• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் ( Million Dollar Studios ) & வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ( VELS Film International ) இணைந்து தயாரிக்க, அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது !!

by Tamil2daynews
August 23, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் ( Million Dollar Studios ) &  வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ( VELS Film International ) இணைந்து தயாரிக்க, அசோக் செல்வன், நிமிஷா சஜயன்  நடிக்கும் புதிய படம்  பூஜையுடன் படப்பிடிப்பு  துவங்கியது !!

 

அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்கும் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினருடன், திரைபிரபலங்கள் நடிகர் சசிக்குமார், இயக்குநர் இரா சரவணன் ஆகியோர் கலந்துகொள்ள, மிகச் சிறப்பான முறையில் பூஜையுடன், இன்று துவக்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களில், தொடர்ந்து பிளாக்பஸ்டர் படங்களை வழங்கி வருகிறது மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் (Million Dollar Studios) . குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக்  வெற்றியைத் தொடர்ந்து, மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் ( Million Dollar Studios ) நிறுவனத்தின் 6 வது படைப்பாக இப்படம் உருவாகிறது.
தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களைத் தந்து, முன்னணியில் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும்  வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ( VELS Film International ) நிறுவனம் தற்போது பிரம்மாண்ட பொருட்செலவில் நடிகர் தனுஷ் நடிப்பில், போர் தொழில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில்  “D54” மற்றும் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் “மூக்குத்தி அம்மன் 2” படங்களைத் தயாரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து, அசோக் செல்வன் நடிக்கும் இந்த புதிய படத்தினை,  மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் ( Million Dollar Studios ) நிறுவன தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் & வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ( VELS Film International ) சார்பில் தயாரிப்பாளர்  ஐசரி K கணேஷ் இணைந்து தயாரிக்கிறார்கள்.

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் கலக்கி வரும் நடிகர் அசோக் செல்வன் இப்படத்திலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் கலக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை நிமிஷா சஜயன் நடிக்கிறார்.
மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் ( Million Dollar Studios ) தயாரிப்பில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “ஹேப்பி எண்டிங், ஒன்ஸ்மோர்”  படங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் இன்று துவங்கி, ஒரே கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக,  அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இப்படத்தை இயக்குகிறார். இசையமைப்பாளர் திபு நினன்  தாமஸ் இசையமைக்கிறார். புஷ்ப ராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பரத் விக்ரமன் எடிட்டிங் பணிகளை கையாளுகிறார்.

இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Previous Post

2025 ஆண்டின் சிறந்த ஸ்டண்ட் இயக்குநர் விருது வென்றார் ஸ்டண்ட் சில்வா

Next Post

‘கோட்’, ‘லவ் டுடே’, ‘டிராகன்’ மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் புதிய படம் ‘ஏஜிஎஸ் 28’

Next Post

'கோட்', 'லவ் டுடே', 'டிராகன்' மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் புதிய படம் 'ஏஜிஎஸ் 28'

Popular News

  • மக்கள் தலைவா – விமர்சனம்

    மக்கள் தலைவா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்யஜோதி பிலிம்ஸ் – சீயான் 63 அடுத்த கட்டத்திற்கு நகர்வு! தொடங்கியது படப்பிடிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்து கொண்டார் தயாரிப்பாளர் தீபன் பூபதி; மணமகள் நிவேதிதா கிரி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.