• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பன் பட்டர் ஜாம் இசை வெளியீட்டு விழா

by Tamil2daynews
July 9, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பன் பட்டர் ஜாம்  இசை வெளியீட்டு விழா

ரெய்ன் ஆப் ஆரோஸ் (Rain of Arrows) நிறுவனம் சார்பாக சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பன் பட்டர் ஜாம்’. இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பாபு ஒளிப்பதிவில், ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. .

இந்த நிகழ்வில்

நடிகர் ராஜூ ஜெயமோகன் பேசும்போது, :

இந்த வாய்ப்பு கிடைக்கறதுக்கு முக்கியமான காரணம் பிக் பாஸ் ஷோ தான்னு நினைக்கிறேன்.. அதுக்கு வாய்ப்பு கொடுத்த பெரிய மனிதர்களுக்கும். அதுல எனக்கு ஓட்டுப்போட்டு ஜெயிக்க வெச்ச அந்த மக்களுக்கு தான் நன்றி சொல்லணும்.. ஜியோ ஹாட்ஸ்டார்ல நானே எழுதி இயக்கி நடிச்சு அப்படி ஒரு படத்துக்கு ஒப்பந்தமாகி இருந்தேன். அந்த படத்த பண்ணிட்டு இருக்கும்போதுதான் இந்த வாய்ப்பு வந்தது.. அது கொஞ்சம் லேட் ஆனதால இதை பண்ணேன்.

இன்றைய ஜென்-சிக்கு ஒரு டீப்பான விஷயத்தை எப்படி ஷேர் பண்ணி கொடுக்கனும்னு தெரிஞ்ச ஒரு டைரக்டர். தான் ராகவ் மிர்தாத்.. எனக்கு ஒரு கிரவுண்ட் கொடுத்திருக்கீங்க. இது ஒரு படம். இவ்வளவு பேர் பாராட்டக்கூடிய ஒரு இடத்துல நிற்க வச்சிருக்கீங்க. உங்களுக்கு நான் ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்த படத்தோட எடிட்டர் ஜான் ஆப்ரகாம் இன்னொரு டைரக்டர்னு சொல்லலாம். தன்னோட டேபிள்ல படத்தை வேற மாதிரி மாத்துனாரு… அதுமட்டுமல்ல இது தயாரிப்பாளர் சுரேஷ் சாரின் கதைங்கறதுனால ஈஸியா ஓகே ஆயிடுச்சு.

எல்லாருமே என்னை ஹீரோன்னு சொல்றாங்க.. ஹீரோன்னா பொதுவா படத்துல அம்மாவ காப்பாத்துறவங்க, இல்ல. ஆபத்துல இருக்குறவங்களை காப்பாத்துறவங்க.. ஆனா என்னை வெச்சி படம் எடுத்த தயாரிப்பாளரை காப்பாத்திட்டேன்னா அன்னைக்கு நான் ஹீரோன்னு. ஒத்துப்பேன்
எங்க படத்தை பார்க்குறதுக்கு ஒரு நல்ல காரணம் என்ன அப்படின்னா. தேவையில்லாத விஷயங்களெல்லாம் சொல்லாம உங்களை போட்டு தொந்தரவு பண்ணாம, உங்க டைம் மதிச்சு சீக்கிரமா முடியற மாதிரியான ஒரு படம் கொடுத்துருக்கோம். ஒரு முக்கியமான விஷயத்தை ஒரு நல்ல மெசேஜா சுகர் கோட் பண்ணி உங்களுக்கு கொடுத்து கொடுத்திருக்கார் இயக்குநர். . இந்த எல்லாத்துக்குமே வந்து இசையமைப்பாளர் நிவாஸ் தான். காரணம். இந்த படம் வர்றதுக்கு முன்னாடி, நான் நடிக்கிறதுக்கு முன்னாடி எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு முகம் நிவாஸ்

கண்டிப்பா நீங்க குடுக்கற பணம் வேஸ்ட் ஆகாது. நீங்க எல்லாரும் போய் குடும்பம் குழந்தைகளோட நம்பி பாக்கலாம். சொல்லப்போனா  இது ஒரு மூணு ஹீரோ சப்ஜெக்ட். பப்பு, மைக்கேல், நான் எல்லாரும் சேர்ந்து நடிச்ச படம். இந்த படத்துல ஒரு குட்டி நயன்தாரா, ஒரு குட்டி அதிதி ராவ் ஹைதரி இருக்காங்க. இவங்க ரெண்டு பேருமே இந்த படத்துக்கு அப்புறம் அந்த ரெண்டு ஹீரோயின்களை விட பெருசா ஆகணும் அப்படின்னு சொல்லி வேண்டிக்கறேன்.

