• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஃபேன்டசி டிராமா கதையம்சம் கொண்டு உருவாகும் “ராக்கெட் டிரைவர்”

by Tamil2daynews
June 18, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஃபேன்டசி டிராமா கதையம்சம் கொண்டு உருவாகும் “ராக்கெட் டிரைவர்”

 

ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனிருத் வல்லப் தயாரிக்கும் புதிய படம் “ராக்கெட் டிரைவர்”. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீராம் அனந்த சங்கர் இயக்குகிறார். ஃபேண்டசி, டிராமா-காமெடி என்டர்டெயினர் கதையம்சம் கொண்ட படமாக “ராக்கெட் டிரைவர்” உருவாகிறது. இந்த படத்தில் விஷ்வந்த் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்.

தான் செய்த தவறுகளால், தனது வாழ்க்கை ஏமாற்றம் நிறைந்த ஒன்று என புலம்பி வரும் ஆட்டோ ஓட்டுநர், உலகையே மாற்ற வேண்டும் என்ற கனவு கொண்டிருக்கிறார். எனினும், இது தொடர்பாக அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த நிலையில், தனது ரோல் மாடலை அவரது 17-வயதில் காண்கிறார். அப்போது அரங்கேறும் விசித்திர சம்பவம் விபரீதத்தில் முடிகிறது. இதைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களே இப்படத்தின் கதை.

அறிமுக நாயகன் விஷ்வந்த் முன்னணி வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் தேசிய விருது வென்ற நாக விஷால், காத்தாடி ராமமூர்த்தி, சுனைனா, ஜெகன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.Image

இந்த படத்திற்கு கௌஷிக் கிரிஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை ரெஜிமல் சூர்யா தாமஸ் மேற்கொள்கிறார். படத்தொகுப்பு பணிகளை இனியவன் பாண்டியன் கவனிக்க, கலை இயக்கத்தை பிரேம் கருந்தாமலை, ஷில்பா ஐயர் ஆடை வடிவமைப்பு, சுரேஷ் ரவி டி.ஐ. பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

தயாரிப்பு நிர்வாகியாக செல்வேந்திரன் பணியாற்றும் இந்த படத்தின் ஒலி வடிவமைப்பு பணிகளை சங்கரன் மற்றும் சித்தார்த்தா மேற்கொள்கின்றனர். ஒலி கலைவையை அரவிந்த் மேனனும், விளம்பர வடிவமைப்பு பணிகளை ஸ்ரீ ஹரி சரண் மேற்கொள்கிறார்கள்.

அக்ஷய் பொல்லா, பிரசாந்த் எஸ் மற்றும் ஸ்ரீராம் அனந்த சங்கர் இணைந்து எழுதியிருக்கும் இந்த படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ஆகஸ்ட் 2024-இல் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

Previous Post

பெரும் சதிகளுக்குப் பின்னால், மறுக்கப்படும் காதல் கதை “பருவு” இப்போது உங்கள் ZEE5 தளத்தில் !!

Next Post

இந்தியாவின், இந்த ஆண்டின் மிகப் பெரிய படத்தின் எதிர்பார்ப்புமிக்க பாடல் – பிரபாஸ் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் ஆகியோர் இணைந்து கலக்கும் “கல்கி 2898 கி.பி” திரைப்படத்தின் “பைரவா ஆன்தம்”

Next Post

இந்தியாவின், இந்த ஆண்டின் மிகப் பெரிய படத்தின் எதிர்பார்ப்புமிக்க பாடல் - பிரபாஸ் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் ஆகியோர் இணைந்து கலக்கும் “கல்கி 2898 கி.பி” திரைப்படத்தின் “பைரவா ஆன்தம்”

Popular News

  • சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் மீண்டும் இணைந்திருக்கும் ‘இரண்டு வானம்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • முத்து என்கிற காட்டான் வெற்றி விழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • “ராக்கா” – அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் வெளியான டைட்டில் போஸ்டர் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • “TN 2026” தங்க நட்சத்திரம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

துரந்தர் பழிவாங்கல் சாதனை: இந்தியாவில் ரூ.1,000 கோடி நெட் வசூலை தாண்டியது!

April 10, 2026

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் மீண்டும் இணைந்திருக்கும் ‘இரண்டு வானம்’!

April 10, 2026

முத்து என்கிற காட்டான் வெற்றி விழா !!

April 10, 2026

“ராக்கா” – அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் வெளியான டைட்டில் போஸ்டர் !!

April 10, 2026

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே “மீசைய முறுக்கு-2” படத்தின் இரண்டாவது சிங்கிள் “பப்பாளி பழமே” பாடல் வெளியானது.

April 10, 2026

‘2M சினிமாஸ்’ தயாரிப்பில் உருவாகும் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் கதாபாத்திர அறிமுக காட்சிகளை வெளியிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!!

April 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.