக, ஒரு யுடர்ன் அடித்து ஹீரோக்கள் மீது திரைக்கதை செல்கிறது. இது படத்திற்கு சிறிது பின்னடைவுதான்.
இரண்டு ஹீரோக்கள் படத்தில் இருந்தாலும், நடிப்பில் அதிகம் கவனம் பெறுவது பானு மற்றும் சஞ்சனா நடராஜன் என்ற இரண்டு பெண்கள்தான். போராட்டம், காதல், நட்பு என சமகால பெண்களை நடிப்பில் கொண்டு வருகிறார்கள். காளிதாஸ் ஜெயராம் கல்லூரி மாணவனாக துள்ளலாக நடித்துள்ளார். பல படங்களில் தனது ‘மைக்’ குரலுக்காகவே அறியப்பட்ட அர்ஜுன் தாஷின் குரல் இந்தப் படத்தில் ஒரு மைனஸாகவே அமைந்துவிட்டது என்று சொல்லலாம். தனது கட்டைக் குரலில் ரொமான்ஸ் செய்யும்போது காதலிக்கிறாரா அல்லது பயமுறுத்துகிறாரா என்றே நமக்குக் குழப்பம் ஏற்படுகிறது.
பின்னணி இசை: சஞ்சித்  ஹெக்டே, துருவ் விஸ்வநாத், கெளரவ் கோஹித்தி என மூன்று இசையமைப்பாளர்கள் இருந்தாலும், வெங்கட் மற்றும் சச்சிதானந்த சங்கர நாராயணனின் பின்னணி இசைதான் ஆஹா சொல்ல வைக்கிறது. எமோஷனல், ஆக் ஷன் என  பல இடங்களில் சிறப்பாக பேக் ரவுண்ட் ஸ்கோர் செய்கிறார்கள்.

இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் ஜிம்சி காலித் மற்றும் பிரிஸ்லி ஆஸ்கார் டிசோசாவின் ஒளிப்பதிவுதான்.ஒரு அட்டகாசமான லைட்டிங்  எபெக்ட்டை  ஒளிப்பதிவில் தந்துள்ளார்கள். கிளைமாக்ஸ் காட்சியின் ஒளிப்பதிவில் ‘வரேவா’ என சொல்ல வைக்கிறார்கள்.

மொத்தத்தில் இந்தப் போர் ஒரு நல்ல கதையில் வலுவான திரைக்கதை என்ற களத்தை அமைத்திருந்தால் இந்த, ‘போர்’ வாகை சூடி இருக்கும்.
Tags: Arjun DasKalidaskalidas jayaramporpor moviepor movie reviewpor movie tamil reviewsanchana natrajan
Previous Post

பத்ம விபூஷண் விருது பெற்ற மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு அமெரிக்காவில் நடைபெற்ற மிக பிரம்மாண்டமான பாராட்டு விழா

Next Post

‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்’ஸில் இடம் பிடித்த துபாய் வாழ் தமிழர்களின் 24 மணி நேர தொடர் இசை நிகழ்ச்சி

Next Post

‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்’ஸில் இடம் பிடித்த துபாய் வாழ் தமிழர்களின் 24 மணி நேர தொடர் இசை நிகழ்ச்சி

Popular News

  • ரிலீஸ்க்கு முன்பே சாதனை படைக்கும் ரஜினியின் கூலி!

    0 shares
    Share 0 Tweet 0
  • கைமேரா பட இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • ’ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ படத்தின் அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட நடிகர் பெட்ரோ பாஸ்கல்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ஆக்‌ஷன் நிறைந்த ‘கிங்டம்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஜூலை 31 அன்று வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ஆக்‌ஷன் நிறைந்த ‘கிங்டம்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஜூலை 31 அன்று வெளியாகிறது!

July 9, 2025

தருண் சுதீர் தயாரிப்பில், ராண்ணா நடிக்கும் ‘ஏழுமலை’ படத்தின் டைட்டில் டீசரை — சிவராஜ்குமார் மற்றும் ஜோகி பிரேம் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர் !!

July 9, 2025

பன் பட்டர் ஜாம் இசை வெளியீட்டு விழா

July 9, 2025

’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

July 9, 2025

’பறந்து போ’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

July 9, 2025

’ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ படத்தின் அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட நடிகர் பெட்ரோ பாஸ்கல்!

July 9, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.