நானும் ஒரு டைரக்டர்னு. நினைக்கிறேன்ங்கறதுனால டைரக்டர்கிட்ட. அவர் சொல்றதை கீழ்ப்படிஞ்சு பண்ணி நடிக்கத்தெரியும். நான் அதை பண்ணிருக்கேன்.. இன்னைக்கு எந்த படம் ஓடும், எந்த படமும் ஓடாதுன்னு தெரியல. எந்த கதை நல்ல கதை, எந்த கதை எல்லாம் பண்ணக்கூடாதுன்னு தெரியல. ஒரு நைட்டுல எல்லாரும் என்ன வேணாலும் ஆகலாம். நாளைக்கு என்ன வேணாலும் ஆகும் அப்படின்ற மாதிரியான ஒரு இதுலதான் இருக்கு. இன்னைக்கு நீங்க பாக்குற ஒரே ஒரு புட் டெலிவரி ஆப்ல  பார்த்தா நிறைய சாப்பாடு இருக்கும். எந்த சாப்பாட நீங்க ஆர்டர் பண்ணனும்னு தெரியாது. ஆனா பன் பட்டர் ஜாம் தான் எல்லா ஊர்லயும், எல்லா கடைகளிலும் கிடைக்கும். பசிக்குதுன்னா எந்த கடையில வேணாலும் பன் பட்டர் ஜாம் நம்பி சாப்பிடலாம். நாளைக்கு இந்த சினிமா எனக்கு எதாவது கொடுத்தா திருப்பி சினிமாவுல தான் இருக்கணும்னு ஆசை.. எனக்கு படம் தயாரிக்கனும்னு விருப்பம் இருக்கு.

ஒருத்தர் ஒரே ஒரு போன் கால்ல எங்க படத்த தமிழ்நாட்டுல இருக்குற எல்லாரும் திரும்பி பார்க்க வெச்சாரு.. தளபதி விஜய் ஒரு போன் கால்ல எனக்கு பண்ணி கொடுத்தாரு. அவரு என்னை எப்படி பாக்குறாரு? அவருக்கு என்னை பிடிக்குமா? இல்ல என்ன விஷயத்துக்காக எனக்கு இத வாழ்த்துனார் அப்படிங்கறதெல்லாம் வந்து எனக்கு ரொம்ப பிரமிப்பாவும் இருக்கு. அவர் சொன்ன விஷயம் தான் இன்னைக்கு நிறைய பேருக்கு எங்க படம் தெரிஞ்சிருக்கு சமீபத்துல ஒரு நிகழ்வுல. அவரோட ரசிகர்களை  எல்லாம் பாத்து நீங்க எல்லாம் இல்லனா நான் என்ன பண்ண போறேன்னு தெரியலப்பா அப்படின்னாரு. நான் அவர்கிட்ட சொல்றேன் நீங்க இல்லனா நான் என்ன பண்ணுவேன்னு தெரியலண்ணா” என்று பேசினார்..
இயக்குநர் ராகவ் மிர்தத் பேசும்போது,

“என்னுடைய முதல் படம் சரியாக போகவில்லை. பேசாமல் சினிமாவை விட்டு போய்விடலாமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் எப்போதும் என் திறமை மீது அசாத்திய நம்பிக்கை கொண்டவர் நண்பன் சினிமாவாலா சதீஷ். என்னிடம் இருக்கும் கதைகள் பற்றி பார்ப்போர் இடமெல்லாம் சிலாகித்து பேசுவார். என்னுடைய கஷ்டம் அறிந்து கேட்காமலேயே பணம் கொடுத்து உதவுவார். இந்த பட வாய்ப்பு அவர் மூலமாகத்தான் வந்தது. இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் சுப்பிரமணியன் மிகவும் அன்பான ஒரு மனிதர். வெளிநாட்டு பாணியில் படங்களை எடுக்கலாமே என கதை சொல்ல வந்தால் இங்கே இருக்கும் சினிமா வேற மாதிரி இருக்கும் தயாரிப்பாளர்களே கிடைக்க மாட்டார்கள். அவர் தயாரிப்பாளராக வரும்போதே கதையின் ஒன் லைன் வைத்திருந்தார். ஆனால் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். போட்டோ ஷூட் பண்ணாமல் டிசைன்களை வரைய வேண்டும் என்று சொன்னபோது எந்த மறுப்பும் சொல்லாமல் ஒப்புக்கொண்டார். நான் கேட்ட எல்லாவற்றையும் மறுக்காமல் கொடுத்தார். நான் தனித்தன்மையாக என்னென்ன விஷயங்களை பண்ண வேண்டும் என நினைத்தேனோ அது எல்லாவற்றுக்குமே அனுமதி கொடுத்தார். அவருக்கு நன்றி. அவர் இல்லை என்றால் இந்த படம் சாத்தியமில்லை. நடிகர் ராஜூ ஜெயமோகன் இந்த படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய கிப்ட். வாழ்க்கையே முடிந்தது, சினிமாவை விட்டு வேறு ஏதாவது வேலைக்கு போகலாம் என நினைத்தபோது இந்த படம் தான் எனக்கு நம்பிக்கை தந்தது” என்று கூறினார்.

இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா பேசும்போது,

“தயாரிப்பாளர் சுரேஷ் என்னுடைய நண்பர் தான். அவர்தான் ராஜுடன் இணைந்து இந்த படத்தை பண்ணலாம் என ஒரு ஐடியாவை கொண்டு வந்தார். ராகவ் மிர்தத் அற்புதமான பணியை செய்துள்ளார். இந்த படத்தின் பிஈமியரை நேற்று பார்த்தபோது முழு திருப்தியாக உணர்ந்தேன். நலன் குமாரசாமிக்கு அடுத்ததாக ஒரு வலுவான கதாசிரியராக ராகவை பார்க்கிறேன். அவரது அடுத்தடுத்த படங்களில் இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறேன். ராஜுவை திரையில் பார்த்ததுமே அவரை அழைத்து நீங்கள் பெரிய ஆளாக வருவீர்கள் என கூறினேன். அவர் நேற்று வரை நம்பவில்லை. இன்று மற்றவர்கள் பேசிய பிறகுதான் நம்பியுள்ளார். இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளன. முதன்முதலாக விஜய்சேதுபதி அண்ணா இரண்டு பாடல்களை எழுதி ஒரு பாடலாசிரியராக அறிமுகமாகியுள்ளார். கார்த்திக் நேத்தா, சரஸ்வதி மேனன், எம்கே பாலாஜி மற்ற பாடல்களை எழுதியுள்ளார்கள்” என்று கூறினார்.

நாயகி ஆத்யா பிரசாத் பேசும்போது,

“பன் பட்டர் ஜாமில் ஃபேமிலி, லவ், பிரண்ட்ஷிப் என எல்லாமே இருக்கும். எல்லா தரப்பு மக்களையும் இந்த படம் திருப்திப்படுத்தும் என நம்புகிறேன்” என்றார்.

நாயகி பவ்யா ட்ரிக்கா பேசும்போது
“என் குடும்பம் மற்றும் நட்பு வட்டாரத்தில் எல்லா வயதை சேர்ந்த நபர்களும் இருகிறார்கள். எனக்கு இந்த பன் பட்டர் ஜாம் பட வாய்ப்பு வந்தபோது அதை சொன்னதும் உடனே எல்லோருமே ஆரவாரமாக சூப்பர் என்று சொன்னார்கள். அதை பார்த்ததுமே எனக்கு ஒரு பாசிட்டிவான உணர்வு ஏற்பட்டது. கட்டாயம் ரசிகர்களுக்கும் இது பிடிக்கும். தவிர, இந்த படத்தின் கதை பர்சனல் ஆக எனக்கு ரொம்ப ரொம்ப நெருக்கமானதாக இருந்தது.. இயக்குனர் ராகவ் ஒரு பர்ஃபெக்சனிஸ்ட். சின்ன சின்ன விஷயங்களை கூட டீடைலாக சொல்லி இருக்கிறார். சார்லி சாரை திரையில் பார்க்கும்போதே ஒரு சந்தோசமாக இருக்கும். ஒரு ஆன்மீகவாதியும் கூட. அற்புதமான நடிகர். சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி இருவருடனும் நடித்தபோது எனக்கு என் அம்மா ஞாபகம் வந்துவிட்டது. நிவாஸ் கே பிரசன்னாவின் இசையை கேட்டாலே எனக்கு புல்லரித்து விடும். தியா தியா என்னுடைய ஃபேவரைட் பாடல். பப்பு, மைக்கேல், ஆத்யா எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளார்கள். ராஜூவைப் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. அவுட்ஸ்டாண்டிங். காட்சிகளில் நடிக்கும் போது வெளியிலிருந்து என்னை சிரிக்க வைப்பார். எனக்கு அது கஷ்டமாக இருந்தது. ராஜூவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது” என்றார்.நடிகர் சார்லி பேசும்போது,

