• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

74ஆவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ‘புஷ்பா2 – தி ரூல்’ திரையிடப்படும் இந்த வேளையில் ஆகஸ்ட் 15, 2024 முதல் திரையரங்குகளில் ’புஷ்பா- தி ரைஸ்’ வெளியாகத் தயாராக உள்ளது என்பதை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது!

by Tamil2daynews
February 18, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

74ஆவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ‘புஷ்பா2 – தி ரூல்’ திரையிடப்படும் இந்த வேளையில் ஆகஸ்ட் 15, 2024 முதல் திரையரங்குகளில் ’புஷ்பா- தி ரைஸ்’ வெளியாகத் தயாராக உள்ளது என்பதை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது!

 

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘புஷ்பா 2-தி ரூல்’ படத்தின் ரிலீஸ் தேதி சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஆகஸ்ட் 15, 2024 அன்று வெளியாகிறது. சுதந்திர தினம் மற்றும் ரக்ஷாபந்தன் விடுமுறை நாட்களின் நீட்டிக்கப்பட்ட வாரயிறுதியுடன் கூடிய இந்த வெளியீட்டுத் தேதி, பாக்ஸ் ஆபிஸ் வசூலையும் அதிகரிக்க சரியான வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த உற்சாகமான செய்தியோடு இப்போது நடைபெற்று வரக்கூடிய 74ஆவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ‘புஷ்பா- தி ரைஸ்’ படம் திரையிடப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக நடிகர் அல்லு அர்ஜூன் பெர்லின் சென்றுள்ளார். சர்வதே பார்வையாளர்களிடமும் இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது படக்குழுவினரிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அல்லு அர்ஜுன் சமீபத்தில் 69வது தேசிய விருதுகளில் புஷ்பாவாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். அல்லு அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட ‘புஷ்பா 2’ படப்பிடிப்பின் காட்சிகளால் ரசிகர்களின் உற்சாகம் மேலும் அதிகரித்தது. இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் ‘புஷ்பா 2’ வெளியீடு குறித்து ரசிகர்கள் மட்டுமல்லாது, வர்த்தக வட்டாரத்திலும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கொரோனா காலக்கட்டத்திற்குப் பிறகு திரையரங்குகளுக்கு அதிக பார்வையாளர்களை வரவழைத்து திருப்புமுனை ஏற்படுத்திய திரைப்படம் ‘புஷ்பா’. படத்தின் வசனங்கள், கதைக்களம், அடிமையாக்கும் இசை என அனைத்து வகையான பார்வையாளர்களையும் இதன் முதல் பாகம் ஈர்த்தது. அல்லு அர்ஜுனின் புஷ்பராஜ் கதாபாத்திரம் இந்திய சினிமா வரலாற்றில் மிகவும் விரும்பத்தக்க கதாபாத்திரங்களில் ஒன்றாக மாறியுள்ளது. மேஸ்ட்ரோ இயக்குநர் சுகுமார் உருவாக்கிய இந்த புஷ்பாவின் உலகம் அதன் இரண்டாம் பாகத்தில் இன்னும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

‘புஷ்பா2-தி ரூல்’ உலகம் முழுவதும் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் மேஸ்ட்ரோ சுகுமார் இயக்கத்தில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேசிய விருது பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

Previous Post

‘புஷ்பா’ படம் மூலம் உலக சந்தையில் இந்திய சினிமாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நடிகர் அல்லு அர்ஜூன் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டார்!

Next Post

இளைஞர்களின் நட்பு, கனவுகள் மற்றும் எமோஷன்களை உள்ளடக்கி வரவிருக்கும் அழகான திரைப்படம்தான் ’நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’!

Next Post

இளைஞர்களின் நட்பு, கனவுகள் மற்றும் எமோஷன்களை உள்ளடக்கி வரவிருக்கும் அழகான திரைப்படம்தான் ’நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’!

Popular News

  • பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

    0 shares
    Share 0 Tweet 0
  • இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பே டயானா’ நன்றி அறிவிப்பு விழா!!

    0 shares
    Share 0 Tweet 0
  • நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • உன்னதமான காதல் திரைப்படமாக உருவாகியுள்ள “சரீரம்” செப்டம்பர் 26 திரைக்கு வருகிறது !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.