தேரில் ஊர்வலமாக வந்த சன்னிலியோன்..!
இயக்குநர் தங்கர் பச்சான் பேசியதாவது..,இப்பட தயாரிப்பாளரின் அடுத்த படத்தை நான் இயக்குகிறேன். இந்த படமும், இந்த தயாரிப்பாளர் எடுக்கும் அடுத்த படமும் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றும் படமாக இருக்கும். திரைப்படங்கள் மக்கள் வாழ்வில் மிகப்பெரிய ஒரு அங்கமாக திகழ்கிறது. ஊடகங்கள் சிறிய திரைப்படங்களுக்கு ஆதரவு தர வேண்டும். நேர்மையான விமர்சனம் தான் திரைப்படத்திற்கு தேவை. மண் சார்ந்த திரைப்படங்களை நாம் எடுக்க வேண்டும். அப்படிபட்ட திரைப்படங்களை எடுக்கும், இயக்குனர்களும் இங்கு இருக்கிறார்கள். அவர்களுக்கு உங்கள் ஆதரவு தேவை. இந்த திரைப்படம் வெற்றியடைய எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
இது தான் எனது முதல் திரைப்படம், முன் அனுபவம் இல்லாத எனக்கு, இயக்குனர் தான் பக்கபலமாக இருந்தார். தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த படத்தில் எனக்கு சிறப்பான ஒரு கதாபாத்திரத்தை கொடுத்துள்ளனர். அந்த பாத்திரம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். உங்களுடைய ஆதரவு இந்த படத்திற்கு தேவை. அனைவரும் ஆதரவு தாருங்கள்
நடிகை சன்னி லியோன் கூறியதாவது…, தமிழகம் வந்து உங்களை சந்திதது மகிழ்ச்சி. நீங்கள் கொடுக்கும் வரவேற்பும், அன்பும் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. OMG திரைப்படத்திற்காக அனைவரும் கடின உழைப்பையும், அர்பணிப்பையும் கொடுத்துள்ளோம். இந்த படத்தை பார்க்க உங்களது நேரத்தையும் பணத்தையும் நீங்கள் ஒதுக்குவதற்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன். எங்களது கனவை நீங்கள் பார்க்க போகிறீர்கள். உங்களது அன்பும் ஆதரவும் எங்களுக்கு தேவை.
இந்த படம் முழுக்க முழுக்க காமெடி நிறைந்த ஒரு கதை. முதல் பாதி காமெடியும், இரண்டாவது பாதி சன்னி லியோன் வரும் பிரம்மாண்டமும் படத்தில் நிறைந்து இருக்கும். நீங்கள் ரசிக்கும் வகையில் இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். நடிகர்கள், இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை
இயக்குநர் யுவன் பேசியதாவது…
“ஓ மை கோஸ்ட்” (OMG) திரைப்படத்தினை VAU MEDIA ENTERTAINMENT சார்பில் தயாரிப்பாளர் D.வீரா சக்தி மற்றும் WHITE HORSE STUDIOS சார்பில் K. சசிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர். நடிகை சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தீபக் D. மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.









