• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“ஸ்ரீவள்ளி”பாடலின் உண்மை நாயகன் தேவிஸ்ரீபிரசாத்..!

by Tamil2daynews
February 17, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
Srivalli Full Lyrical Song | Pushpa Songs | Allu Arjun, Rashmika | Sid Sriram, DSP | Sukumar - YouTubeஇந்தியாவெங்கும் டிரெண்டிங் ஆகியுள்ள சார்ட்பஸ்டர் ஹிட் பாடலான ‘ஶ்ரீவல்லி’ பாடலின் பின்னால் இருக்கும் உண்மையான நாயகன் – இந்திய திரையுலகின்  பன்முக நாயகன், மியூசிகல்  ராக்ஸ்டார், இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் ! இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், ஒவ்வொரு ஆல்பத்திலும், கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் தவற விடாமல்   சார்ட்பஸ்டர் ட்யூன்களைத் தொடர்ந்து தருவதில் வல்லவர் என்பது அனைவரும் அறிந்ததே. தேவி ஸ்ரீ பிரசாத் எனும் ராக்ஸ்டார் டிஎஸ்பியின் சமீபத்திய ஆல்பமான ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின்  ஸ்ரீவல்லி, ஓ போலேகா யா ஓ ஓ ஓ போலேகா மற்றும் சாமி சாமி ஆகிய பாடல்கள் இந்திய திரை இசை உலகையே  பெரும் சலசலப்புக்கு உள்ளாக்கியது, சமூக வலை தளங்களில் இப்பாடல்கள்  மில்லியன் கணக்கான ரீல்கள், பார்வைகள் மற்றும் விருப்பங்களை கடந்து சாதனைகள் படைத்து வருகிறது.I'm not comfortable with Bollywood: DSP- Cinema express
தேவி ஶ்ரீ பிரசாத்தின் தொடர்ச்சியான வெற்றிகரமான ஆல்பங்கள், டி எஸ் பி எனும் பிராண்டாக  அவருக்கென ஒரு தனித்த இடத்தை  இந்திய அளவில் உருவாக்கியுள்ளது. இந்நிலையில்  ‘புஷ்பா – தி ரைஸ்’ படத்தின் வெற்றிகரமான  சார்ட்பஸ்டர் பாடல்கள், இந்திய இசை அரங்கில் மறுக்கமுடியாத வகையில் வெளியான ஒவ்வொரு மொழியிலும்  புதிய  வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த ஆல்பத்தின் வெற்றியானது இசை தளங்களில் மட்டும் நின்றுவிடாமல், சமூக ஊடக ரீல்களின் விருப்பமிகு தேர்வாகவும்  மாறியுள்ளது, அங்கு ரசிகர்கள் அதிக உற்சாகத்துடன் இந்த  ஆல்பத்தை கொண்டாடி வருகின்றனர்.
DSP in Kannada, only for Sudeep | Kannada Movie News - Times of Indiaஇது குறித்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கூறுகையில்.., 
“புஷ்பா – தி ரைஸ் என் இசை பயணத்தில் மறக்க முடியாத படமாக அமைந்தது. இந்தத் திரைப்படத்தில் இசையில்  எனது புதிய அணுகுமுறையை நம்பியதற்காக சுகுமார் சார், ஐகான்ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் மைத்ரி மூவிஸ் நிறுவனத்திற்கு நன்றி. பின்னணிப் பாடகர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் நடிகர்களின் மாயாஜால திரை ஆளுமை எல்லாம் தான் இந்த  வெற்றிக்கு ஆதாரமாக அமைந்தது. எனது இசைக்காக  அன்பையும் ஆசீர்வாதத்தையும் என் மீது பொழிந்ததற்காக எனது ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றி, எனது வாழ்க்கை முழுவதும் உங்களிடமிருந்து இதே அளவு ஆதரவைப் பெறுவேன் என்று நம்புகிறேன் என்றார்.
தற்போது தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு பாலிவுட்டில் உள்ள பல  முன்னணி தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து  எண்ணற்ற வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.  டிஎஸ்பி ஏற்கனவே தமிழ், தெலுங்கு, பாலிவுட் மற்றும் சில தனி ஆல்பம் சிங்கிள்களில் மிகவும் பிஸியாக இயங்கிகொண்டிருக்கிறார்.
Previous Post

விரைவில் வெளியாகவிருக்கும் ‘ஆதார்

Next Post

TCC தயாரிக்கும் முதல் திரைப்படம்..!

Next Post

TCC தயாரிக்கும் முதல் திரைப்படம்..!

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • கள்ள நோட்டு படத்திற்காக சிகரெட் பிடிக்கப் பழகிக் கொண்ட நடிகை சுமதி!

    0 shares
    Share 0 Tweet 0
  • வானம் இலக்கிய விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது எழுத்தாளர் ராஜ் கவுதமனுக்கு நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வழங்கப்பட்டது.

    0 shares
    Share 0 Tweet 0
  • அஜித்தின் வலிமையை பார்த்து ரசித்த மலேசிய அமைச்சர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குனர் அவதாரம் எடுத்த பிருந்தா மாஸ்டர்..!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

August 15, 2026

தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

August 15, 2026

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மேரிகோல்ட்’

August 15, 2026

’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 15, 2026

விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் ‘தர்மன்’.

August 15, 2026

மகுடம் – விமர்சனம்

August 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.