• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில், இயக்குநர் பாண்டியன் ஆதிமூலம் இயக்கத்தில் இசையமைப்பாளர் வித்யாசாகர் மகன் ஹர்ஷ வர்தன் U அறிமுகமாகும் புதிய திரைப்படம் !

by Tamil2daynews
February 15, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
Will Sibi Sathyaraj Ever Make It Out Of His Father's Shadow? - Varnam MY
நடிகர் சிபி சத்யராஜ், தனது திரைப்பயணத்தில் தனித்தன்மை மிக்க, சிறந்த  உள்ளடக்கம் சார்ந்த திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து  நடிப்பதன் மூலம், தொடர்ந்து சிறந்த வெற்றிப்படங்களை வழங்கி, வர்த்தக வட்டாரங்களில் மிக நம்பிக்கையான நாயகனாக வலம் வருகிறார். இந்த அம்சங்கள் பொது பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடையே திரைப்படங்களின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. அவரது அடுத்தடுத்த திரைப்பட வரிசைகள் மிகவும் நம்பிக்கைக்குரியதாக ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதோ தற்போது இன்னும் ஆர்வத்தை தூண்டும் வகையில், அவரது புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வந்துள்ளது. இது நடிகர்  சிபி சத்யராஜின் 20வது படம். இப்படத்தை Big Print Pictures சார்பில்  IB கார்த்திகேயன் தயாரிக்க, அறிமுக இயக்குனர் பாண்டியன் ஆதிமூலம் இயக்குகிறார். , இது மொழி எல்லைகளை கடந்து உலகளாவிய ரசிகர்களை ஈர்க்கும் வகையிலான கதைக்கருவுடன்  இப்படம் உருவாகிறது. இத்திரைப்படம் முதல் பாதியில் குடும்ப உணர்வுகளை பேசும்படியும், அதைத் தொடர்ந்து இரண்டாவது பாதியில் கதாநாயகனுக்கும் எதிரிக்கும் இடையே ஆடு புலி ஆட்டமாக பரபரப்பான ஆக்சன் அதிரடி திரில்லர் கதையாக அமைக்கப்பட்டுள்ளது. பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷ வர்தன்  U இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாவது, இந்தப் படத்தின் மீது  பெரும் ஈர்ப்பையும் ஆர்வத்தையும் தூண்டுவதாக அமைந்துள்ளது.
படம் குறித்து இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன்  U  கூறியதாவது..,
நான் கடந்த 5 வருடங்களாக தென்னிந்தியத்  இசைத்துறையில் பணியாற்றி வருகிறேன். வித்யாசாகர் சார், ஏ.ஆர்.ரஹ்மான் சார், ஜி.வி.பிரகாஷ், தமன் சார் மற்றும் பலருக்கு கீபோர்டு புரோகிராமராக இருந்திருக்கிறேன். இசையமைப்பாளராக இது எனது முதல் படம் என்பதில், நான் மிக  உற்சாகமாக இருக்கிறேன். இப்படத்தின் திரைக்கதையை கேட்டபோது, பின்னணி இசைக்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்தேன், அது இப்படத்தை ஒரு சிறந்த படைப்பாக  கொண்டு வர வேண்டும் என்ற ஆர்வத்தை என்னுள் ஏற்படுத்தியது. இப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம். நான் முன்பே இந்த வகைத் திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளேன், ஆனால் மற்ற இசையமைப்பாளர்களின் கீழ் தான் நான் பணியாற்றியிருக்கிறேன், இப்போது தான்  முதல்முறையாக இசையமைக்கும் வாய்ப்பு  எனக்கு  கிடைத்துள்ளது. படத்தில் ஒன்றிரண்டு பாடல்கள் உள்ளன, விரைவில் அதற்கான ரெக்கார்டிங் பணிகள் விரைவில் துவங்கவுள்ளது. இந்த திரைப்படத்தில் பணியாற்றும்  வாய்ப்பை தந்த தயாரிப்பாளர்  IB கார்த்திகேயன் சார் மற்றும் இயக்குனர் பாண்டியன் ஆதிமூலம் ஆகியோருக்கு நன்றி.
இந்தப் படத்திற்கு பிரவீன் குமார் (ஜிவி, கிளாப் மற்றும் ஹாஸ்டல் படப்புகழ்) ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் பணியாற்ற முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது, விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.அறிமுக இயக்குநரான பாண்டியன் ஆதிமூலம், எஃப்எம், டிவி ரியாலிட்டி ஷோக்கள், டிவி தொடர்கள் மற்றும் திரைப்படத் துறையில் என கடந்த   பத்தாண்டுகளாக ஊடக உலகில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது, விரைவில் தொடங்கப்படும் ஓடிடி  தொடர் ஒன்றுக்கு வசனங்களையும் திரைக்கதையையும்  எழுதியுள்ளார்.


Previous Post

‘நிக்குமா நிக்காதா?’ குறும்படம் வெளியீடு

Next Post

விசில் மஹாலக்‌ஷ்மியாக கலக்கும், நடிகை கீர்த்தி ஷெட்டி !

Next Post

விசில் மஹாலக்‌ஷ்மியாக கலக்கும், நடிகை கீர்த்தி ஷெட்டி !

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • கள்ள நோட்டு படத்திற்காக சிகரெட் பிடிக்கப் பழகிக் கொண்ட நடிகை சுமதி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

August 15, 2026

தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

August 15, 2026

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மேரிகோல்ட்’

August 15, 2026

’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 15, 2026

விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் ‘தர்மன்’.

August 15, 2026

மகுடம் – விமர்சனம்

August 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.