• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஜூன் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும்” திருக்குறள் ” திரைப்படம்.

by Tamil2daynews
June 9, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஜூன் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும்” திருக்குறள் ” திரைப்படம்.

 

பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ” Welcome Back Gandhi ” என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது  திருக்குறளை மையமாக வைத்து மிகப் பிரம்மாண்டமாகத்  ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.

இப்படத்தில் வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனாக கொட்டாச்சி ஆகியோரோடு, குணாபாபு, பாடினி குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார்.

 

 A.M.எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 

கலை இயக்குநராக சுரேஷ் கலேரியும், ஆடைவடிவமைப்பாளராக சுரேஷ் குமாரும் பணியாற்றியுள்ளனர்.

 

இத்திருப்பணியில் மதுரை டி.பி.ராஜேந்திரன் முதன்மைப் பங்களிப்புச் செய்துள்ளார். வி.ஐ.டி.வேந்தர் கோ.விஸ்வநாதன் தலைமையிலான  தமிழியக்கமும் இப்பணியில் இணைந்துள்ளது.  ரமணா கம்யூனிகேஷன்ஸ் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.

 

தயாரிப்பு நிர்வாகம் – S. ஜெய்சங்கர்
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ் 
கதை, திரைக்கதை, வசனம் – செம்பூர்.கே.ஜெயராஜ்

காமராஜ், Welcome Back Gandhi,  படத்தை இயக்கிய A.J.பாலகிருஷ்ணன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

படம் பற்றி அவர் நம்மிடயே பகிர்ந்தவை…
அறம் சார் வாழ்வியலை மானுடர்க்கு போதிப்பதில் உலகில் முன்னிலை வகிக்கும் நூல் திருக்குறள். திருக்குறளின் முப்பாலை மையக் கருவாகக் கொண்டு, இப்படத்திற்கான திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.

படைப்பினூடாக படைப்பாளியைக் கண்டடையும் முயற்சியில் திருவள்ளுவரும் இப்படத்தில் ஒரு பாத்திரமாக வருகிறார். கூடவே வாசுகியும், அதோடு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வாழ்வியலும் இத்திரைப்படத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது.

 

காதலோடு, வீரமும் தமிழர் வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்றாகும். அன்றைய தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் போர்க்களக் காட்சிகளும் மிகுந்த பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளன. 

இத்திரைப்படத்தைப் பார்த்த இசைஞானி இளையராஜா, உடனடியாக இசையமைக்க இசைவு தெரிவித்தார். அத்துடன் இப்படத்திற்காக, சங்க இலக்கியச் சொற்களோடு, கவித்துவமும், பொருட்செறிவும் மிக்க இரு பாடல்களையும் எழுதியுள்ளார்.முத்தமிழில், முதல் தமிழுக்கான உயரிய படைப்பிற்கு, இரண்டாம் தமிழின் அரியணையில் வீற்றிருக்கும் இசைஞானி இசையமைப்பது, இத்தனை ஆண்டுகால தமிழுக்கான வரலாற்றில் ஒரு அற்புத நிகழ்வாகும்.

 

ஜி.யூ.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பின்பு தான், திருக்குறள் உலக அளவில் அறிஞர்களின் கவனத்தை ஈர்த்தது. அதுபோல் இந்நிகழ்விற்குப் பின் சர்வதேச அளவில் உலக மக்களின் கவனத்தையும் நிச்சயம் இந்த திருக்குறள் படம் ஈர்க்கும் என்கிறார் இயக்குனர் A.J. பாலகிருஷ்ணன்.

 

திருக்குறள் படம் ஜூன் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
Previous Post

லட்சுமி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பான புரோடக்ஷன் நம்பர் 27 இன்று இனிதே துவங்கியது.

Next Post

“சன் பிக்சர்ஸ் – ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் – அட்லீ கூட்டணியில் இணைந்த தீபிகா படுகோன்

Next Post

"சன் பிக்சர்ஸ் - ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன் - அட்லீ கூட்டணியில் இணைந்த தீபிகா படுகோன்

Popular News

  • சர்தார் 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

September 11, 2026

“இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

September 11, 2026

சர்தார் 2 – விமர்சனம்

September 11, 2026

இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

September 11, 2026

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.