“இந்த படத்தின் கதை என்னிடம் வந்த போது அதைக் கேட்டுவிட்டு இது எனக்கு வேண்டாம்.. நான் செய்தால் சரியாக இருக்காது.. எனக்கு இதில் ஸ்பேஸ் அவ்வளவாக இல்லை எனக்கூறி நழுவ முயற்சித்தேன். ஆனால் இயக்குநர் ராகவ் வந்து இந்த படத்தின் முழு கதையையும் என்னிடம் சொன்ன பிறகு எந்த காலத்திலும் இந்த படத்தை மிஸ் பண்ண கூடாது என்று அவரிடம் கூறினேன். தமிழ் சினிமாவையே வேறொரு தளத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய ஒரு புதிய முயற்சிதான் பன் பட்டர் ஜாம். இதில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் வந்து செல்லும் நடிகர் கூட அங்கீகரிக்கப்படுவார். அந்த அளவிற்கு அனைத்து மொழிகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரு கதை அம்சம் கொண்ட படம் இது. இப்போதைய தலைமுறை பற்றிய ஒரு பெருமைக்குரிய சினிமா.

இயக்குநர் இந்த கதையை சொன்ன போது உங்களுக்கு முழுவதும் புரிந்ததா என்று இந்த படத்தின் எடிட்டர் ஜான் ஆபிரகாமிடம் கேட்டேன். ஏனென்றால் இது எனக்கு அப்படித்தான் இருந்தது. ஆனால் ஆரம்பத்தில் எதுவுமே முழுதாக புரிந்துவிடாது. கதைக்குள் போக போகத்தான் அவர் சொல்ல வந்திருக்கும் விஷயம், ஆஹா என்று சொல்ல வைக்கும் விதமாக இருக்கிறது. நேற்று தான் இந்த படத்தை நான் பார்த்தேன். திரும்பத் திரும்ப பார்க்க தூண்டக்கூடிய ஒரு அற்புதமான படைப்பாக இந்த படம் வந்திருக்கிறது.

ரீல்ஸ் போடும் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பவ்யா நிச்சயமாக தமிழ் சினிமாவின் மாஸ் ஆக வரப்போகிறார். அதேபோல ஆத்யாவும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இது போன்ற இளைஞர்களுடன் நடிக்கும்போது என்னை நானே புதுப்பித்துக் கொள்ள முடிகிறது. ஈகோ இல்லாத ஒரு மனிதரால் தான் வாழ்க்கையின் உச்சத்திற்கு செல்ல முடியும். நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் ராஜுவை நான் அப்படி பார்க்கிறேன்.. இன்றைய தலைமுறை மட்டுமல்ல எல்லா தலைமுறையும் கொண்டாட கூடிய படமாக இது உருவாகி உள்ளது” என்றார்..

நடிகை சரண்யா பொன்வண்ணன் பேசும்போது,

“எனக்கு நீங்கள் அம்மாவாக நடிக்கிறீர்களே என்று ராஜூ எப்போதும் சந்தோஷமாக என்னிடம் சொல்லிக் கொண்டிருப்பார். எல்லோரும் என்னிடம் அப்படி சொல்லும் அளவுக்கு எனக்கு கடவுள் ஒரு நல்ல இடத்தை கொடுத்திருக்கிறார். இந்த தமிழ் திரை உலகம் எனக்கு ஒரு இடத்தை கொடுத்திருக்கிறது. கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். எல்லா படமுமே எனக்கு ஒரு முதல் படம் போலத்தான். இயக்குநர் ராகவ் படமாக்கிய  காட்சிகள் எல்லாமே ரொம்ப புதுமையாக இருந்தது. என்னை வைத்து ஒரு காட்சி எடுக்கும் போது, இதற்கடுத்ததாக எதிரில் வேறு விதமாக ஒரு காட்சியை எடுக்க போகிறேன் என்பார். அதில் யார் நடிக்கிறார்கள், என்னைவிட நன்றாக நடித்து விடுவார்களோ என்றெல்லாம் எனக்கு தோன்றும். பல காட்சிகளில் இதையேதான் அவர் தொடர்ந்து என்னிடம் சொல்வார். பப்புவும் நானும் இணைந்து நிறைய காமெடி காட்சிகளில் நடித்துள்ளோம்” என்றார்.

