• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

வில் (உழில்) – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

by Tamil2daynews
October 13, 2025
in விமர்சனம்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
வில் (உழில்) – விமர்சனம் 

தொழிலதிபர் ஒருவர் தனது சொத்துக்களை தனது இரண்டு மகன்களுக்கு சரிசமமாக பிரித்து உழில் எழுதி வைக்கிறார். அதே சமயம், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றை மட்டும் அலக்கியா பெயரில் எழுதி வைத்துவிட்டு இறந்து விடுகிறார். யார் என்றே தெரியாத பெண்ணுக்கு தந்தை எழுதி வைத்த அந்த வீட்டை அபகறிப்பதற்காக வேறு ஒரு பெண்ணை அலக்கியா என்று கூறி தொழிலதிபரின் மகன்  நீதிமன்றத்தில் நிறுத்துகிறார்கள். ஆனால், அந்த பெண் மீது சந்தேகமடையும் நீதிபதி சோனியா அகர்வால், இந்த வழக்கின் உண்மையை விசாரிக்கும் பொறுப்பை நீதிமன்ற போலீஸ் சப் இன்ஸ்பெக்டரான விக்ராந்திடம் ஒப்படைக்கிறார்.

அதன்படி விசாரணையை மேற்கொள்ளும் சப் இன்ஸ்பெக்டர் விக்ராந்த் உண்மையான அலக்கியாவை கண்டுபிடித்தாரா ?, அவர் யார் ?, அவருக்கு தொழிலதிபர் தன் வீட்டை எழுதி வைத்தது ஏன் ? ஆகிய கேள்விகளுக்கான விடைகள் தான் ‘வில்’.

நீதிபதியாக நடித்திருக்கும் சோனியா அகர்வால், தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். இதுவரை சினிமாவில் பார்த்திராத நீதிமன்ற காட்சிகள் என்பதால், சோனியா அகர்வாலின் ஒவ்வொரு அசைவுகளும் உண்மையான நீதிபதியை பிரதிபலிப்பது போல் உள்ளது.
கதையின் மையப்புள்ளியாக நடித்திருக்கும் அலக்கியா, சாதாரண முகமாக இருந்தாலும் பலவித உணர்வுகளை தனது கண்கள் மூலமாக வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். தந்தையை காப்பாற்ற போராடும் அவரது வாழ்க்கை திசை மாறுவது, அதை எதிர்கொள்வது என்று அழுத்தமான கதாபாத்திரத்திற்கு தனது அளவான நடிப்பு மூலம் பலம் சேர்த்திருக்கிறார்.

சப் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் விக்ராந்த், சிறப்பு தோற்றம் போல் இருந்தாலும், படம் முழுவதும் பயணித்து தனது கதாபாத்திரத்திற்கும், திரைக்கதைக்கும் பலம் சேர்த்திருக்கிறார்.

தொழிலதிபர், அவரது மகன்கள் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் புதியவர்களாக இருந்தாலும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

செளரப் அகர்வால் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை தனித்து நிற்கவில்லை என்றாலும் கதைக்கு ஏற்ப பயணித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் டி.எஸ்.பிரசன்னாவின் கேமரா காட்சிகளை தரமாக படமாக்கியிருக்கிறது. நீதிமன்ற காட்சிகளை எதார்த்தமாக படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் பாடல் காட்சியை கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார்.

விறுவிறுப்பாக பயணிக்க வேண்டிய கதை என்றாலும், கதை மாந்தர்களின் உணர்வுகளை பார்வையாளர்களிடத்தில் கடத்துவதில் அதிகம் கவனம் செலுத்தியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஜி.தினேஷ்.

எழுதி இயக்கியிருக்கும் எஸ்.சிவராமன், உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு, சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரை உணர்வுப்பூர்வமான படைப்பாக கொடுக்க முயற்சித்திருக்கிறார்.

நீதிமன்ற காட்சிகள் இதுவரை நாம் பார்த்திராத வகையில் உண்மை தன்மையோடு இருப்பது இப்படத்திற்கு மிகப்பெரிய பலம்.

பொய்யான வழக்கின் பின்னணியை கண்டறிய முயற்சிக்கும் நீதிபதி, அந்த வழக்கின் விசாரணையில் மற்றொரு மோசடி வழக்கு என்று திரைக்கதை சுவாரஸ்யமாக நகர்ந்தாலும், தொழிலதிபர் இளம் பெண்ணுக்கு சொத்தை எழுதி வைத்தது ஏன்? என்பதற்கான காரணம் பார்வையாளர்களின் யூகங்களுக்கு ஏற்ப அமைந்திருப்பது படத்தை சற்று தொய்வடைய செய்கிறது. இருந்தாலும், நீதிமன்ற காட்சிகள், ஒரு வழக்கை நீதிபதி கையாளும் விதம் ஆகியவை படத்தை ரசிக்க வைக்கிறது.

மொத்தத்தில் வில் நியாயமான நீதியை வெல்லும்.
Previous Post

“ராம் அப்துல்லா ஆண்டனி” படத்தில் இணைந்துள்ள சௌந்தரராஜா !

Next Post

இசைஞானி இசையில் மைலாஞ்சி திரைப்பட இசை வெளியீட்டு விழா.

Next Post

இசைஞானி இசையில் மைலாஞ்சி திரைப்பட இசை வெளியீட்டு விழா.

Popular News

  • கேம் ஆப் லோன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • Music Director T.R.Kuralarasan – Nabeelah R Ahmed Wedding Reception Stills

    5 shares
    Share 5 Tweet 0
  • “‘மேட் இன் கொரியா’ கதைக்கும் என் கதாபாத்திரத்திற்கும் தனிப்பட்ட தொடர்பு உண்டு”- நடிகை பிரியங்கா மோகன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜின் “சம்பராலா ஏடிகட்டு (Sambarala Yetigattu) (SYG)” படத்தின் ஒரு புதிய சினிமா உலகத்தை அறிமுகப்படுத்தும், “அசுர ஆகமனா ” (Asura Aagamana) சிறு முன்னோட்டம் !

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘டீசல்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஶ்ரீராம் கார்த்திக் நடித்துள்ள மெஸன்ஜர் படத்தின் டிரெய்லர் வெளியீடு

October 16, 2025

‘டீசல்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

October 16, 2025

மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜின் “சம்பராலா ஏடிகட்டு (Sambarala Yetigattu) (SYG)” படத்தின் ஒரு புதிய சினிமா உலகத்தை அறிமுகப்படுத்தும், “அசுர ஆகமனா ” (Asura Aagamana) சிறு முன்னோட்டம் !

October 16, 2025

“‘மேட் இன் கொரியா’ கதைக்கும் என் கதாபாத்திரத்திற்கும் தனிப்பட்ட தொடர்பு உண்டு”- நடிகை பிரியங்கா மோகன்!

October 16, 2025

கேம் ஆப் லோன் – விமர்சனம்

October 15, 2025

“ஒரு நடிகனாக ‘லெகஸி’ என்னை குஷிப்படுத்தியது”- நடிகர் மாதவன்!

October 15, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.