• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இந்திய சினிமா ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் ‘புஷ்பா-2: தி ரூல்’ படத்தின் பிரம்மாண்டமான டிரெய்லர் வெளியீட்டு விழா நவம்பர் 17 அன்று பாட்னாவில் நடக்கிறது!

by Tamil2daynews
November 14, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இந்திய சினிமா ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் ‘புஷ்பா-2: தி ரூல்’ படத்தின் பிரம்மாண்டமான டிரெய்லர் வெளியீட்டு விழா நவம்பர் 17 அன்று பாட்னாவில் நடக்கிறது!

 

’புஷ்பா: தி ரைஸ்’ படத்தில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் பேசிய ‘புஷ்பான்னா பூ நினைச்சியா, நெருப்புடா’ என்ற வசனம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்குப் பிடித்த ஒன்றாக மாறியிருக்கிறது. சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடித்த ’புஷ்பா: தி ரைஸ்’ திரைப்படம் தெலுங்கு சினிமாவை புதிய உயரங்களுக்கு கொண்டு சென்றது. இதன் அடுத்த பாகம் ‘புஷ்பா2: தி ரூல்’ பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் வேட்டை நடத்த டிசம்பர் 5, 2024 அன்று வெளியாகிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸின் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் ஆகியோர், சுகுமார் ரைட்டிங்ஸ் உடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். படத்திற்கான புரோமோஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. பாட்னா, கொல்கத்தா, சென்னை, கொச்சி, பெங்களூரு, மும்பை மற்றும் ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களில் புரோமோஷனல் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் பாட்னாவில் நவம்பர் 17 ஆம் தேதி பிரமாண்டமான டிரெய்லர் வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது.

இந்த நிகழ்வை அறிவிப்பதற்காக அல்லு அர்ஜுன் துப்பாக்கியை கையில் வைத்திருப்பது போன்ற போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ’புஷ்பா-2: தி ரூல்’ பற்றிய எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ராவ் ரமேஷ், சுனில், அனசுயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Previous Post

இந்தியாவின் சயின்ஸ் ஃபிக்சன் பிளாக் பஸ்டர் ஹிட்டான ‘கல்கி 2898 கிபி ‘ எனும் திரைப்படம் – ஷோகாட்சு கொண்டாட்டத்தின் போது ஜப்பான் நாட்டில் 2025 ஜனவரி மூன்றாம் தேதியன்று வெளியிடப்பட உள்ளது

Next Post

எஸ்.என்.எஸ் பிக்சர்ஸ் சார்பில், ஹேமலதா சுந்தர்ராஜ் தயாரிக்கும் “எனை சுடும் பனி”

Next Post

எஸ்.என்.எஸ் பிக்சர்ஸ் சார்பில், ஹேமலதா சுந்தர்ராஜ் தயாரிக்கும் "எனை சுடும் பனி"

Popular News

  • சிக்மா’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • சிட்டுக்குறிஞ்சி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நடன அசைவுகளை துல்லியமாக ஆடுவதை விட அதை ரசித்து ஆடுவேன்’ – சாய் பல்லவி

    0 shares
    Share 0 Tweet 0
  • எனர்ஜெட்டிக் ஸ்டார் ராம் போதினேனி இயக்குநராக அறிமுகமாகும் #RaPo23 திரைப்படத்தின் சுவாரஸ்யமான ப்ரீ-லுக் வெளியீடு – ‘தி ஸ்டோரி ஆஃப் எ லோன் வுல்ஃப்’ – விரைவில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் க்ளிம்ப்ஸ் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • தேசிய விருது பெற்ற சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் – ரெடாக்டட் ஸ்டுடியோஸுடன் இணைந்து தெலுங்கு – தமிழில் உருவாகும் புதிய காதல் திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மெடிக்கல் கிரைம் திரில்லர் ‘நிறம்’ நவம்பர் 27 முதல் திரையரங்குகளில்!

November 26, 2026

கல்விக்காகத் தனது சொத்தில் பாதியை எழுதி வைத்த வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!

November 26, 2026

ரசிகர்களுக்கு சிறந்த திரையனுபவத்தைத் தரும் திரைப்படம் ‘சிக்னல் அட் 11.30′” – இசையமைப்பாளர் டி. இமான்!

November 26, 2026

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், பிரேம் குமார் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் நடிக்கும் படத்திற்கு ‘அசரீரி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது!

November 26, 2026

சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய திரைப்படம்!

November 26, 2026

சிட்டுக்குறிஞ்சி – விமர்சனம்

November 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.