• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தனுஷ் நடிக்கும் ‘குபேரா’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று மாலை வெளியானது!

by Tamil2daynews
November 17, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தனுஷ் நடிக்கும் ‘குபேரா’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று மாலை வெளியானது!

 

புகழ்பெற்ற சேகர் கம்முலாவின் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘குபேரா’வின் க்ளிம்ப்ஸ் வீடியோ, ‘கார்த்திகை பௌர்ணமி’ பண்டிகையை முன்னிட்டு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது, இந்த க்ளிம்ப்ஸ் வீடியோவானது இந்திய சினிமா ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. திறமைமிக்க தனுஷ், ‘கிங்’ நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இத்திரைப்படம் சிறந்த காட்சிகள் மற்றும் உணர்ச்சிகரமான விருந்தாகவும் ரசிகர்களுக்கு அமையும் என்பது உறுதியாகியுள்ளது. இதில் ‘ஜிம் சர்ப்’ மற்றும் ‘தலிப் தஹில்’ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதுவரை வெளியிடப்பட்ட போஸ்டர்களில் ‘தனுஷ்’ நீண்ட தலைமுடி மற்றும் தாடி கொண்ட பிச்சைக்காரன் போன்ற தோற்றத்துடன் காணப்பட்டார். இருப்பினும், இன்றைய க்ளிம்ப்ஸ் வீடியோவில் வெளியான ஒரு புதிய தோற்றம் ரசிகர்களையும் பார்வையாளர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது, அதில் அவர் குறைவான தலைமுடி மற்றும் முழுவதும் முகச் சவரம் செய்த முகத்துடன், ஒரு பணக்காரரைப் போல தோற்றமளிக்கிறார். இது உற்சாகத்தை அதிகப்படுத்தி, குபேராவின் கதைக்களத்தை பற்றிய ஆர்வத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படத்தில் ‘கிங்’ நாகர்ஜுனா ஒரு சிக்கலான கதாபாத்திரத்தில் நடிக்கிறார், இது பார்வையாளர்களுக்கு ஒரு புதுமையான மற்றும் தனித்துவமான அனுபவத்தை வழங்கும்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோ கிரியேஷன்ஸ் தயாரிக்கும் ‘குபேரா’ திரைப்படம், ‘இசை ஜாம்பவான்’ தேவி ஸ்ரீ பிரசாத்தின் சிறப்பான இசை, நிகேத் பொம்மியின் பிரமிப்பூட்டும் ஒளிப்பதிவு மற்றும் தயாரிப்பு வடிவமைப்பில் தோட்டா தரணியின் கலைநயம் ஆகியவற்றை காட்சிப்படுத்த உள்ளது. இப்படத்தை ஆர். கார்த்திகா ஸ்ரீநிவாஸ் திறம்பட படத்தொகுப்பு செய்து, ஒரு வசீகரிக்கும் கதை ஓட்டத்தை உறுதி செய்துள்ளார். ‘குபேரா’வின் உலகத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்துவமான உலகம் வடிவமைக்கப்பட்டுள்ளதால், அவற்றை தயாரிப்பாளர்கள் பட வெளியீட்டிற்கு முன்னதாக வெளியிடுவார்கள்.
தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள ‘குபேரா’, இந்தியா முழுவதும் பலதரப்பட்ட பார்வையாளர்களை சென்றடைவதை நோக்கமாகக் கொண்டு மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. க்ளிம்ப்ஸ் வீடியோ திரைப்படத்தின் ஈர்க்கக்கூடிய கதைக்களம் மற்றும் வளமான காட்சிகளுக்கு உறுதி அளிப்பதுடன், இது ஒரு தரமான சினிமா அனுபவத்திற்கு களம் அமைக்கிறது.

நடிகர்கள்:-
தனுஷ்
நாகார்ஜுனா
ராஷ்மிகா மந்தனா
ஜிம் சர்ப்
தலிப் தஹில்

படக்குழு:-
எழுத்து மற்றும் இயக்கம்: சேகர் கம்முலா
தயாரிப்பு: ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோ கிரியேஷன்ஸ்
தயாரிப்பாளர்: சுனில் நரங் மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ்
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு: நிகேத் பொம்மி
படத்தொகுப்பு: கார்த்திகா ஸ்ரீநிவாஸ் ஆர்.
தயாரிப்பு வடிவமைப்பு: தோட்டா தரணி
ஆடை வடிவமைப்பு: கல்யாண் ஸ்ரீராம் மற்றும் பூர்வா ஜெயின்
விளம்பர வடிவமைப்பு: கபிலன்
மக்கள் தொடர்பு: ரியாஸ் கே அஹ்மத் (V4U Medi

Previous Post

தனுஷ் மீது நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டு..!

Next Post

‘நிறங்கள் மூன்று’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!

Next Post

'நிறங்கள் மூன்று' படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!

Popular News

  • சிக்மா’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • சிட்டுக்குறிஞ்சி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நடன அசைவுகளை துல்லியமாக ஆடுவதை விட அதை ரசித்து ஆடுவேன்’ – சாய் பல்லவி

    0 shares
    Share 0 Tweet 0
  • எனர்ஜெட்டிக் ஸ்டார் ராம் போதினேனி இயக்குநராக அறிமுகமாகும் #RaPo23 திரைப்படத்தின் சுவாரஸ்யமான ப்ரீ-லுக் வெளியீடு – ‘தி ஸ்டோரி ஆஃப் எ லோன் வுல்ஃப்’ – விரைவில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் க்ளிம்ப்ஸ் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • தேசிய விருது பெற்ற சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் – ரெடாக்டட் ஸ்டுடியோஸுடன் இணைந்து தெலுங்கு – தமிழில் உருவாகும் புதிய காதல் திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மெடிக்கல் கிரைம் திரில்லர் ‘நிறம்’ நவம்பர் 27 முதல் திரையரங்குகளில்!

November 26, 2026

கல்விக்காகத் தனது சொத்தில் பாதியை எழுதி வைத்த வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!

November 26, 2026

ரசிகர்களுக்கு சிறந்த திரையனுபவத்தைத் தரும் திரைப்படம் ‘சிக்னல் அட் 11.30′” – இசையமைப்பாளர் டி. இமான்!

November 26, 2026

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், பிரேம் குமார் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் நடிக்கும் படத்திற்கு ‘அசரீரி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது!

November 26, 2026

சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய திரைப்படம்!

November 26, 2026

சிட்டுக்குறிஞ்சி – விமர்சனம்

November 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.