கேம் ஆப் லோன் – விமர்சனம்
இந்த காலத்தில் நடக்கும் உண்மை சம்பவங்களை வைத்து ஆன்லைனில் சூதாடும் இளைஞர்களின் வைத்து அதில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் ஆன்லைனில் பெரும் லோன், அதில் ஏற்படும்,பிரச்சனைகள், விளைவுகள் பின்னணி என்னவென்று மையமாக வைத்து உருவாக்கிய படம் தான் கேம் ஆப் லோன் இந்த கதாநாயகன் அதில் சிக்கிக் கொண்டு அந்த சூழலில் இருந்து அவர் எப்படி தப்பித்தாரா? இல்லையா? என்பதுதான் மீதி கதை கொஞ்சம் கற்பனையோடு கலந்து சொல்ல வந்திருக்கிற படம் தான் இந்த படம்.

கதாநாயகன் நிவாஸ் ஆதித்தன் பல படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார் இத்திரைப்படத்தில் அவர் கதாநாயகனாக நடித்துள்ளார் கடனை அடைக்க முடியாமல் தவிக்கும் இளைஞரின் தவிப்பும் மன வலியும் அவர் முகத்தில் காட்டும் பாவனைகள் வியக்க வைக்கும் அளவில் சிறப்பாகவே உள்ளது. அதுவும் இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க மாட்டோமோ ஒரு வாய்ப்பு கிடைக்காதோ என்ற ஏக்கம் நடிப்பின் உச்சம். அவருக்கு மனைவியாக வரும் எஸ்டர். அனைவரின் கவனம் ஈர்க்கிறார்.

ஒளிப்பதிவு ஒரே ஒரு அறை என்று இல்லாமல் பலவிதமான கோணங்களில் படமாக்கி காட்டி இருக்கிறார். ஒளிப்பதிவாளர் சபரிக்கு ஒரு சபாஷ்.
எழுதி இயக்கியிருக்கும் இயக்குனர் அபிஷேக் லெஸ்ஸி இக்காலகட்டத்தில் ஆன்லைன் சூதாட்டம் மூலம் மற்றும் ஆன்லைனில் பெறப்படும் கடன்கள் அதில் ஏற்படும் விளைவுகள் உண்மையின் சம்பவங்களையும் மற்றும் கற்பனையும் வைத்து திரையின் வழியாக வெளி காட்டியிருக்கிறார் காட்சிகளும் வசனங்களும் மிரளவைக்கும் அளவில் உள்ளது,நம்மையே யோசிக்க வைக்கும் அளவில் திரைப்படம் அமைந்திருக்கிறது குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு அறை மூன்று நபர்கள் வைத்து படமாக காட்டி இருக்கிறார் அவர் திறமைக்கு நிச்சயம் நம்ம பாராட்டியாக வேண்டும்.
நாம் அக்கம் பக்கத்தில் பார்த்து வந்த ஒரு சம்பவத்தை திரைப்படமாக எடுத்திருப்பது இப்படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்.