• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கோலிவுட்டின் அழகான அம்மாவாக வலம் வருகிறார் – நடிகை ஆஷா சரத் !

by Tamil2daynews
January 10, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

Complaint filed against Asha Sharath, apropos recent promo video of 'Evidey' | Malayalam Movie News - Times of India

நடிகை ஆஷா ஷரத் தனது நடிப்புதிறமை மூலம் தான் ஒரு சிறந்த நடிகை என நிரூபித்துள்ளார், வெகு இயல்பான நடிப்பு என்பது, அவரது பலமாக மாறியுள்ளது. வெகு சில நடிகைகளே அம்மா கதாப்பாத்திரங்களில் சிறந்து விளங்கியும் அதே நேரம் பிரபலமாகவும் மாறியுள்ளார்கள். இதற்கு சமகால எடுத்துக்காட்டாக ஆஷா ஷரத் விளங்குகிறார். தாய்மை எப்போதும் கம்பீரத்தையும், உணரச்சி பிரவாகங்களையும் உள்ளடக்கியது, இதை ஒரு நடிகை செய்வதென்பது சுலபமான காரியம் அல்ல. இருப்பினும், இந்த குணங்களை இயல்பிலேயே பெற்றவராக ஆஷா ஷரத் பாராட்டப்படுகிறார். அதற்கு ஒரு உதாரணமாக Disney Plus Hotstar தளத்தில், ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகியுள்ள ‘அன்பறிவு’ திரைப்படத்தில்,அம்மா பாத்திரத்தில் அவரது அருமையான நடிப்பிற்காக, ஆஷா சரத்  இப்போது பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறார்.

இது குறித்து கூறிய நடிகை ஆஷா ஷரத்…
தமிழ்த் துறையில் எனது நடிப்புக்கு கிடைத்து வரும்  அங்கீகாரத்தைப் காண மிகுந்த  மகிழ்ச்சி அளிக்கிறது. த்ரிஷ்யம் படத்தொடர்  எனது கேரியரில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது, இயக்குனர் ஜீத்து ஜோசப் எனக்கு அற்புதமானதொரு பாத்திரத்தை வழங்கினார், அந்த கதாபாத்திரம் ஒரு வலுவான போலீஸாகவும், அதே நேரம் மனதளவில் உடைந்து போன  தாயாக, குழப்பமான மனநிலையை பிரதிபலிக்கும் பாத்திரமாகவும் இருந்தது. அதில் எனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதன்  தமிழ் ரீமேக் மூலம் கமல்ஹாசன் போன்ற சிறந்த நடிகருடன் திரையுலகில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனது நடிப்பை விமர்சகர்கள் மற்றும் பொது பார்வையாளர்கள் பாராட்டிய விதம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்போது, அன்பறிவு படத்தில் எனது கதாப்பாத்திரத்திற்கு சிறப்பான வரவேற்பும், நேர்மறையான விமர்சனங்களும் கிடைத்து வருவது என்னை உணர்ச்சி பெருக்கில் ஆழ்த்தியுள்ளது என்கிறார்.

இவரது நடிப்பில்  சமீபத்திய வெளியீடான அன்பறிவு படத்தில் அம்மாவாக அவரது நடிப்பு, பாந்தமான பார்வை, அற்புதமான உடல்மொழியுடன்,  அனைவரையும் கவருவதாக இருந்தது. இந்த மாயாஜால நடிப்பு திறமையின் ரகசியத்தை அறிய தமிழ் உலகில் அனைவரும் ஆர்வமாக உள்ளனர். இது குறித்து கூறுகையில்…
அடிப்படையில் நான் பரதநாட்டிய நடனக் கலைஞர், கேரளாவில் நடக்கும் அனைத்து சர்வதேச விழாக்களிலும் நான் பங்கேற்று நடனமாடியுள்ளேன். என் நடனத்திறமை குறிப்பிடத்தக்க வகையில், நடிப்பின் நுணுக்கங்களை வெளிப்படுத்தவும், நடிகையாக எனது வாழ்க்கையை வடிவமைப்பதிலும், எனக்கு பேருதவியாக இருந்துள்ளது.தமிழ் சினிமா எப்போதுமே திறமையான நடிகர்களுக்கு உரிய அங்கீகாரம் தரும் மையமாக உள்ளது. இது மற்ற மாநில திரைத்துறை நடிகர்களை தொடர்ந்து அடையாளம் கண்டு, அவர்களுக்கு ஒரு அழகான பாத்திரத்தை அளித்து, அவர்களை அபிமான நடிகர்களாக மாற்றி வருகிறது. இங்குள்ள அனைவரின் அன்பையும் பாராட்டையும் நான் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என்று கூறும் ஆஷா ஷரத் தற்போது தமிழ்திரைத்துறையில் பெரும் நட்சத்திரங்களின் படங்கள் பலவற்றில்  நடிக்க  ஒப்பந்தமாகியுள்ளார்.

Previous Post

விவேக் & மெர்வின் – மாயாஜால இசையில் “என்ன சொல்ல போகிறாய்” !

Next Post

இதுவரை எந்த ஜானரிலும் வராத கதை இது… ‘கார்பன்’ இயக்குனர் சீனுவாசன்.

Next Post

இதுவரை எந்த ஜானரிலும் வராத கதை இது… 'கார்பன்' இயக்குனர் சீனுவாசன்.

Popular News

  • மீண்டும் இணைந்த “பிளாக்” வெற்றிப்படக்கூட்டணி, “ஜீவா 46” கோலாகலத் துவக்கம்!!

    0 shares
    Share 0 Tweet 0
  • திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜென்ம நட்சத்திரம்’ வெளியீட்டுக்கு முன்பே ஹிட்! ஊடக விமர்சனங்களும் முன்னோட்டக் காட்சிகளும் வரவேற்பை பெற்றுள்ளன!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்க , Passion ஸ்டூடியோஸ், ஜி ஸ்க்வாட், தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் யூட்யூப் சென்சேஷனல் ஐகான்கள் பாரத் & நிரஞ்சனின் “Mr. பாரத்” படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • பான் இந்தியா படமாக இருந்தால், தளபதி விஜயை முதல்வராக அல்லாமல் பிரதமராகவே காட்டியிருப்பேன் – ‘யாதும் அறியான்’ இயக்குநர் அதிரடி பேச்சு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சட்டமும் நீதியும் – விமர்சனம்

July 19, 2025
திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

July 19, 2025

கெவி – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 19, 2025

ஜென்ம நட்சத்திரம் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

July 19, 2025

நடிகர் உன்னி முகுந்தனின் UMF மற்றும் ஐன்ஸ்டீன் மீடியாவுடன் இணைந்து லெஜெண்ட்ரி இயக்குநர் ஜோஷி இயக்கும் அடுத்த பட அறிவிப்பு அவரது பிறந்தநாளன்று வெளியாகியுள்ளது!

July 19, 2025

திரையிலும், நிஜ வாழ்க்கையிலும் முத்திரை பதித்துவரும் நடிகை பவ்யா த்ரிகா

July 19, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.