• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அமரர் இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்களின் நல்லாசியுடன், மித்துன் மாணிக்கம் இயக்கி நடிக்கும் ‘ஃபேமிலி பாய்’ படத்தின் ‘அப்பா உன் ஆராரிரோ’ பாடலை வெளியிட்ட சாந்தனு பாக்யராஜ்!

by Tamil2daynews
November 26, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அமரர் இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்களின் நல்லாசியுடன், மித்துன் மாணிக்கம் இயக்கி நடிக்கும் ‘ஃபேமிலி பாய்’ படத்தின் ‘அப்பா உன் ஆராரிரோ’ பாடலை வெளியிட்ட சாந்தனு பாக்யராஜ்!

 

அப்பாவின் அருமையையும், அவரது அன்பையும், பிரிவால் ஏற்படும் ஏக்கத்தையும் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் வகையில் இப்பாடல் உருவாகியுள்ளது. கேட்போரின் மனதை நெகிழச் செய்யும் உணர்வுப்பூர்வமான மெலடிப் பாடலாக அமைந்துள்ள ‘அப்பா உன் ஆராரிரோ’, தந்தை – மகன் உறவின் உணர்வுகளை இசையின் வழியே அழகாகக் கடத்துகிறது.

இப்பாடலுக்கு நிர்மல் JP இசையமைத்திருக்கிறார். மித்துன் மாணிக்கம் பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். தேசிய விருது பெற்ற பின்னணிப் பாடகர் சுந்தரய்யர் மற்றும் வெங்கட்ரமணன் இணைந்து இப்பாடலைப் பாடியிருக்கிறார்கள். தந்தையின் அன்பையும், குடும்ப உறவுகளின் உணர்வுகளையும் மையப்படுத்திய இப்பாடல், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

இயக்குநர் மித்துன் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மித்துன் மாணிக்கம், எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார், நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள்தாஸ், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கார்த்திக் கே. கதிரவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜிஜேந்திரன் V படத்தொகுப்புப் பணிகளையும், C. K. முஜிபுர் ரஹ்மான் கலை இயக்கப் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, குடும்பப் பின்னணியில் ஃபேமிலி டிராமா, ஆக்‌ஷன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

மெக்கானிக் பிக்சர்ஸ் (Mechanic Pictures) நிறுவனம் சார்பில் மித்துன் மாணிக்கம் தயாரித்துள்ள இப்படத்தை, மில்லினியல்ஸ் மூவி புரொடக்ஷன் LLP (Millennials Movie Production LLP) நிறுவனம் சார்பில் முஹம்மத் கனி ஃபைசல் மற்றும் டாக்டர் கே. அருண் ஆறுமுகம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தைத் தமிழகம் முழுவதும் பலூன் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடலான ‘தீராகணம்’ வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பாடலான ‘அப்பா உன் ஆராரிரோ’ குடும்ப உறவுகளின் மற்றொரு உணர்வுப்பூர்வமான பக்கத்தை வெளிப்படுத்துகிறது. வரும் டிசம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘ஃபேமிலி பாய்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை இந்தப் பாடல் மேலும் அதிகரித்துள்ளது

https://www.youtube.com/watch?v=e_rP__C_fHc
Previous Post

ஆக்டோபஸ் – விமர்சனம்

Next Post

“’சிக்னல் அட் 11.30′ திரைப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தைத் தரும்!”- நடிகை பவ்யா திரிகா

Next Post

“'சிக்னல் அட் 11.30' திரைப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தைத் தரும்!"- நடிகை பவ்யா திரிகா

Popular News

  • மெடிக்கல் கிரைம் திரில்லர் ‘நிறம்’ நவம்பர் 27 முதல் திரையரங்குகளில்!

    0 shares
    Share 0 Tweet 0
  • கல்விக்காகத் தனது சொத்தில் பாதியை எழுதி வைத்த வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ரசிகர்களுக்கு சிறந்த திரையனுபவத்தைத் தரும் திரைப்படம் ‘சிக்னல் அட் 11.30′” – இசையமைப்பாளர் டி. இமான்!

    0 shares
    Share 0 Tweet 0
  • வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், பிரேம் குமார் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் நடிக்கும் படத்திற்கு ‘அசரீரி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மெடிக்கல் கிரைம் திரில்லர் ‘நிறம்’ நவம்பர் 27 முதல் திரையரங்குகளில்!

November 26, 2026

கல்விக்காகத் தனது சொத்தில் பாதியை எழுதி வைத்த வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!

November 26, 2026

ரசிகர்களுக்கு சிறந்த திரையனுபவத்தைத் தரும் திரைப்படம் ‘சிக்னல் அட் 11.30′” – இசையமைப்பாளர் டி. இமான்!

November 26, 2026

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், பிரேம் குமார் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் நடிக்கும் படத்திற்கு ‘அசரீரி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது!

November 26, 2026

சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய திரைப்படம்!

November 26, 2026

சிட்டுக்குறிஞ்சி – விமர்சனம்

November 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.