• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“‘டியூட்’ படத்தில் ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன். அதை பிரதீப் ரங்கநாதன் சிறப்பாக செய்திருக்கிறார் “- இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!

by Tamil2daynews
October 18, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“‘டியூட்’ படத்தில் ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன். அதை பிரதீப் ரங்கநாதன் சிறப்பாக செய்திருக்கிறார் “- இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!

 

இந்த தீபாவளி பண்டிகைக்கு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக ‘டியூட்’ உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருக்க இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் கீர்த்தீஸ்வரன் ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் அணுகியுள்ளார். மிகப்பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் ‘டியூட்’ திரைப்படம் அக்டோபர் 17 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஒரு இயக்குநர் படத்தை உருவாக்குவது மட்டுமல்லாது அந்தப் படத்தை சுற்றிலும் எந்தளவுக்கு எதிர்பார்ப்பை உருவாக்குகிறோம் என்பதிலும் படத்தின் வெற்றி அடங்கும். அந்த வகையில், படத்தில் இருந்து வெளியான முதல் பாடலான ‘ஊரும் பிளட்டும்…’ முதல் டிரெய்லர் வரை படம் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் மிகச்சரியாக கொண்டு சேர்த்துள்ளார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன். படம் வெளியாவதற்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் படம் ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் கீர்த்தீஸ்வரன்.
இதுகுறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, ” என் மீது நம்பிக்கை வைத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. சினிமாத்துறையில் மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமான மைத்ரி கோலிவுட்டில் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘குட் பேட் அக்லி’ மூலம் அடியெடுத்து வைத்தது. அப்படி இருக்கையில் அவர்கள் தமிழில் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு அனுபவம் வாய்ந்த பெரிய இயக்குநர்களை தேர்ந்தெடுத்து இருக்கலாம். ஆனால், அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கை மிகப்பெரியது. இதற்கு நன்றி!” என்றார்.

மேலும் பேசியதாவது, “‘டியூட்’ திரைப்படத்தில் நாங்கள் பணிபுரிய தொடங்கியபோது அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் சென்றடையும் வகையில் படம் இருக்க வேண்டும் என்று விரும்பினோம். இளைஞர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினருக்கும் மிகப்பிடித்த ஹீரோவாக வளர்ந்து வருகிறார் பிரதீப். படத்தில் அவரது கதாபாத்திரம் முலம் ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன். பிரதீப்பும் அதை சரியாக புரிந்து கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார்”.
படம் பற்றி கேட்டபோது, “ரசிகர்களுக்கு  தீபாவளிக்கு சிறந்த பரிசாக எண்டர்டெயின்மெண்ட் பேக்கேஜாக ‘டியூட்’ இருக்கும். மமிதா பைஜூ, சரத்குமார் சார் என எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இதெல்லாம் சேர்ந்து நிச்சயம் ‘டியூட்’ திரைப்படம் முழுமையான எண்டர்டெயினராக இருக்கும்” என்றார்.

நகைச்சுவை, ஹீரோயிசம் மற்றும் எமோஷன் என உருவாகியுள்ள ‘டியூட்’ திரைப்படம் அக்டோபர் 17 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிகர்கள்: பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, ஆர். சரத் குமார், ஹிருது ஹாரூன், ரோகிணி, ஐஸ்வர்யா சர்மா, டிராவிட் செல்வம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக்குழு விவரம்:
தயாரிப்பு நிறுவனம்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்,
தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர்,
இணைத்தயாரிப்பாளர்: அனில் யெர்னேனி,
இசை: சாய் அபயங்கர்.

Previous Post

“‘டீசல்’ படம் இந்த தீபாவளிக்கு ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையரங்க அனுபவத்தைத் தர இருக்கிறது”- தயாரிப்பாளர் தேவராஜூலு மார்க்கண்டேயன்!

Next Post

“உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு ‘டீசல்’ படம் புதிய அனுபவமாக இருக்கும். கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும்”- நடிகர் ஹரிஷ் கல்யாண்!

Next Post

"உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு 'டீசல்' படம் புதிய அனுபவமாக இருக்கும். கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும்"- நடிகர் ஹரிஷ் கல்யாண்!

Popular News

  • டங்கி : ஷாருக்கானின் ரசிகர்கள் மேள தாளத்துடன் பட்டாசுகளையும் வெடித்து மும்பை கெயிட்டி கேலக்ஸியில் முதல் நாள் முதல் காட்சியை காணத் தொடங்கினர். இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது தொடர்பாக ஷாருக்கான் குறிப்பிடுகையில், ”நண்பர்களே மற்றும் தோழிகளே.. நல்ல நிகழ்ச்சிக்கு நன்றி” என தெரிவித்திருக்கிறார்.‌

    0 shares
    Share 0 Tweet 0
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் ‘காசு’ எனும் தலைப்பிலான புதிய பாடலை AMAZON PRIME VIDEO வெளியிட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • மாநில அளவிலான பாரா பளுதூக்கும் போட்டியில் வெற்றி வாகை சூடிய 9 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.*

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.