• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கலையரசன் – சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், கெளரி கிஷன், அம்மு அபிராமி, ஜனனி ஐயர் நடிக்கும் ஹாட்ஸ்பாட்..திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு.

by Tamil2daynews
February 17, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கலையரசன் – சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், கெளரி கிஷன், அம்மு அபிராமி, ஜனனி ஐயர் நடிக்கும் ஹாட்ஸ்பாட்..திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு.

 

கே ஜே பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து “ஹாட் ஸ்பாட்” என்ற புதிய படம் தயாரிக்கிறார்கள். மை சிக்ஸர் எண்டெர்டைன்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் தினேஷ் அவர்கள் வெளியீடுகிறார்..

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திட்டம் இரண்டு மற்றும்  ஜிவி பிரகாஷ் குமார் நடித்த அடியே ஆகிய வித்தியாசமான வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் அடுத்த படம் “ஹாட் ஸ்பாட்”  இப்படத்தின்  கதை,  திரைக்கதை,  வசனம் எழுதி இயக்குகிறார். வரும் மார்ச் மாதம் இப்படம்  திரைக்கு வர உள்ளது.

சதீஷ் ரகுநாதன்-  வான் ஆகியோர் இசையமைக்கிறார்கள். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார் முத்தையன் எடிட்டிங் பணியை மேற்கொண்டு இருக்கிறார்.

இதில் கலையரசன் கதாநாயகனாக ஆட்டோ ஓட்டுநராக  மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 96 மற்றும் அடியே பட கதாநாயகி கௌரி கிஷன் இளம் மனைவியாக  வேடம் ஏற்றிருந்தார். அவரது கதாபாத்திரம்  ஆண்கள் மனதில் ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தும்.

மேலும் சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர் , திட்டம் இரண்டு பட ஹீரோ சுபாஷ் சோபியா முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

“ஹாட் ஸ்பாட்” படம் பற்றி இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் கூறும் போது,”

சமுதாயத்தில் அன்றாடம் நம் கண் முன்பே நடக்கும் சில அடிப்படை விஷயங்களை தட்டிக் கேட்க தைரியம் இல்லாமல் அதை கவனிக்காமல் செல்கிறோம். ஆனால் இது சமுதாயத்தில்  பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதன் பின்விளைவுகள் நம்மை பாதிக்கும் போது தான் இப்படி ஒரு சம்பவம் நடந்ததா என்று நாம் யோசிப்போம்.அப்படிப்பட்ட  முக்கிய விஷயங்களை அலசும் கதையாக ஹாட் ஸ்பாட் படம் இருக்கும்.  திரைக்கு வந்த பிறகு இப்படம்  சமுதாயத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால் இது மக்களை மற்றும் மக்களை சுற்றி நடக்கும் அரசியலை குறித்து விவாதிக்கும் கதை. இளைஞர்கள் முதியவர்கள் மற்றும் அனைத்து சமூகத்தினர் மனங்களில் இப்படம் விழிப்புணர்வையும்,  தட்டி கேட்க வேண்டும் என்ற துணிச்சலையும் தரும்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும்  சென்னையில் நடந்து முடிந்துள்ளது. அடுத்த மாதம் படம் திரைக்கு வருகிறது.

முன்னதாக இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுவே இப்படம் சமுதாயத்தில் என்ன விஷயத்தை பேசப் போகிறது என்ற ஆர்வத்தையும் அதிகரித்து இருக்கிறது.

இவ்வாறு இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் கூறினார்.
Previous Post

(Celebrity Cricket League) சிசிஎல் சென்னை ரைனோஸ் அணியினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Next Post

அசோக் செல்வன் நடிப்பில், புதிய தமிழ் சூப்பர்ஹிட் திரைப்படமான “சபா நாயகன்”, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகிவருகிறது !!

Next Post

அசோக் செல்வன் நடிப்பில், புதிய தமிழ் சூப்பர்ஹிட் திரைப்படமான “சபா நாயகன்”, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகிவருகிறது !!

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • மாடலிங் துறையில் பிரபலமான தமிழ்வாணன் முதல் முறையாக கதாநாயகனாக நடிக்கும் புரொடக்ஷன் நம்பர் -1 படத்தின் பூஜை.

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரபலங்கள் வெளியிட்ட தீ – இவன் இசை இன்று முதல்.

    0 shares
    Share 0 Tweet 0
  • படை தலைவன் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • கேப்டன் விஜயகாந்த் வழியில் சின்ன கேப்டன் சண்முகபாண்டியன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2025

பாக்யராஜ் நடிக்கும் “ஆனந்த வாழ்க்கை”.

June 16, 2025

அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் நடிக்கும்’அஃகேனம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2025

கேப்டன் விஜயகாந்த் வழியில் சின்ன கேப்டன் சண்முகபாண்டியன்

June 16, 2025

படை தலைவன் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

June 16, 2025

அதர்வா நடிக்கும் ‘டி என் ஏ’ ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 14, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.