• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘ஹாட் ஸ்பாட்’ – விமர்சனம்

by Tamil2daynews
March 27, 2024
in விமர்சனம்
0
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘ஹாட் ஸ்பாட்’ – விமர்சனம்

 

 ஆந்தாலாஜி முறையில் நான்கு வெவ்வேறு கதைக்களம் கொண்ட படம் தான் ஹாட்ஸ்பாட்.

 அவ்வப்போது இந்த மாதிரி படங்கள் வந்து விமர்சனத்துக்காக விறுவிறுப்பியும் கொஞ்சம் கூட்டுகிறது.

நான்கு கதைகளை அந்தாலஜி போல் சொல்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். அவர் இயக்குனராகவே நடிக்க, இந்த படத்தின் தயாரிப்பாளர் தயாரிப்பாளராகவே நடிக்க அவரிடம் கதை சொல்ல வரும் விக்னேஷ் கார்த்திக் ஒரு நான்கு கதைகளை சொல்கிறார் அவ்வளவுதான் படம்.

அவற்றில் இரண்டு ரொம்பவும் மலிவான ரசனை உள்ள கதைகள். முதலும் கடைசியும் ஓகே ரகம்.

கதையைப் பற்றி சொன்னால் ஸ்பாய்லர் ஆகிவிடும் என்பதால் மேம்போக்கான விஷயங்களை பார்ப்போம்.

முதல் கதையில் ஆதித்யா பாஸ்கரும், கௌரி கிஷனும் நடித்திருக்கிறார்கள். இருவரும் காதலர்களாக இருக்க காலம் மாறிய நிலையில் பெண் ஆணுக்கு தாலி கட்டப் போய் என்ன நடந்தது என்ற நிகழ்வுகளாக நகர்கிறது கதை. பெண்ணியத்தைப் போற்றும் இந்தக் கதையை ரசித்து வரவேற்க முடிகிறது.

சாண்டி மாஸ்டரும், அம்மு அபிராமியும் நடித்திருக்கும் இரண்டாவது கதை ஒரு மாதிரியாக ஆரம்பித்து ஒரு மாதிரியாகவே முடிகிறது. இந்த கதைக்கு இயக்குனராலேயே முடிவு சொல்ல முடியவில்லை என்பதால் ஒரு மாதிரி முடித்து வைக்கிறார்.

மூன்றாவது கதை படு அபத்தம். அலுவலக டாய்லெட்டிலேயே சுய இன்பம் செய்யும் சுபாஷ், அது வெளியே தெரிந்த காரணத்தால் வேலை பறிபோக, தொடர்ந்து வேலையில்லாத காரணத்தால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டு ஆண் விபச்சாரி ஆகிறார். இதனால் ஜனனியுடன் இருந்த அவரது புனிதமான காதல் என்ன ஆனது என்று போகிறது கதை.

இதில் அம்மாவும் மகனும் பார்க்கக் கூடாத சூழலில் பார்த்து, பேசக்கூடாத விஷயங்களைப் பேசுகிறார்கள். அதையெல்லாம் கேட்பதற்கே அபத்தமாகவும் அருவருப்பாகவும் இருக்கிறது. அதையும் கூட தியேட்டரில் சில பேர் கைதட்டி ரசிப்பது இன்னும் அருவருப்பு அடையச் செய்கிறது.

நான்காவது கதை டிவி ஷோக்களைப் பற்றியது. அதிலும் சிறுவர் சிறுமிகளை முன்னிலைப்படுத்தி நடத்தப்படும் ஷோக்களில் அவர்களுடைய மனநிலையும் உடல் நிலையும் எத்தனை பாதிக்கப்படுகிறது என்பதைச் சொல்லி வெளியில் குழந்தைகளை வேலைக்கு வைத்தால் அது குற்றம் எனில் டிவி ஷோக்களில் குழந்தைகளை இந்தப் பாடு படுத்துவது எதில் சேர்த்தி என்கிற வினாவை கலையரசன் மூலமாக முன் வைக்கிறார் இயக்குனர்.

