• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஐஐடி பாம்பே டெக்ஃபெஸ்ட் நிகழ்வில் ‘டிரான்:ஏரஸ்’ திரைப்படத்தை வியந்த வருங்கால தொழில்நுட்ப வல்லுநர்கள்!

by Tamil2daynews
October 11, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஐஐடி பாம்பே டெக்ஃபெஸ்ட் நிகழ்வில் ‘டிரான்:ஏரஸ்’ திரைப்படத்தை வியந்த வருங்கால தொழில்நுட்ப வல்லுநர்கள்!

 

செயற்கை தொழில்நுட்பம் வெறும் கருவியாக மட்டும் இல்லாமல் அதற்கும் மேற்பட்டதாக எப்படி இனி மாற இருக்கிறது என்பதை ’டிரான்: ஏரஸ்’ திரைப்படம் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது. தொழில்நுட்பம் என்பது நமக்கு அறிமுகம் இல்லாதவரை நமக்கு அது எந்த பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை என்பதை இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்த இருக்கும் ஐஐடி மாணவர்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர். டிஸ்னியின் ’டிரான்: ஏரஸ்’ திரைப்படம் ஐஐடி பாம்பே மாணவர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்துள்ளது.

படத்திலிருந்து உத்வேகம் பெற்று, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஐஐடி மாணவர்கள் மேம்பட்ட தொழில்நுட்பம், கற்பனை மற்றும் கேமிங் கலாச்சாரத்தைக் கொண்டாடும் நிகழ்வை உருவாக்கினர். அற்புதமான ஹை எனர்ஜி LED நடன நிகழ்ச்சியும் அங்கு நடந்த லேசர் நிகழ்ச்சியும் கண்ணைக் கவரும் விதமாக அமைந்தது. ஆனால், தொழில்நுட்பம் ஆட்சி செய்யும் உலகமான ’டிரான்: ஏரஸ்’ திரைப்படத்தின் டிரெய்லர்  தான் மாணவர்களை மிகவும் உற்சாகப்படுத்தியது. முன்னாள் ஐஐடி மாணவர்கள் மற்றும் முன்னோடி தொழில்முனைவோர் அஷ்னீர் குரோவருடன் இணைந்து செயற்கை தொழில்நுட்பத்தின் நன்மை, தீமை குறித்து உற்சாகமாக கலந்துரையாடினார்கள்.
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நிறைந்த அரங்கில் சினிமா, செயற்கை தொழில்நுட்பம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் பற்றிய தீவிர உரையாடல் அங்கு நிகழ்ந்தது. டிரானின் தொலைநோக்கு பார்வை கொண்ட உலகம் தற்போதைய தொழில்நுட்பம் மற்றும் எதிர்கால வளர்ச்சி பற்றிய சாத்தியக்கூறுகளையும் ஆராய்கிறது.

இதுகுறித்து ஐஐடி பாம்பே டெக்ஃபெஸ்ட் நிகழ்வின் மேலாளர் மயங் முட்கல் பகிர்ந்து கொண்டதாவது, “ஐஐடி பாம்பேயின் டெக்ஃபெஸ்டில் உள்ள நாங்கள் டிரான்: ஏரெஸுடன் இணைவதில் உற்சாகமாக இருக்கிறோம். டிரான் யுனிவர்ஸ் எப்போதும் தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் படைப்பாளர்களை தைரியமான, எதிர்கால உலகங்களை கற்பனை செய்ய ஊக்குவித்துள்ளது. இந்த பார்ட்னர்ஷிப் மூலம், புதிய கண்டுபிடிப்புகளை கொண்டுவர படைப்பாற்றல் உணர்வை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்கிறோம்” என்றார்.
ஹாலிவுட் அறிவியல் புனைக்கதையான இந்தத் திரைப்படம் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற தொழில்நுட்ப விழாவை சந்திக்கும் தனித்துவமான தருணத்தைக் குறிக்கிறது. இங்கு கதைசொல்லல், புதுமை மற்றும் ஆழமான அனுபவங்கள் அதிகம் பகிரப்பட்டது. இந்த வாரம் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் பார்வையாளர்கள் ’டிரான்: ஏரஸ்’ திரைப்படத்தைப் பார்த்து மகிழலாம்.

ஜாரெட் லெட்டோ, கிரேட்டா லீ, இவான் பீட்டர்ஸ், ஹசன் மின்ஹாஜ், ஜோடி டர்னர்-ஸ்மித் மற்றும் ஜெஃப் பிரிட்ஜஸ் ஆகியோர் நடித்துள்ள ’டிரான்:ஏரஸ்’ திரைப்படம் அக்டோபர் 10, 2025 அன்று இந்திய திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Previous Post

இறுதி முயற்சி – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

Next Post

மருதம் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

Next Post

மருதம் - விமர்சனம் ரேட்டிங் - 4 / 5

Popular News

  • ரசிகர்களுக்கு சிறந்த திரையனுபவத்தைத் தரும் திரைப்படம் ‘சிக்னல் அட் 11.30′” – இசையமைப்பாளர் டி. இமான்!

    0 shares
    Share 0 Tweet 0
  • மெடிக்கல் கிரைம் திரில்லர் ‘நிறம்’ நவம்பர் 27 முதல் திரையரங்குகளில்!

    0 shares
    Share 0 Tweet 0
  • கல்விக்காகத் தனது சொத்தில் பாதியை எழுதி வைத்த வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், பிரேம் குமார் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் நடிக்கும் படத்திற்கு ‘அசரீரி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மெடிக்கல் கிரைம் திரில்லர் ‘நிறம்’ நவம்பர் 27 முதல் திரையரங்குகளில்!

November 26, 2026

கல்விக்காகத் தனது சொத்தில் பாதியை எழுதி வைத்த வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!

November 26, 2026

ரசிகர்களுக்கு சிறந்த திரையனுபவத்தைத் தரும் திரைப்படம் ‘சிக்னல் அட் 11.30′” – இசையமைப்பாளர் டி. இமான்!

November 26, 2026

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், பிரேம் குமார் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் நடிக்கும் படத்திற்கு ‘அசரீரி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது!

November 26, 2026

சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய திரைப்படம்!

November 26, 2026

சிட்டுக்குறிஞ்சி – விமர்சனம்

November 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.