• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விஷ்ணு மஞ்சு – ப்ரீத்தி முகுந்தனின் மாயாஜால காதல் கதையை விவரிக்கும் ’கண்ணப்பா’ படத்தின் பாடல் வெளியானது!

by Tamil2daynews
March 11, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

விஷ்ணு மஞ்சு – ப்ரீத்தி முகுந்தனின் மாயாஜால காதல் கதையை விவரிக்கும் ’கண்ணப்பா’ படத்தின் பாடல் வெளியானது!

 

‘கண்ணப்பா’ திரைப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் மக்களிடம்  ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் நிலையில், தற்போது நாயகன் விஷ்ணு மஞ்சு – நாயகி ப்ரீத்தி முகுந்தனின் ஆத்மார்த்தமான காதல் கதையை விவரிக்கும் காதல் பாடல் வெளியாகியுள்ளது. இந்த இனிமையான காதல் பாடல் மெல்லிசை ஷான் மற்றும் சாஹிதி சாகந்தி ஆகியோரல் பாடப்ப்ட்டுள்ளது. ஸ்டீபன் தேவஸ்ஸி இசையில், கிரீஷ் நகோடின் இதயப்பூர்வமான வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களின் மனங்களை மயக்கி வருகிறது.
மனதை மயக்கும் இனிமையான குரல், மனதைத் தொடும் பாடல் வரிகள் மற்றும் கனவு உலகத்தை நேரில் பார்ப்பது போன்ற காட்சிகள் ஆகியவை ஒன்றிணைந்தது போன்ற உணர்வை இப்பாடல் ரசிகர்களிடம் உருவாக்கியுள்ளது. விஷ்ணு மஞ்சு மற்றும் ப்ரீத்தி முகுந்தனின் திரை இருப்பு மற்றும் இருவருக்கும் இடையிலான ஆத்மார்த்தமான காதலையும் இப்பாடல் உணர்த்துவதோடு, பிரமாண்டமான ஆன்மீக காவியமாக உருவாகியுள்ள ‘கண்ணப்பா’ படத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
பிரமிக்க வைக்கும் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாடல், காதலை மட்டும் காட்டாமல் கண்ணப்பாவில் ஆழமாக ஓடும் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. இது காதல், நம்பிக்கை மற்றும் பக்தி ஆகியவற்றை வெளிக்காட்டுவதோடு, இவை அனைத்தும் சக்திவாய்ந்த உணர்ச்சிகளுடன் பிணைக்கப்பட்டிருப்பதை உணர வைக்கிறது.
இந்த பாடல் அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருவதோடு, ஆன்மீக ரீதியிலான ஒரு பிரமாண்ட காவியத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அம்சங்களில் இப்பாடலும் ஒன்றாக அமைந்துள்ளது.
சிவ பக்தரான கண்ணப்பாவின் புராணக் கதையின் காவியமான கண்ணப்பா, இந்த ஆண்டின் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். விஷ்ணு மஞ்சு கண்ணப்பாவாகவும், ப்ரீத்தி முகுந்தனுடன் மோகன்லால், அக்‌ஷய் குமார், பிரபாஸ் மற்றும் காஜல் அகர்வால் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
கண்ணப்பா ஏப்ரல் 25, 2025 அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.
Previous Post

“கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை TJ.பானுவால் இணைந்தது இந்தியாவும் இலங்கையும்…

Next Post

‘பெருசு’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

Next Post

‘பெருசு’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

Popular News

  • இயக்குநர் ஷிவ் மாதவ்வின் புதிய சினிமா பயணம் ; ‘3.6.9’ அனுபவங்களும் அடுத்தக் கட்ட பிரம்மாண்டமும்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபூடி, பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி-சீரிஸ் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் ‘ஃபௌஜி‘ – படத்திலிருந்து சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் புதிய போஸ்டர் வெளியீடு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்டாண்ட் அப் காமெடியில் வரலாறு படைத்த கூத்து கலைஞர் மாயா எஸ். கிருஷ்ணன் ‌!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 17, 2026

குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

August 17, 2026

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டோர்ம்- The Dorm’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

August 17, 2026

’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

August 17, 2026

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51 ஆண்டுகாலப் பயணம்: ‘தர்மன்’ படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனை

August 17, 2026

‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘சம்பராலா ஏடி கட்டு- SYG ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு : 2027 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது

August 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.