இணை தயாரிப்பாளர் டாக்டர் லங்கேஷ் பேசும்போது,
“இந்த படத்தில் நானும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இயக்குநர் ராகவ் என்னை பேசவே விடவில்லை. வசனங்களும் கொடுக்கவில்லை. ஆரம்பத்திலேயே தயாரிப்பாளர் இந்த கேரக்டரை ஏன் பண்ணுகிறீர்கள் வேண்டாம் என்று கூட தடுத்தார். ஆனால் இயக்குநர் ராகவ் தான் நீங்கள் இந்த கதாபாத்திரத்தை பண்ண வேண்டும் உங்களுக்கு தான் சரியாக பொருந்தும் எனக் கூறி என்னை சம்மதிக்க வைத்து விட்டார். ஆனால் அது நன்றாகவே வந்திருக்கிறது. பலரும் படம் பார்த்துவிட்டு, நீங்கள் பேசி இருந்தால் கூட நன்றாக இருக்காது, பேசாமலேயே சிறப்பாக வந்திருக்கிறது என்று சொல்கிறார்கள்” என்று கூறினார்.
இந்தப்படத்தை தமிழகம், கேரளாவில் வெளியிடும் குருஜோதி ஜி விவேகானந்தன் பேசும்போது,

“இதற்கு முன்பு புதிய பாதை படத்தை நாங்கள் வெளியிட்டோம். அதில் பார்த்திபனின் நடிப்பு எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. அந்த வகையில் பன் பட்டர் ஜாம் பழத்தில் ராஜு மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த தமிழ் திரை உலகிற்கு அடுத்த ஒரு ஹீரோ தயாராக இருக்கிறார். அதேபோல புதிய பாதை படத்தை பார்த்திபன் சார் அருமையாக இயக்கியிருந்தார். அந்த காலகட்டத்தில் அது போன்ற படத்தை யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அது மாதிரி ஒரு இயக்குநர் தான் ராகவும். இன்ச் பை இன்ச்சாக இந்த படத்தை ரசிக்கலாம். காதலுடன் குடும்ப பின்னணியில் இணைத்து இந்த படத்தை அழகாக உருவாக்கியிருக்கிறார். அதனாலேயே இந்த படத்தை நானே வெளியிட வேண்டும் என விரும்பியே இவர்களுடன் இணைந்து கொண்டேன். சார்லி, சரண்யா, தேவதர்ஷினி என சீனியர் நடிகர்களுடன் போட்டி போடும் விதமாக புதிய நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்” என்று கூறினார்.

சோனி இளமாறன் பேசும்போது,

“இந்தப் படத்தை பார்த்தபோது இயக்குநர் ராகவிடம் படம் வந்த பிறகு படத்தை பார்த்துவிட்டு மக்களே இந்த வருடத்தின் சிறந்த படம் என்று சொல்வார்கள் என்று சொல்லிவிட்டேன். ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் படம் முடிவதற்கு முன்போ அல்லது முடிந்த பின்னரோ நல்லபடியாக வியாபாரம் நடக்க வேண்டும் என்பதுதான் முக்கிய கனவாக இருக்கும். தயாரிப்பாளர் சுரேஷுக்கு அந்த கனவு பலித்து விட்டது. ராஜுவை பொறுத்தவரை நடிப்பு அரக்கர்களின் அரசனாக வாழ்த்துக்கள். இதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். அந்த அளவிற்கு பர்ஃபெக்டாக நடித்திருக்கிறார். ஒரு படத்தை யார் விநியோகம் செய்கிறார்கள் என்பதில் கூட வெற்றி இருக்கிறது. அந்த வகையில் இந்த படம் விவேகானந்தன் அவர்களிடம் வந்ததில் எனக்கு மிகுந்த நம்பிக்கை பிறந்திருக்கிறது. 2கே கிட்ஸ்க்கான படமாக இது இருக்கும்” என்று பேசினார்.

