விருமன் விமர்சனம்
அண்ணன் தயாரிப்பில் தம்பி கதாநாயகனாக நடித்த படம் விருமன்.
அண்ணன், தம்பி ஒற்றுமையை மையப்படுத்தி எடுத்திருப்பதுதான் இப்படத்தின் கதை.
நடிகர் கார்த்தி இரண்டாவது முறையாக முத்தையா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் விருமன் இந்த திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளது இதற்கு முன் இந்த திரைப்படத்திலிருந்து இசை வெளியீட்டு விழா நடைபெற்றது அந்த இசை வெளியீட்டு விழாவில் பல்வேறு சினிமா பிரபலங்களும் பேசினார்கள் மேலும் இந்த திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக ஷங்கரின் மகள் அறிமுகமாகியுள்ளார்.

கார்த்தி கண் முன்னே அவரது தாயார் தீயில் எரிந்து இறந்து விடுகிறார் தன்னுடைய தாயின் மரணத்திற்கு காரணம் தந்தை பிரகாஷ்ராஜ் என தன்னுடைய ஆழ்மனதில் பதிகிறது அதனால் கார்த்தி தன்னுடைய தந்தை மீது கொலை வெறியில் இருக்கிறார். அதனால் கார்த்தி தந்தையை எப்படியாவது தீர்த்து கட்ட வேண்டும் என கொலை முயற்சியும் செய்கிறார். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தன்னுடைய மருமகனின் வாழ்க்கை சீரழிந்து விடும் என எண்ணி தாய் மாமாவாக நடித்துள்ள ராஜ்கிரன் அழைத்து செல்கிறார் பிரகாஷ் ராஜை.

கார்த்தியின் நடிப்பை பற்றி நாம் கூற வேண்டிய அவசியமே கிடையாது ஏனென்றால் பருத்திவீரன் திரைப்படத்திலேயே அவரது நடிப்பை பார்த்து அனைவரும் பிரமித்தார்கள் அந்த அளவு கிராமத்தக் கதையில் நடிக்க முடியுமா என பலரும் திகைத்தார்கள். அப்படிதான் விருமன் திரைப்படத்திலும் கார்த்தி நடிப்பு அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளது ஆக்ஷன் சென்டிமென்ட் காதல் என அனைத்திலும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.

மேலும் சூரியின் நகைச்சுவை இந்த திரைப்படத்தில் கொஞ்சம் வொர்க் அவுட் ஆகி உள்ளது ஆர்கே சுரேஷ் சண்டைக்காக மட்டுமே படத்தில் வருகிறார். மேலும் மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், சிங்கம் புலி, மைனா நந்தினி என அனைவரும் தங்களுக்கு கொடுத்த சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள். ஒட்டுமொத்த நடிகர்களின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்தாலும் திரை திரைக்கதையில் கொஞ்சம் முத்தையா சொதப்பி உள்ளார் என்று கூற வேண்டும்.