ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பிரபல பாடலாசிரியர் பிரியன் கதாநாயகனாக அறிமுகமாகும் ஹாரர், கிரைம், திரில்லர் படம் ” அரணம் “

by Tamil2daynews
April 6, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பிரபல பாடலாசிரியர் பிரியன் கதாநாயகனாக  அறிமுகமாகும்  ஹாரர், கிரைம்,  திரில்லர்  படம்  ” அரணம் “

 

மஸ்காரா போட்டு மயக்குறியே, மக்காயலா மக்காயலா, வேலா வேலா வேலாயுதம், உசுமுலாரசே  உசுமுலாரசே, செக்ஸி லேடி கிட்ட வாடி, மனசுக்குள் புது மழை விழுகிறதே போன்ற ஹிட் பாடல்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய பிரபல பாடலாசிரியர் பிரியன் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
கதாநாயகியாக வர்ஷா நடித்துள்ளார். ராட்டினம், எட்டுத்திக்கும் மதயானை, சத்ரு போன்ற திரைப்படங்களின் கதைநாயகன் லகுபரன் மற்றும் கீர்த்தனா ஆகியோரும் நடித்துள்ளனர்.
நித்தின்.K.ராஜ், E.J.நௌசத் ஆகிய இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
இசை – சாஜன் மாதவ்
படத்தொகுப்பு – PK
பாடல்கள் –  பிரியன், முருகானந்தம், பாலா, சஹானா
கலை –  பழனிவேல்
ஸ்டண்ட் – Rugger ராம்குமார்
நடனம்  –  ராம்சிவா, ஸ்ரீசெல்வி
மக்கள் தொடர்பு  – மணவை புவன்
தயாரிப்பு – தமிழ்த்திரைக்கூடம்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பிரியன்.
படம் பற்றி இயக்குநர் பிரியன் பகிர்ந்தவை…
வாழ்க்கையின் அதிசயமே அடுத்த நிமிடம் நடக்கும் நாம் எதிர்பாரா ஆச்சர்யங்களும் அதிர்ச்சிகளும்தான். அப்படி ஒரு மனிதன் வாழ்வில் நடக்கும் சில சம்பவங்கள் அதை எதிர்கொள்கையில் அவன் காணும் பெரும் நிகழ்வுகள் என யூகிக்கவே இயலாத வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கும் கதை இது.
ஒரு பெரிய ஜமீன் வீட்டில் வாழ்ந்து வந்த ஜமீன்தாரின் ஊதாரி மகன் திடீரென இறந்துவிட.. அவன் பேயாக இருப்பதாக நம்பப்படும் நிலையில் அந்த ஜமீன்தாரும் அதே வீட்டில் இறந்துவிட.. அவரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட கதிர் தன் புதுமனைவியுடன் அந்த ஜமீன் வீட்டுக்குக் குடியேறுகிறான். மகிழ்ச்சியாய் அவர்கள் வாழத்துவங்குகையில் பங்களாவை சுற்றிலும் சில அமானுஷ்யங்கள் நடக்கிறன. அவை என்ன? எதிர்பாரா மர்மங்கள் நிறைந்த அவற்றை கதிர் தன் தம்பியின் துணையோடு எப்படிக் கண்டுபிடித்துத் தன் குடும்பத்தைக் காக்கிறான் என்பதை  ஹாரர், கிரைம்,  திரில்லர் வடிவில்  சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
படத்தின் முதல்பாதி முழுக்க ஒருதிசையிலும், இரண்டாம் பாதி முழுக்க twists and turns ஆகவும் இதுவரை கண்டிரா ஒரு வழக்கமுடைத்த பிரத்தியேக திரைக்கதை அனுபவத்தை அரணம் நிச்சயமாக வழங்கும்.
திரைப்படப் பாடலாசிரியராக இதுவரை 500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறேன். இப்போது ஒரு நடிகனாக, இயக்குநராக உங்கள் முன் வந்திருக்கிறேன். பாடல்களுக்கு கொடுத்த அதே அன்பையும், ஆதரவையும் இப்பொழுதும் எப்பொழுதும் தர வேண்டுகிறேன். நல்லன நடக்கும். நன்றி.  🙂
Previous Post

மதங்களைத் தாண்டிய மனிதநேயத்தைப் போற்றும் “அயோத்தி” திரைப்படம் 7 ஏப்ரல் 2023 முதல் ZEE5 ஓடிடி தளத்தில் ஒளிப்பரப்பாகவுள்ளது !!

Next Post

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராகுல் தயாரிப்பில், அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் புதிய திரைப்படம் !!!

Next Post

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராகுல் தயாரிப்பில், அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் புதிய திரைப்படம் !!!

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • ”சினிமாவில் மட்டும் தான் சாதி மதம் இவைகள் எதுவுமே கிடையாது” – ’முனியாண்டியின் முனிப் பாய்ச்சல்’ பட ஆடியோ வெளியீட்டில் இயக்குநர் பேரரசு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சூரகன்’ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பல வருடங்களுக்குப் பிறகு படப்பிடிப்பில் சந்தித்து அன்பைப் பரிமாறிக்கொண்ட மாபெரும் இரு துருவங்கள் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ’லேபிள்’ வெப்சீரிஸை தொடர்ந்து புதிய வெப்சீரிஸில் நடிக்கும் அரிஷ் குமார்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“வா வரலாம் வா” விமர்சனம்

December 1, 2023

‘அன்னபூரணி’ – விமர்சனம்.

December 1, 2023
சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர் ரிவான் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்

சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர் ரிவான் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்

December 1, 2023

பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் சர்வைவல் அட்வென்ச்சராக உருவாகி இருக்கும் ‘தி கோட் லைஃப்’ உலகம் முழுவதும் ஏப்ரல் 10, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது!

December 1, 2023

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி 51 படப் படப்பிடிப்பு கோலாகலமாக மலேசியாவில் நிறைவு !!

December 1, 2023

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ‘அன்னபூரணி’ படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் கிடைத்துள்ளது!

December 1, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!