இயக்குநர் கோகுல் பேசும்போது,

“இந்த படம் பார்க்க என்ன அழைத்த போது எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. ஆனால் படத்தில் ராஜூவை பார்த்தபோது சமீபத்தில் இது போன்று முதல் படத்தில எந்த ஒரு நடிகரும் இப்படி பெர்பாமன்ஸ் கொடுத்ததில்லை என்று உறுதியாக சொல்வேன். சரண்யா, சார்லி என சீனியர் நடிகர்கள் உடன் இருந்தாலுமே ஆரம்பத்தில் இருந்து எல்லா காட்சிகளையும் தன்வசப்படுத்தி விட்டார் ராஜு. நிச்சயம் ராஜு மிகப்பெரிய இடத்திற்கு வர வேண்டும் என விரும்புகிறேன். இயக்குநர்களுக்கு தயாரிப்பாளர்கள் தான் ஹீரோ.. ஏன்னா இது போன்ற படங்களுக்கு ஓடிடி, தொலைக்காட்சி என எந்த ஆதரவும் ஆரம்பத்தில் கிடைக்காது. இப்படி ஒரு படத்தை எடுக்க முன் வந்த தயாரிப்பாளரை பாராட்டுகிறேன். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பின்னணி இசையால் தூக்கி நிறுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா. இயக்குனர் ராகவுக்கு இந்த படம் மிகச் சிறந்த வெற்றி படமாக அமைய வேண்டும்” என்றார்.

நிர்வாக தயாரிப்பாளர் சதீஷ் பேசும்போது,

“நானும் தயாரிப்பாளர் சுரேஷும் அடுத்து என்ன பண்ணலாம் என பேசிக்கொண்டிருந்த போது அவர் தன்னிடம் இருந்த கதையை சொன்னார். இதை எழுத நல்ல ரைட்டர் வேண்டும் என கேட்டார்.. எனக்கு ராகவ் தான் உடனே நினைவில் வந்தார் ஆரம்பத்தில் ஒரே எழுத்தாளராக தான் உள்ளே வந்தார். முழு கதையை எழுதி முடித்ததும் இதற்கு யாரை இயக்குநராக போடலாம் என பேச்சு வந்தபோது இவ்வளவு அழகாக எழுதி இருக்கும் ராகவே இந்த படத்தை இயக்கட்டும் என முடிவு செய்தோம். அந்த நம்பிக்கையை சிறப்பாக காப்பாற்றி இருக்கிறார் ராகவ். குடும்பத்தோடு வந்து படம் பார்த்து ரசிக்கும் விதமாக உருவாக்கி இருக்கிறார். யாரும் என்னை கட்டாயப்படுத்தாமலே நானாக விரும்பி இந்த படத்தை ரிலீஸ் செய்கிறேன் என ஒரு விநியோகஸ்தர் சொல்கிறார் என்றால் அது சினிமாவில் மிகப்பெரிய விஷயம் அவரது மனதிற்கே இந்த படம் நன்றாக ஓடும்” என்று பேசினார்

விநியோகஸ்தர் அபி பேசும்போது,
“இந்த படத்தின் விநியோகஸ்தர்கள் காட்சியை மூன்று மாதத்திற்கு முன்பே சோனி இளமாறன் மூலமாக நான் பார்த்தேன். அப்போதே அவரிடம் இந்த படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. இந்த படத்திற்கு ஒரு பெரிய வெற்றி இருக்கிறது எனது கூறினேன். மாதத்திற்கு 50 படங்களாவது பார்த்து விடுவேன் அப்படிப்பட்ட நான் இந்த படத்தை பார்த்துவிட்டு இயக்குநரை சந்தித்து தமிழ் சினிமாவின் அடுத்த செல்வராகவன் நீங்கள்தான் என்று கூறினேன். யுவன் சங்கர் ராஜா-செல்வராகவன் காம்போ தங்கள் படங்களில் ஒரு மேஜிக் செய்து இருப்பார்கள்… அதையே இந்த இயக்குநரும் நிவாஸ் கே பிரசன்னாவும் இந்த படத்தில் நிகழ்ச்த்தி இருக்கிறார்கள் படத்தின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பிளஸ். அதேபோல இந்த படத்திற்குப் பிறகு இவர்கள் மூன்று பேரும் வேற லெவலுக்கு செல்வார்கள். அதில் சந்தேகமே கிடையாது” என்று கூறினார்.
இயக்குநர் ராஜமோகன் பேசும்போது,

