விஜய், அஜித் பட டைரக்டர் S.எழிலின் அடுத்த படைப்பு!
“தேசிங்குராஜா” இரண்டாம் பாகத்தை டைரக்ட் செய்கிறார் s.எழில்.‘தேசிங்குராஜா’ வில் கதாநாயகனாக நடித்த விமல், “தேசிங்குராஜா-2” விலும் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படம் மூலம் விமல், எழில் மீண்டும் இணைகிறார்கள்.
இப்படத்தை இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் P.ரவிசந்திரன் தயாரிக்கிறார்.
இரண்டாவது முக்கிய கேரக்டரில் ஜனா நடிக்கிறார். தெலுங்கில் ராம் சரண் நடித்து ஹிட்டான ‘ரங்கஸ்தலம்’ படத்தில் நடித்த பூஜிதா பொனாடா மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹர்ஷிதா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
இவரது படங்களில் காமடி சற்று தூக்கலாகவே இருக்கும். சூரி, யோகிபாபு என ஒரு காமடி பட்டாளமே நடித்திருப்பார்கள். இப்படத்திலும் அப்படிதான்…
ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, புகழ், மொட்ட ராஜேந்திரன், சாம்ஸ், வையாபுரி, லொள்ளு சபா சாமிநாதன், மதுரை முத்து, மதுமிதா, விஜய் டிவி வினோத் போன்றோர் கலக்குகிறார்கள்.
s.எழில் படங்களில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகும். இசை அமைப்பாளர்கள் எஸ்.ஏ.ராஜ்குமார், யுவன் சங்கர்ராஜா , டி.இமான், சத்யா போன்ற பல இசை அமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றிய s.எழில், அஜித் நடித்த “பூவெல்லாம் உன் வாசம்” படத்திற்கு பிறகு ‘ஹிட் காம்போவாக’ வித்யாசாகருடன் மீண்டும் இதில் இணைகிறார்.
படபிடிப்பு ஆரம்பமாகி தொடர்ந்து நடை பெற்று வருகிறது. குடும்பங்கள் ஜாலியாக கொண்டாடும் சம்மர் வெளியீட்டாக படம் தயாராகி வருகிறது.