• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இளையராஜா வாழ்க்கை வரலாற்றுத் திரைப்பட துவக்க விழா!!

by Tamil2daynews
March 20, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இளையராஜா வாழ்க்கை வரலாற்றுத் திரைப்பட துவக்க விழா!!

 

மிகப்பெரும் எதிர்பார்ப்புக்குப் பிறகு, மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘இளையராஜா’ படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா, சென்னையில் இன்று காலை நடைபெற்றது. நடிகர் தனுஷ் இளையராஜாவாக தோற்றமளிக்கும் அழகான போஸ்டரை வெளியிட்டு, உலகநாயகன் கமல்ஹாசன் இப்படத்தினை துவக்கி வைத்து, வாழ்த்து தெரிவித்தார். கேப்டன் மில்லர் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தினை இயக்குகிறார்.

கனெக்ட் மீடியா, பிகே பிரைம் புரொடக்ஷன் மற்றும் மெர்குரி மூவீஸ் ஆகிய நிறுவனங்கள் இந்தப் படத்தை வழங்குகின்றன. ஸ்ரீராம் பக்திசரண் சி.கே. பத்ம குமார், வருண் மாத்தூர், இளம்பரிதி கஜேந்திரன் மற்றும் சௌர்ப் மிஸ்ரா ஆகியோர் இப்படத்தினை தயாரிக்கின்றனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ்  தயாரிப்பு வடிவமைப்பு செய்கிறார்.

இந்த நிகழ்வில் இசைஞானி இளையராஜா, இயக்குநர்கள் வெற்றிமாறன் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகியோருடன் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவினில் நடிகர் தனுஷ் கூறுகையில்.., “இது எனக்கு உண்மையிலேயே நிறைவான தருணம். எனது சிறுவயதிலிருந்தே, மேஸ்ட்ரோ இளையராஜா சாரின் மயக்கும் மெல்லிசைக்கு நான் ரசிகன். நம் எண்ணங்களே நம்மை வடிவமைக்கப்படுகின்றன என்று கூறுவார்கள். அது தான் உண்மை, நாம் முழு மனதுடன் நம் கனவை நோக்கி நம்மை அர்ப்பணிக்கும் போது, அவை நிறைவேறும். பலர் தங்கள் மன அமைதிக்கு இளையராஜாவின் பாடல்களை நாடுகிறார்கள். பலர் உறக்கத்திற்காக அவரது பாடல்களில் மூழ்குவார்கள், நான் என் பல இரவுகளை அவரது இசையுடன் கழித்துள்ளேன். வெள்ளித்திரையில் அவரது பாத்திரத்தை ஏற்று நடிக்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. இப்போது அது நடப்பது மிகுந்த மகிழ்ச்சி. எனது திரை வாழ்க்கையில் ஆரம்பம் முதல் இப்போது வரை, ஒரு நடிகனாக உண்மையிலேயே சிறப்பான நடிப்பை வழங்க வேண்டிய தருணத்தில் எல்லாம், எனது இயர்போன்கள் மூலம் அவரது இசையமைப்பில் மூழ்கி, அதன் மூலமே என் நடிப்பை வெளிப்படுத்துவேன். இன்று வரை எனக்கு நடிப்பு சொல்லித்தருவது அவரது இசை தான். இப்படத்தில் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் பெருமையாக உணர்கிறேன். இளையராஜா சாரின் உண்மையான அபிமானியான மாண்புமிகு கமல்ஹாசன் சாரின் வருகைக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அருண் மாதேஸ்வரன் ஒரு மகத்தான பொறுப்பின் கனத்தை உணர்கிறார் என்பது புரிகிறது. ஆனால் இந்த திரைப்படத்தை மிக மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் உருவாக்கலாம் என அவரை ஊக்குவிக்கிறேன். ஏனெனில் இது கலையின் மீதான காதல் இளையராஜாவின் மீதான காதல். அனைவருக்கும் என் நன்றிகள்.