ஒரு நாயகன் உதயமாகிறான் என்பது போல, ராஜு இதே அரங்கில் பின்னால் அமர்ந்திருந்து படிப்படியாக முன்னேறி என்று சீனியர் ஜாம்பவான்களுக்கு மத்தியில் வந்து அமரும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார் என்றால் அது அவரது கடின உழைப்பு தான் காரணம், 52 வாரங்களை தன்னிடம் வைத்திருக்கும் இந்த சினிமா ஆளுக்கு ஒரு வெள்ளிக்கிழமையை தருகிறது. அது யாருக்கு என்பது தான் நமக்கு தெரியவில்லை. இது மாதிரி படங்களில் நடித்த பிறகு நிறைய பேர் பாராட்டுவார்கள் ஆனால் எதையும் நம்பி விடாதே ராஜு. நிறைய திட்டுவார்கள் அதையும் முழுதாக நம்பிவிட வேண்டாம். சிரிக்க வைக்கும் பப்பு இந்த படத்தில் என்னை சிந்திக்க வைத்திருக்கிறார். ரொம்பவே அழகான பொழுதுபோக்கு திரைப்படம்” என்று பேசினார்.

தயாரிப்பாளர் கார்த்திக் சந்தானம் பேசும்போது,

15 படங்கள் பண்ணியிருக்கிறேன். ஆனால் நான் தான் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பாளர் என்று கூட பலருக்கு தெரியாது. இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்ததற்கு காரணம் ராஜூ மற்றும் சதீஷ் என்கிற இரண்டு நல்ல உள்ளங்கள் தான். ராஜு என்னுடைய அலுவலகத்திற்கு பலமுறை வந்திருக்கிறார். நிறைய பேசியிருக்கிறோம். ஆனால் ஒரு முறை கூட படம் பண்ண வாய்ப்புக் கொடுங்கள் என அவர் கேட்கவில்லை. அந்த அளவிற்கு அவர் ஒரு மிக நல்ல மனிதர். இந்த படத்தின் தயாரிப்பாளர் வெளிநாட்டிலிருந்து கொண்டு இந்த படத்தை தயாரித்து வந்திருக்கிறார். 12 வருடங்களுக்கு முன்பு நானும் அப்படி வெளிநாட்டில் இருந்தபோது கார்த்திக் சுப்புராஜ் என்னை இங்கே வரவைத்து இந்த பாதைக்கு மாற்றி விட்டார். வந்ததில் வருத்தமில்லை. மிகச் சிறப்பாக தான் போய்க்கொண்டிருக்கிறது” என்றார்.

லெவன் திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் அஜீஸ் பேசும்போது,

“இந்த படத்தை நேற்று சில பர்சனல் காரணங்களால் பார்க்க முடியாமல் போய்விட்டது. ஆனால் அதன்பிறகு இதன் ஸ்நீக் பீக் பார்த்த பின்னர்  தான் இந்த படத்தை பார்க்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன். ஒரே போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள் ஒரே மாதிரியாக கூடிய அபாயம் உண்டு. ஆனால் அப்படி ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்தாலும் எப்படி அதில் வித்தியாசம் விதவிதமாக காட்ட முடியும் என ஒரு புத்தகம் எழுதும் அளவிற்கு சரண்யா மேடம் அதை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்” என்று பேசினார்.

நடிகர் இமான் அண்ணாச்சி பேசும்போது,

“நடிகர் ராஜூ அனைவருடனும் எளிதாக பழகக்கூடிய ஒரு மனிதர். பிக் பாஸ் என்றால் என்னவென்று புரியாமல் இருந்த நிலையில் கூட்டத்தோடு கூட்டமாக நானும் போய்விட்டேன்.. அங்கே உள்ளே செல்லும்போது ராஜூவும் இருந்தார். அங்கிருந்து எங்களது நட்பு பயணம் ஆரம்பித்தது. ஆனால் அந்த வீட்டில் எப்போது பார்த்தாலும் ராஜூவை சுற்றி ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். ஒரு வாரம் கழித்து அவரை நெருங்கி அமர்ந்து கவனித்த போது தான் அவர் யார் என்று தெரிய வந்தது. பிக் பாஸில் அவர் மிகப்பெரிய வெற்றியை பெற்றது போல இந்த பன் பட்டர் ஜாம் படத்திலும் அவர் வெற்றியை பெறுவார்” என்று கூறினார்.

