• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர், சேவியர் பிரிட்டோ வழங்கும் இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கத்தில், ஆகாஷ் முரளி நடிக்கும் ‘நேசிப்பாயா’- லவ் மீ, லவ் மீ நாட்!

by Tamil2daynews
June 26, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர், சேவியர் பிரிட்டோ வழங்கும் இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கத்தில், ஆகாஷ் முரளி நடிக்கும் ‘நேசிப்பாயா’- லவ் மீ, லவ் மீ நாட்!

 

அஜித்குமார், பவன் கல்யாண் மற்றும் பல முன்னணி நடிகர்களுக்கு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை உருவாக்கி ‘ஸ்டார் டைரக்டர்’ என்ற அந்தஸ்தைப் பெற்றவர் இயக்குநர் விஷ்ணு வர்தன். அவர் தனது பாலிவுட் பயணத்தைத் ‘ஷெர்ஷா’ படத்தில் இருந்து தொடங்கினார். அது பாலிவுட்டில் மிகப்பெரிய ஹிட் என்பதை மறுக்க முடியாது. சல்மான் கானுடனான அவரது அடுத்த பெரிய படம் விரைவில் தொடங்க உள்ள நிலையில், மறைந்த நடிகர் முரளியின் மகன் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மை கதாபத்திரங்களில் நடித்துள்ள ’நேசிப்பாயா’ என்ற அழகான அட்வென்ச்சர் காதல் கதையின் மூலம் தமிழ் திரையுலகிற்கு மீண்டும் வருகிறார்.

விஷ்ணு வர்தன் நாடு முழுவதும் உள்ள முன்னணி நட்சத்திரங்களுடன் தொடர்ந்து பணியாற்றி வரும் நிலையில், அறிமுக நடிகரான ஆகாஷ் முரளியுடன் அவர் புதிய படத்தில் இணைந்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதுபற்றி அவர் பகிர்ந்திருப்பதாவது, “நான் அவருக்குள்ளிருக்கும் ‘ஸ்டார்’ரைப் பார்க்கிறேன்.  ஆகாஷ் ஒரு திறமையான கலைஞர். மேலும் அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் தனது நடிப்புத் திறனை மெருகேற்ற நிறைய தயார் செய்துள்ளார். அவரது நடிப்பை திரையில் பார்க்கும் பார்வையாளர்கள் எனது வார்த்தைகளை ஏற்றுக் கொள்வார்கள். இந்த படம் ஒரு அழகான சாகச காதல் கதையாக இருக்கும். இது காதலில் உள்ளவர்கள், காதலித்தவர்கள் மற்றும் காதலிக்கப் போகிறவர்கள் அனைவரையும் ஈர்க்கும் பல தருணங்களைக் கொண்டதாக இருக்கும்” என்றார்.

எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ கூறுகையில், “நாட்டின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவரான விஷ்ணு வர்தனுடன் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. விஷ்ணு வர்தன் தனது ஹீரோக்களை எப்போதும் அழகாக திரையில் காண்பிப்பார். இந்தப் படம் ஆகாஷ் முரளிக்கு ஒரு அழகான அறிமுகமாக இருக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் மாதங்களில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

’நேசிப்பாயா’ படத்தை விஷ்ணு வர்தன் இயக்கியுள்ளார் மற்றும் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். சினேகா பிரிட்டோ இணை தயாரிப்பாளராக உள்ளார். யுவன் சங்கர் ராஜா (இசை). விஷ்ணு வர்தன் மற்றும் நீலன் சேகர் ஆகியோர் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர். தொழில்நுட்பக் குழுவில் கேமரூன் எரிக் பிரைசன் (ஒளிப்பதிவு), ஓம் பிரகாஷ் (கூடுதல் ஒளிப்பதிவு), ஏ. ஸ்ரீகர் பிரசாத் (எடிட்டர்), சரவணன் வசந்த் (தயாரிப்பு வடிவமைப்பாளர்), பா. விஜய்-ஆதேஷ் கிருஷ்ணா (பாடல் வரிகள்), ஃபெடரிகோ கியூவா (ஸ்டன்ட்), தினேஷ் (நடன அமைப்பு), தபஸ் நாயக் (ஒலி வடிவமைப்பாளர்), அனு வர்தன் (ஆடை வடிவமைப்பாளர்), சுரேஷ் சந்திரா (மக்கள் தொடர்பு),  & வி. சிற்றரசு (ஸ்டில்ஸ்), நீல் ராய் (பப்ளிசிட்டி டிசைனர்), & முத்து ராமலிங்கம், அவினாஷ் விஸ்வநாதன் (நிர்வாகி தயாரிப்பாளர்கள்).

Previous Post

தளபதி விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்திற்காக மறைந்த பாடகி பவதாரிணியின் குரலுக்கு செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் உயிரூட்டியுள்ள கிருஷ்ண சேத்தனின் ‘டைம்லெஸ் வாய்சஸ்’ ஸ்டார்ட் அப் நிறுவனம்

Next Post

ACKO நிறுவனம் ‘ACKO போல வருமா’ விளம்பர பிரச்சாரத்துடன் சென்னையில் லோக்கலாக களமிறங்கியுள்ளது !!

Next Post

ACKO நிறுவனம் ‘ACKO போல வருமா’ விளம்பர பிரச்சாரத்துடன் சென்னையில் லோக்கலாக களமிறங்கியுள்ளது !!

Popular News

  • அபிஷேக் நாமாவின் ‘நாகபந்தம்- (Nagabhandham) ‘ திரைப்படம் ஜூலை 3ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது

    அபிஷேக் நாமாவின் ‘நாகபந்தம்- (Nagabhandham) ‘ திரைப்படம் ஜூலை 3ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பிரேர்ணா அரோராவின் அடுத்த பான் இந்தியா திரைப்படம் அக்டோபரில் தொடங்குகிறது… கதாநாயகனாக கிரண் அப்பாவரம் நடிக்க, இயக்குநராக ஸ்ரீகாந்த் புப்பாலா அறிமுகமாகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கான் சிட்டி’ திரைப்பட டிரெய்லர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • “டாக்ஸிக்” திரைப்படம் உலகளவில் ஆகஸ்ட் 26, 2026 வெளியாகிறது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

June 25, 2026

இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்

June 25, 2026

’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

June 25, 2026

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

June 25, 2026

குறுகிய நாட்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்த விஷாலின் ‘மகுடம்’ படத்தின் லிங்கா பாடல்! – உற்சாகத்தில் ராப் பாடகர் வினோத் (V7h)

June 25, 2026

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

June 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.