• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சினிமாகாரன் எஸ்.வினோத் குமார் வழங்கும் ’குட் நைட்’ & ’லவ்வர்’ படப்புகழ் நடிகர் மணிகண்டனின் அடுத்த படத்திற்கு ‘குடும்பஸ்தன்’ என பெயரிடப்பட்டுள்ளது!

by Tamil2daynews
September 29, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சினிமாகாரன் எஸ்.வினோத் குமார் வழங்கும் ’குட் நைட்’ & ’லவ்வர்’ படப்புகழ் நடிகர் மணிகண்டனின் அடுத்த படத்திற்கு ‘குடும்பஸ்தன்’ என பெயரிடப்பட்டுள்ளது!

 

கெளபாய்ஸ், நாடோடி வீரர்கள், கோஸ்ட்பஸ்டர்ஸ் அல்லது புதையல் வேட்டையாடுபவர்கள் பற்றிய படங்களே பொதுவாக சாகச படங்களாகக் கருதப்படுகின்றன. இருப்பினும், திருமணமான சாதாரண குடும்பஸ்தனின் அன்றாட வாழ்க்கையும் சாகசங்களுக்குக் குறந்ததல்ல. அந்த வகையில் ஒவ்வொரு குடும்பஸ்தனும் ஒரு சாகச வீரனே !

ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், சினிமாகாரன் எஸ்.வினோத் குமார் தயாரிப்பில், ஒரு இளைஞன் குடும்ப வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்களும் சாகசங்களும் பல இயல்பான  வேடிக்கை நிறைந்த தருணங்கள் கொண்ட விறுவிறுப்பான திரைப்படமாக உருவாகியிருக்கிறது.  மணிகண்டன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் புதிய திரைப்படத்திற்கு ‘குடும்பஸ்தன்’ என்று பெயரிட்டுள்ளனர்.

ஒவ்வொரு படத்திலும் தனது அசத்தலான நடிப்பின் மூலம் தன்னுடைய ரசிகர்கள் கூட்டத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறார் நடிகர் மணிகண்டன். ‘குட் நைட்’ மற்றும் ‘லவ்வர்’ ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் எஸ் வினோத் குமார் மற்றும் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமியுடன் இந்தப் படத்தில் மணிகண்டன் இணைந்துள்ளார்.படம் குறித்து இயக்குநர் ராஜேஷ்வர் கூறும்போது, “கோயம்புத்தூரில் இருக்கும் புதிதாக திருமணமான தம்பதிகள் பற்றிய மகிழ்வான கதை இது. குடும்பஸ்தன் ஒருவன் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வேடிக்கையான தருணங்களை சுற்றி இந்தக் கதை நடக்கிறது” என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், விரைவில் படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், ’ஜெய ஜெய ஜெய ஹே’ படப்புகழ் கனகம்மா, ஜென்சன் திவாகர் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழு:
இயக்கம்: ராஜேஷ்வர் காளிசாமி,
கதை: பிரசன்னா பாலச்சந்திரன் & ராஜேஷ்வர் காளிசாமி,
திரைக்கதை & வசனம்: பிரசன்னா பாலசந்தரன்,
தயாரிப்பு: எஸ்.வினோத் குமார்,
தயாரிப்பு நிறுவனம்: சினிமாகாரன்,
ஒளிப்பதிவு: சுஜித் சுப்ரமணியம்,
இசை: வைஷாக் பாபுராஜ்,
எடிட்டிங்: கண்ணன் பாலு,
கலை இயக்கம்: சுரேஷ் கல்லேரி,
ஸ்டண்ட் : தினேஷ் சுப்பராயன்,
ஆடை வடிவமைப்பு: மீரா,
விளம்பர வடிவமைப்பு: வின்சிராஜ்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்

Previous Post

பிரபல இயக்குநர் ராஜேஷ் எம் வெளியிட்ட, சீரன் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் !!

Next Post

சசிகுமார் – சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்

Next Post

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்

Popular News

  • மக்கள் தலைவா – விமர்சனம்

    மக்கள் தலைவா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்யஜோதி பிலிம்ஸ் – சீயான் 63 அடுத்த கட்டத்திற்கு நகர்வு! தொடங்கியது படப்பிடிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்து கொண்டார் தயாரிப்பாளர் தீபன் பூபதி; மணமகள் நிவேதிதா கிரி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.