 இதில் வரவேற்கத்தக்கக் கூடிய விஷயம் என்றால் நான்காவது கதையை சொல்லலாம்.படம் பார்க்க வரும் ஒவ்வொருவரும் ஒரே மன நிலைமையில் இருப்பதில்லை என்பதற்காக இயக்குனர் கயிறு அடித்திருக்கிறார் இம்மாதிரி கதைகளை.Hot Spot (2024) - Movie | Reviews, Cast & Release Date - BookMyShow

ஆனால், இந்த படம் கவனிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே ஆணுக்குப் பெண் தாலி கட்டுவது, லெஸ்பியானிசம், அண்ணன் தங்கை காதல், சுய இன்பம், அம்மாவுக்கும் மகனுக்குமான பாலியல் குழப்படிகள், குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல்கள் என்று சமுதாயத்தில் முகம் சுளிக்க வைக்கும் அத்தனை விஷயங்களையும் இயக்குனர் வரிசைக் கட்டி எடுத்திருப்பது வெறும் பரபரப்புக்காக மட்டுமே என்பது  புலனாகிறது.

நான்கு கதைகளும் ஒரே மாதிரி ஆரம்பித்து ஒரே மாதிரி முடிவதில் அலுப்பு தட்டுகிறது. காட்சிகளின் நீளமும் சோதிக்கவே செய்கிறது.

இசையமைப்பாளர் படத்தின் தன்மையை புரிந்து கொண்டு வித்யாசமான இரண்டு பாடல்களை இசைத்து இருக்கிறார். பின்னணி இசையும் பாராட்டும்படி இருக்கிறது. ஒளிப்பதிவும் படத்துக்கு கை கொடுத்திருக்கிறது.

 வித்தியாசம் கதையில் ஒரு பரபரப்பு வேண்டும் என்பதற்காக அண்ணன் தங்கை காதல் சுய இன்பம் இதெல்லாம் வெட்ட வெளிச்சமாக திரையில் காட்ட வேண்டுமா என்ன நம் மனதில் இந்த கேள்விகள் எழுவது நிஜம்.

 இந்த நான்கு கதைகளுமே இயக்குனர் வாழ்க்கையில் கண்ட கதைகளா, அல்லது வித்தியாசம் என்ற பெயருக்காக திணிக்கப்பட்டதா என்பது அவருக்கே வெளிச்சம்.

 மொத்தத்தில் இந்த ‘ஹாட் ஸ்பாட்’ படம் ஹார்ட் வெடிக்கிற இடம்.
Previous Post

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண்- மைத்ரி மூவி மேக்கர்ஸ் – இயக்குநர் சுகுமார் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Next Post

அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின் சுயதரிசை கதை ‘ஸ்மோக்’ வெப்சீரியஸ்.

Next Post

அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின் சுயதரிசை கதை ‘ஸ்மோக்’ வெப்சீரியஸ்.

Popular News

  • டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் வழங்கும், இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கத்தில், நவாஸ் மற்றும் ஷெர்ரி அகர்வால் நடிப்பில் காதல், ஏக்கம் மற்றும் இசையின் மாயாஜாலத்தைக் கொண்டாடும் மியூசிக்கல் ரொமான்ஸ் திரைப்படம்’சைக்கிள் கேப்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • 29 – விமர்சனம் ரேட்டிங் -3.5 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • ப்ரைம் வீடியோ தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகை பாக்யஸ்ரீ போர்ஸின் பிறந்தநாள் எனும் இந்தச் சிறப்புமிக்க நன்னாளில் அவர் ‘சேயோன்’ திரைப்படத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார் என்பதை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றன.

    0 shares
    Share 0 Tweet 0
  • “பெத்தி” படம் முடிந்து வெளியே வரும் போது கண்களில் கண்ணீர் இருக்கும்” – தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“பெத்தி” படம் முடிந்து வெளியே வரும் போது கண்களில் கண்ணீர் இருக்கும்” – தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா

May 8, 2026

துல்கர் சல்மானின் ஸ்டைலீஷ் படம் “ஐ அம் கேம்” வரும் ஆகஸ்ட் 2026 வெளியாகிறது ! !

May 8, 2026

டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் வழங்கும், இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கத்தில், நவாஸ் மற்றும் ஷெர்ரி அகர்வால் நடிப்பில் காதல், ஏக்கம் மற்றும் இசையின் மாயாஜாலத்தைக் கொண்டாடும் மியூசிக்கல் ரொமான்ஸ் திரைப்படம்’சைக்கிள் கேப்’!

May 8, 2026

சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா – விஜய் சில்லா – சசி தேவி ரெட்டி கூட்டணியில் உருவாகும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் அதிரடி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது !!

May 8, 2026

29 – விமர்சனம் ரேட்டிங் -3.5 / 5

May 8, 2026

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் மைத்ரி மூவி மேக்கர்ஸ் சுகுமார் ரைட்டிங்ஸ் இணையும் “பெத்தி” படப்பிடிப்பு நிறைவு; ஜூன் 4 உலகமெங்கும் வெளியாகிறது !

May 6, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.