மேஸ்ட்ரோ இளையராஜாவுடன் பல தசாப்தங்களாக தனது  நட்பை தொடர்ந்து வரும் உலகநாயகன் கமல்ஹாசன், ஒட்டுமொத்த குழுவிற்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும்  அவர் கூறுகையில்.., “இந்த திரைப்படத்தை உயிர்ப்பிப்பதில் மகத்தான பொறுப்பு மற்றும் அழுத்தத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் உணரக்கூடும் என்பது தெளிவாகத் தெரிகிறது. பாரத ரத்னா விருது பெற்ற “மேஸ்ட்ரோ இளையராஜா” பற்றிய அவரது தனித்துவமான கண்ணோட்டத்தை அவர் ரசித்து முன்வைக்கலாம் என்று நான் பரிந்துரைக்கிறேன்.  இந்த ஒரு ஐகானின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஒரு திரைப்படம். பல பாகங்களைக் கொண்டிருக்கலாம். மக்களின் வாழ்வோடு இணைந்திட்ட அவரது இசை தரும் தாக்கம் தனித்துவமானது.

எனவே, இசைத்துறைக்கு பெருமை சேர்க்கும் இந்த இசைப் பேரறிஞரைப் பற்றிய தனது தனிப்பட்ட பார்வையை அருண் முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். குணா திரைப்படத்தின் “கண்மணி அன்போடு காதலன்” என்ற பாடலில் இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றியதை  நினைவு கூர்ந்த கமலஹாசன் அவர்கள்.., அந்தப் பாடல் எங்கள் இருவருக்கும் இடையிலான காதல் மற்றும் உணர்ச்சிகளின் அழகான பரிமாற்றம் என்றார். இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை அழகாகவும் நேர்த்தியாகவும் சித்தரிக்க நடிகர் தனுஷுக்கு கமல்ஹாசன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இசைஞானி இளையராஜாவின் கையால் எழுதப்பட்ட இசைக் குறிப்புகளால் அலங்கரிக்கப்பட்ட ரெட்ரோ போஸ்டரை, உலகநாயகன் கமல்ஹாசன் வழங்கியது சினிமாவில் ஒரு வரலாற்றுத் தருணமாக அமைந்தது.

Previous Post

சிலிர்க்கவைக்கும் திகில் க்ரைம் டிராமா இன்ஸ்பெக்டர் ரிஷி-இன் டிரெய்லரை பிரைம் வீடியோ வெளியிட்டது

Next Post

‘குமரன் சினிமாஸ் தயாரிப்பில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ பாணியில் மறு ஜென்மக் கதையாக உருவாகும் ‘கங்கா தேவி’

Next Post

'குமரன் சினிமாஸ் தயாரிப்பில் 'நெஞ்சம் மறப்பதில்லை' பாணியில் மறு ஜென்மக் கதையாக உருவாகும் 'கங்கா தேவி'

Popular News

  • Zion Films மற்றும் MRP Entertainment தயாரிப்பில் பிரபுதேவா – சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய காதல் திரைப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. !!

    Zion Films மற்றும் MRP Entertainment தயாரிப்பில் பிரபுதேவா – சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய காதல் திரைப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கொலையாளி அல்ல..! நான் காதலன்..!’ என்ற அதிரடியான வாசகத்துடன் வெளியான நடிகர் ஷாருக்கானின் ‘கிங் – KING’ படத்தின் புதிய போஸ்டர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் சூர்யாவால் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இயக்குனர் மித்துன் மாணிக்கத்தின் திரைப்படம் ஃபேமிலி பாய் (Family Boy) – டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

    0 shares
    Share 0 Tweet 0
  • “விதிகளை மீறும் ருத்ரா கதாபாத்திரம் மிக சுவாரஸ்யமானது”- நடிகை ராதிகா ஆப்தே!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம்  ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

October 27, 2026

ராமர் மற்றும் சீதையின் அன்பை பேசும் ‘மங்கள வண்ணமே’ பாடல் ‘ராமாயணா’ திரைப்படத்தில் இருந்து வெளியானது!

October 27, 2026

நடிகர் சூர்யாவால் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இயக்குனர் மித்துன் மாணிக்கத்தின் திரைப்படம் ஃபேமிலி பாய் (Family Boy) – டீசர் வெளியீடு

October 27, 2026

நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

October 27, 2026

‘கொலையாளி அல்ல..! நான் காதலன்..!’ என்ற அதிரடியான வாசகத்துடன் வெளியான நடிகர் ஷாருக்கானின் ‘கிங் – KING’ படத்தின் புதிய போஸ்டர்!

October 27, 2026

ஆர்.பி. பாலா இயக்கத்தில் நவீன் சந்திரா நடிக்கும் ‘என் சி 51’ படப்பிடிப்பு நிறைவு

October 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.