• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பில் உருவாகும் ‘யூ ஆர் நெக்ஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது!

by Tamil2daynews
June 28, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பில் உருவாகும் ‘யூ ஆர் நெக்ஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது!

 

மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகியோரது தயாரிப்பில் முன்னணி நடிகர்களுடன் புதுமுகங்கள் அறிமுகமாகும் ‘யூ ஆர் நெக்ஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் துவங்கியது.

ஐமேக் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்கை ஃபிரேம் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய இரு நிறுவனங்கள் சார்பில் மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகியோரது தயாரிப்பில், ஷரீஃப் அவர்களது எழுத்து மற்றும் இயக்கத்தில் தயாராகும் படமே ‘யூ ஆர் நெக்ஸ்ட்’.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இளைஞர்களைச் சுற்றி நடைபெறும் பல்வேறு  சம்பவங்களை ஹாரர் பின்னணி கொண்ட திரைப்படமாக உருவாக்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். உள்ளது. இத்திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக தமிழ்,கன்னடம்,தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில்   பிரம்மாண்டமாக உருவாக உள்ளது.

இந்திய சினிமா ரசிகர்களுக்கு இத்திரைப்படத்தின் மூலம் புதுவிதமான அனுபவத்தை வழங்க படக்குழு தயாராகியுள்ளது.

முன்னதாக படத்தில் நடிக்கும் கே.எஸ் ரவிக்குமார் ரச்சிதா மகாலட்சுமி மற்றும் பல நட்சத்திரங்கள், படக்குழுவினர் முன்னிலையில் இத்திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது.

படத்தின் பூஜை நிறைவுற்றவுடன் முதலாவதாக பேசிய இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்,”இந்த படத்தின் கதையை கேட்டவுடன் வித்தியாசமான ஹாரர் கதையாக இருந்தது.என்னுடைய கதாபாத்திரம் எனக்கு பிடித்திருந்தது.மேலும் இந்த திரைப்படம் இளைஞர்களுக்கான திரைப்படமாக உருவாகிறது..இயக்குனர் ஷரீஃப் இந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆகிறார். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்,” என்றார்.

அடுத்ததாக பேசிய ரச்சிதா மகாலட்சுமி,”இந்த படம் எனக்கு ஒரு புதிராகவே உள்ளது. கடைசி நிமிடத்தில் படத்தின் கதையை கூறினார்கள். கதை  பிடித்திருந்ததாலும் படத்தில் நடிக்கும் சிறந்த நட்சத்திரங்களாலும் நடிக்க ஒத்துக் கொண்டேன். படத்தின் கதை ஹாரர் கதையம்சத்தை கொண்டது. உங்கள் அனைவரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் திரைப்படமாக இருக்கும்” என்றார்.

இத்திரைப்படத்தில் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் திரு கே.எஸ்.ரவிக்குமார், ரச்சிதா மகாலட்சுமி, உதயா, ஜனனி, தினேஷ், திவ்யா கிருஷ்ணன், அர்ஷத், கே பி ஒய் வினோத், ரஃபி, ‘புல்லட்’ சமி மற்றும் பல முன்னணி நடிகர்கள்  நடிக்கிறார்கள்.

பின்னர் பேசிய இயக்குனர் ஷரீஃப்,”யூ ஆர் நெக்ஸ்ட் திரைப்படத்தின் மூலம் நான் தமிழ் திரையுலகுக்கு இயக்குனராக அறிமுகம் ஆகின்றேன். என்னையும் என் கதையும் நம்பி இந்த படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்ட தயாரிப்பாளர்கள் மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகிய இருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல இங்கு வந்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் படத்தில் நடிக்கும் நடிகர்,நடிகைகளுக்கும் ஊடகத்துறையினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”,என்றார்.

இத்திரைப்படத்தில் கே ஜி ரத்தீஷ் ஒளிப்பதிவாளராகவும், அஜித் படத்தொகுப்பாளராகவும், டிஜிட்டல் மீடியா மூலமாக பிரபலமான அறிமுக இசையமைப்பாளர் ‘இசை பேட்டை’வசந்த் இசையமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.வேணு கலை இயக்கத்தையும், ஓம் பிரகாஷ் சண்டை பயிற்சியையும், ‘கலைமாமணி’ஸ்ரீதர் நடனத்தையும் கவனிக்கிறார்கள்.

