

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கி பிப்ரவரி மாதம் நிறைவடையும். சில முக்கிய காட்சிகள் தூத்துக்குடியில் படமாக்கப்படவுள்ளன. இப்படத்தின் கதாநாயகியாக ‘பிக் பாஸ்’ புகழ் ஷிவானி நடிக்கிறார். சுவாரசியமான கதாபாத்திரம் ஒன்றை தங்கதுரை ஏற்றுள்ளார்.படத்தை பற்றி பேசிய இயக்குநர் செல்வக்குமார், “கேரள பம்பர் லாட்டரி தான் இப்படத்தின் கதைக்களமாகும்.

வெற்றி கதாநாயகனாகவும், அதற்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் ஹரீஷ் பேரடியும் நடிக்கின்றனர்,” என்றார்.படத்தின் ஒளிப்பதிவை நெடுநல்வாடை, எம்ஜிஆர் மகன், ஆலம்பனா மற்றும் கடமையை செய் ஆகிய திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி கையாள்கிறார். படத்தொகுப்புக்கு மு.காசிவிஸ்வநாதன் பொறுப்பேற்றுள்ளார்.‘8 தோட்டாக்கள்’ புகழ் வெற்றி நடிக்கும் ‘பம்பர்’ திரைப்படத்தை சு. தியாகராஜா தயாரிக்க எம். செல்வக்குமார் இயக்குகிறார்.