மாடன் கொடை விழா – விமர்சனம்
தெய்வா புரொடக்ஷன் சார்பில் கேப்டன் சிவப்பிரகாசம் உதயசூரியன் தயாரிப்பில் இரா.தங்கப்பாண்டி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் மாடன் கொடை விழா.
பொதுவாக தமிழ் படங்களில் ஒரு சில சமயங்களில் ஒரு சில நல்ல படங்கள் வருவதுண்டு.அப்படி வந்திருக்கும் படம் தான் மாடன் கொடை விழா.
இந்தப் படத்தின் கதை என்று சொன்னால் குலதெய்வத்தை வைத்து வழிபடும் நிலத்தை தன்னுடைய தகப்பனார் வில்லனிடம் மருத்துவ சிகிச்சைக்காக அடமானம் வைக்க,அடமானம் வைத்து ஆறு மாத காலத்திற்கு மேல் ஆகிவிட்டதால் வில்லன் தனது பெயரில் எழுதி வைத்துக்கொண்டு குலதெய்வ கோவிலில் விழா எடுத்து நடத்தாமல் வழிமறிக்கிறார்.அதை வில்லனிடம் இருந்து ஹீரோ எப்படி மீட்டு குலதெய்வ கோவிலில் திருவிழா நடத்துகிறார் என்பது தான் கதை.
கதாநாயகியாக வரும் புதுப்பெண் மிக கனகச்சிதமான தேர்வு.தன் காதலனுக்காக தனக்கு பார்க்க வரும் மாப்பிள்ளைகளை நாசூகாக விரட்டி அடிப்பதும் தன் நீண்ட நாள் காதலனுக்காக காத்திருந்து தன் காதலை வெளிப்படுத்தும் விதத்திலும் அவரின் நடிப்பு சூப்பர்.
சூப்பர் குட் சுப்பிரமணி கதாநாயகனின் அப்பாவாக வந்து தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து முடித்து இருக்கிறார்.
இன்னும் ஒரு படி மேலே சொல்லப் போனால் ஒட்டுமொத்த படமுமே அவரை சுற்றியே வருகிறது அவரின் நடிப்பும் மிக அற்புதம்.
பலவேசமாக வரும் கால் ஊனமுற்றவராக நடித்திருக்கும் அவரின் நடிப்பும் நல்ல நடிப்பு அவருக்கு தமிழ் சினிமாவில் எதிர்காலம் உண்டு.
தயாரிப்பாளர் தன் பங்கிற்கு படத்திற்கு என்ன தேவையோ அதை மிக அழகாக செலவு செய்து படத்தை நிறைவு செய்து இருக்கிறார்.
இயக்குனர் முதல் படம் போல தெரியாத அளவுக்கு நிறைய படங்களை இயக்கிய இயக்குனர் போல படம் எடுத்திருக்கிறார் அவருக்கு தமிழ் சினிமாவில் தள்ள வரவேற்பு உண்டு.
திருநெல்வேலி மாவட்டங்களில் நடக்கும் குலதெய்வ கொடை விழா பற்றிய நிகழ்ச்சிகளை மற்ற மாவட்டங்களுக்கும் இப்படத்தின் மூலம் தெரியப்படுத்திய படக் குழுவினர்களுக்கு நன்றி.