தமிழ் சினிமாவுல ஒரு இரண்டு மாதத்திற்கு முன்னாடி மலையாள படங்களோட ஆதிக்கம் அதிகமா இருந்தது ரசிகர்களுடைய வரவேற்பையும் பெற்றது.அதே ஒரு மாத காலமாக தமிழ் திரைப்படங்கள் தியேட்டர் ஓனர்களை மிகவும் சந்தோஷப்படுத்துகிறது என்று நம் காதில் விழும்போது ரீங்காரமா இருந்தது அதுபோல தியேட்டர் ஓனர்களையும் ரசிகர்களையும் மகிழ்விக்க வந்திருக்கும் படம் தான் ரயில் (வடக்கன்)
இந்த படத்தில் முற்றிலும் யதார்த்தமான புதிய முகங்கள் தான் நடித்து உள்ளனர்.நாயகனாக – குங்குமராஜ் நாயகியா க – வைரமாலா பர்வேஸ் மெஹ்ரூ ரமேஷ்வைத்யா செந்தில் கோச்சடை ஷமீரா பிண்ட்டூ வந்தனா குழந்தை – பேபி தனிஷா சுபாஷ் மற்றும் பலர் நடிப்பில், தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவில் ஜனனி இசையில் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் ரயில் (வடக்கன்)
வடக்கர் தன் குடும்பத்தை பார்க்க போக தயாராகும் பொது ஒரு விபத்தில் இறந்து விடுகிறார். நாயகன் வீட்டு காம்போண்டில் அவரின் சடலத்தை கொண்டு வந்து வைக்கிறார்கள் போலீஸ் ஒண்டும் புரியாமல் தவிக்கும் ஹீரோ அனாதை பிணத்தை கொண்டு வந்து இங்கு போட்டுவிட்டார்கள் என்று பயப்படும் நாயகன் அந்த நேரத்தில் நாயகி விஷயம் அறிந்து வர தேம்பி தேம்பி அழுகிறார். ஐயோ குடும்பத்தை பார்க்க போக இருந்தவன் இன்று அனாதையாக செத்து விட்டான் என்று அழுகிறார் அப்போது நாயகி அப்பா ஏம்மா அனாதை என்று சொல்கிறாய் நாம் இருக்கிறோம் என்று அந்த வடக்கனுக்கு இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்கிறார் இதை கேட்ட அந்த கிராமமே அந்த வடக்கன் இறுதி சடங்கிற்கு உதவி செய்கிறார்கள்.
படத்தில் நடித்த அனைவரும் மிகவும் சிறப்பாக நடித்துள்ளனர். இத்தியாரும் புதுமுகம் என்று சொல்லும் படியாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு நடித்து உள்ளனர். குறிப்பாக நாயகன் நாயகியாக நடித்த இருவரும் கதாபாத்திரமாகவே வாழ்ந்து உள்ளனர். அவர்கள் மட்டும் இல்லை ஒவ்வொரு பாத்திரமும் கதைக்கு உயிர் கொடுத்து உள்ளனர். இப்படி பட்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்த இயக்குனருக்கு பாராட்டுகள் .
இயக்குனர் சரவணா சக்தி மிகவும் ஒரு நேர்த்தியான திரைக்கதை மூலம் நம்மை ரசிக்க வைத்து உள்ளார் அதே நேரத்தில் நம்மை சிந்திக்கவும் வைத்துள்ளார்.கதை ஓட்டத்தை விட்டு எங்கும் சிதறாமல் ஒரு அற்புதமான திரைக்கதை மூலம் நம்மை நெகிழ வைக்கிறார் குறிப்பாக இறுதி காட்சி அந்த அரைமணி நேரம் நம்மை ஒரு புதிய கோணத்தில் சிந்திக்க வைக்கிறார். ஊரை விட்டு ஊர் பிழைக்க வந்து விட்டான் என்று ஏளனம் பேசுபவர்களுக்கு ஒரு சாட்டை அடி கொடுத்து இருக்கிறார்.