நடிகர் ஈரோடு மகேஷ் பேசும்போது,

“ராஜீவின் வெற்றி என் வெற்றி போல. ஏனென்றால் பத்து வருடத்திற்கு மேலாக அவரை எனக்கு நன்றாக தெரியும். ஆரம்ப காலத்தில் பார்த்த சில பேர் நன்கு வளர்ந்த பிறகு கண்டுகொள்ளாமல் போய்விடும் இந்த காலத்தில் அப்போது இருந்து இப்போது வரை தன்னுடைய ஒவ்வொரு அப்டேட்டையும் என்னிடம் பகிர்ந்து கொள்ளும் அன்பு தம்பி தான் ராஜு. இப்படி ஒரு நல்ல படத்தின் மூலம் அவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியதற்கு இயக்குநர் ராஜூவிற்கு ஒரு சகோதரனாக நன்றி சொல்லிக் கொள்கிறேன். நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஒரு காமெடி ஷோவில் நான் பணியாற்றிய போது அதில் எழுத்தாளராக ராஜூ இருந்தார். மிகப்பெரிய இயக்குனராக வரக்கூடியவர். ஆனால் ஒரு குழப்பத்திலேயே இருப்பார். இந்த படம் வெளியான பிறகு நடிப்பதை மட்டுமே ராஜூ கவனித்தால் போதும்” என்று கூறினார்.

நடிகர் விஜய் ஆதிராஜ் பேசும்போது,

“இந்த படத்தை ஒரு மாதத்திற்கு முன்பு பார்த்து விட்டேன்.. ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை நல்ல ஒரு பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படம்..  படம் ரொம்பவே நல்லா இருக்கிறது. இதன் ரீமேக் உரிமையை யாராவது வேகமாக வாங்குங்கள் இந்த படத்தை பற்றி ஹைதராபாத்தில் கூட பேசி இருக்கிறேன்” என்று பேசினார்.

நடிகர் மைக்கேல் பேசும்போது

“இந்த படத்தில் ராஜூவுடன் பணியாற்றியபோது காட்சிகளில் மட்டுமல்ல, காட்சிகளுக்கு வெளியேவும் மிக ஜாலியாக இருந்தது. இந்த படத்தின் மூலமாக அவருடன் எனக்கு ஒரு நல்ல நட்பு கிடைத்திருக்கிறது. நிவாஸ் கே பிரசன்னாவின்  இசை எனக்கு ரொம்பவே பிடிக்கும். அவருடன் இந்த படத்தில் பணியாற்றியது எனக்கு ரொம்பவே சந்தோஷம். படத்தை எனக்கு கொடுத்ததற்கு இயக்குனர் ராகவிற்கு என் சந்தோஷத்தை தெரியப்படுத்திக் கொள்கிறேன்” என்று பேசினார்

நடிகர் விஜே பப்பு பேசும்போது,
:இங்கே டிரைலர், பாடல் காட்சிகளை போட்டு காட்டிய போது எதிலாவது என் முகம் வந்துவிடுமா என பார்த்தேன். எதிலும் வரவில்லை. படத்திலாவது வந்து விடுமா என இயக்குநரிடம் கேட்டேன். நிச்சயமாக வரும் என்று சொன்னார். இயக்குனர் கோகுல் சாருக்கு ரொம்பவே நன்றி. என்னுடைய இந்த படத்தின் கதாபாத்திரமான ஏகாஷ் என்கிற பெயரை குறிப்பிட்டு பாராட்டினார். இந்த படம் வெளியான பிறகு உங்களை பப்பு என்பதை விட ஏகாஷ் என்றுதான் அழைப்பார்கள் என இயக்குநர் ராகவ் கூட என்னிடம் இதற்கு முன்பு சொல்லி இருக்கிறார். நல்ல படத்தில் ஒரு பாகமாக இருப்பது முக்கியம். திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு எனக்கு வெளியாகும் படம் இது. எனக்கு உண்மையிலேயே சந்தோஷமான தருணமாக இது அமைந்திருக்கிறது” என்று பேசினார்.
Previous Post

’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

Next Post

தருண் சுதீர் தயாரிப்பில், ராண்ணா நடிக்கும் ‘ஏழுமலை’ படத்தின் டைட்டில் டீசரை — சிவராஜ்குமார் மற்றும் ஜோகி பிரேம் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர் !!

Next Post

தருண் சுதீர் தயாரிப்பில், ராண்ணா நடிக்கும் 'ஏழுமலை' படத்தின் டைட்டில் டீசரை — சிவராஜ்குமார் மற்றும் ஜோகி பிரேம் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர் !!

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.