ஆடை வடிவமைப்பாளராக ஈகா பிரவீனும், தயாரிப்பு நிர்வாகியாக நந்தகுமாரும் இத்திரைப்படத்தில் பணியாற்றுகின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது.

நடிகர்கள் :-
கே.எஸ்.ரவிக்குமார்
ரச்சிதா மகாலட்சுமி
உதயா
ஜனனி
தினேஷ்
திவ்யா கிருஷ்ணன்
அர்ஷத்
கேபிஒய் வினோத்
ரஃபி
‘புல்லட்’சமி

படக்குழு :-
தயாரிப்பு : ஐமாக் ஃபிலிம்ஸ் பிரைவேட்.லிட்., & ஸ்கை ஃபிரேம் என்டர்டெயின்மென்ட்
தயாரிப்பாளர் : மொஃஹிதீன் அப்துல் காதர் & மணி
எழுத்து & இயக்கம் : ஷரீஃப்
ஒளிப்பதிவு : கே ஜி ரத்தீஷ்
படத்தொகுப்பு : அஜித்
இசை : ‘இசைப்பேட்டை’ வசந்த்
கலை : வேணு
சண்டைப் பயிற்சி : ஓம்பிரகாஷ்
நடனம் : ‘கலைமாமணி’ ஸ்ரீதர்
ஆடை வடிவமைப்பு : ஈகா பிரவீன்
படங்கள் : சக்தி பிரியன்
விளம்பர வடிவமைப்பு : மோனிக் | டிஜின் ஸ்டுடியோஸ்
தயாரிப்பு நிர்வாகி : நந்தகுமார்
மக்கள் தொடர்பு : ரியாஸ் K அஹ்மத்

Previous Post

கல்கி 2898 – விமர்சனம்

Next Post

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் “இந்தியன் 2” திரைப்படத்தின் புதுமையான புரமோசன் !!

Next Post

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் "இந்தியன் 2" திரைப்படத்தின் புதுமையான புரமோசன் !!

Popular News

  • சாவீ – விமர்சனம்   ரேட்டிங் – 3/5

    சாவீ – விமர்சனம் ரேட்டிங் – 3/5

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜனவரியில் வெளியாகிறது ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள ‘தி பெட்’

    0 shares
    Share 0 Tweet 0
  • டிரைடன்ட் ஆர்ட்ஸ் & ஐவா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் தனித்துவமான ரொமான்டிக் காமெடி படமான ‘ ராம் in லீலா’ வில் இணையும் ரியோ – வர்திகா ஜோடி

    0 shares
    Share 0 Tweet 0
  • திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷன், மஹேஸ்வர் ரெட்டி மூலி, கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் “புரொடக்ஷன் நம்பர் 2 “ படத்திற்கு “ஓ…!சுகுமாரி” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • செல்ரியன் புரொடக்ஷன் சார்பாக செல்வம் பொன்னையன் தயாரித்திருக்கும் கெட்ட வார்த்தை கேட்ட வார்த்தை…

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

இயக்குநர் சுந்தர் சி வெளியிட்ட மாயபிம்பம்‌ படத்தின் போஸ்டர்!

December 5, 2025

இதயத் தூண்டுதல், கைவினை நுணுக்கம், அப்பாவின் சேமிப்பு — இதைக் கொண்டு 40 நிமிட குறும்படமாகத் தொடங்கிய ‘STEPHEN’, இப்போது உலகளாவிய மனோவியல் திரில்லராக உயர்ந்து, டிசம்பர் 5 முதல் Netflix-ல் ப்ரீமியர் ஆகிறது

December 5, 2025

லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தின் பிரீமியரில் ‘டெர்மினேட்டர்’ நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுடன் மீண்டும் இணைந்தார்!

December 5, 2025

செல்ரியன் புரொடக்ஷன் சார்பாக செல்வம் பொன்னையன் தயாரித்திருக்கும் கெட்ட வார்த்தை கேட்ட வார்த்தை…

December 5, 2025

நாகபந்தம் கிளைமேக்ஸ் : பெரும்பொருட்செலவில் உருவாகும் பிரம்மாண்டம்!

December 5, 2025

நடிகர் ஷாம் தயாரித்து இயக்கியுள்ள இசை ஆல்பம் ‘வரும் வெற்றி’

December 5, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.