• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மான் வேட்டை திரைப்பட இசை வெளியீட்டு விழா..!

by Tamil2daynews
December 15, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
மான் வேட்டை திரைப்பட  இசை வெளியீட்டு விழா..! 
அகம் புறம், தீநகர், காசேதான் கடவுளடா படங்கள் புகழ் இயக்குநர் திருமலை இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில், ஶ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகியுள்ள கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் “மான் வேட்டை”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தினை T Creations சார்பில் இயக்குநர்  M.திருமலை இப்படத்தினை தயாரித்துள்ளார். இந்நிலையில் திரை பிரபலங்களோடு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர் முன்னிலையில்  இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில்
தயாரிப்பாளர் K.ராஜன் பேசியதாவது..,
” இயக்குநர் திருமலை அனைவருக்கும் உதவ கூடிய நல்ல உள்ளம் கொண்ட நபர்.  இந்தப் படத்தை சிறப்பான முறையில் எடுத்து முடித்து இருக்கிறார்கள். மான்வேட்டை படத்தை கடின உழைப்பையும், அர்பணிப்பையும் அளித்து உருவாக்கி இருக்கின்றனர்.  இந்த படம் வசூல்வேட்டை காண வேண்டும்.  இந்த படம் வெற்றி பெற்றால் பல சிறிய தயாரிப்பாளர்கள் வருவார்கள். இந்த படம் வெற்றி பெற எனது வாழ்த்துகள்”
பாஜக அரசியல் பிரமுகர் கரு நாகராஜன்  பேசியதாவது..,
” திருமலை மிக தைரியமானவர், அனைத்திற்கும் குரல் கொடுக்க கூடியவர். திரைப்படத்தை வாழ வைக்க கூடியவர்கள் திரைப்பட தயாரிப்பாளர்கள் தான்.   திரைப்படங்களை வெளியிடுவதில் இருக்கும் சிக்கல்களை அமைப்பாய் இணைந்து அவர்கள் தீர்க்க வேண்டும்.  இந்த படம் வெற்றி பெற எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
தயாரிப்பாளர் JSK சதீஷ்குமார்  பேசியதாவது..,
“ஒரு படத்தின் ஆடியோ வெற்றி பெற்றாலே அதை வைத்து படத்திற்கு மிகப்பெரிய வருவாய் ஈட்டலாம். இதை இந்த படம் சிறப்பாக செய்துள்ளது.  நல்ல படங்கள் எப்பொழுதும் வெற்றி பெறும்.  அதற்கு பக்கத்தில் இருக்கும் மலையாள, கன்னட மொழி படங்கள்  மிகப்பெரிய உதாரணம். இந்த மான் வேட்டை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய  எனது வாழ்த்துகள்.
தயாரிப்பாளர் PL தேனப்பன்  பேசியதாவது..,
” படங்களில் சின்ன படம் பெரிய படம் என்று ஒன்னும் இல்லை. படம் வெளியான பிறகு தான் அது முடிவாகும்.  படத்தின் தலைப்பு சிறப்பாக இருக்கிறது, சிறந்த படத்தை உருவாக்கியிருப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகள்.
அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா பேசியதாவது..,
” எல்லா விஷயங்களும் தோள் கொடுப்பவர் திருமலை. அவர் எடுக்கும் படங்கள் எல்லாம் வெற்றி  பெற வேண்டும்.  இந்த படம் சிறப்பாக உருவாகி இருகிறது. இந்த படம் குறைந்த பட்ஜெட்டில் சிறப்பாக எடுக்கபட்டு இருக்கிறது. இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்.
நடிகர் ரவி மரியா பேசியதாவது..,
“நண்பர் திருமலைக்காக மட்டுமே இந்த விழாவிற்காக வந்தேன். இந்த படம் வெற்றி பட வரிசையில் இணைய வேண்டும். திருமலை எல்லா பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்க கூடிய நல்ல மனிதர். நல்ல படம் எப்பொழுதும் வெற்றி பெறும். சிறந்த படங்களுக்கு மக்கள் எப்போதும் ஆதரவு தருவார்கள். அந்த வரிசையில் இந்த மான்வேட்டை  படம் மிகப்பெரிய வெற்றியடையும்.
நடிகர் ரமேஷ் கண்ணா கூறியதாவது..,
” இந்த படத்தின் டைட்டிலே அனைவரையும் கவரும் வகையில் இருக்கிறது. படத்தின் ஹீரோ சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா சிறப்பான இசையை கொடுத்துள்ளார். படம் எதிர்ப்பார்பை அதிகரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தேவை.  இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்.
R.K. சுரேஷ் பேசியதாவது..
” எனது நண்பன் தான் இந்த படத்தின் கதாநாயகன், அவன் ஒரு கடின உழைப்பாளி, அவன் மிகப்பெரிய உயரத்தை அடைய வேண்டும். இந்த மான்வேட்டை அந்த வெற்றியை கொடுக்கும் என்று நம்புகிறேன். திருமலை சினிமாவிற்காக உழைப்பவர்.  இதில் நடித்து இருக்கும் அனைத்து நடிகர்களுக்கும் எனது வாழ்த்துகள். இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தேவை. “
தொழில் நுட்ப குழு விபரம் 
எழுத்து இயக்கம் – M.திருமலை
இசை – ஶ்ரீகாந்த் தேவா
ஒளிப்பதிவு – விஜய் வில்சன்
வசனம் – வேலு சுப்பிரமணியம்
படத்தொகுப்பு – சுதா, லக்‌ஷ்மணன்
பாடல்கள் – விவேகா , சொற்கோ கருணாநிதி, ஏக்நாத்
மக்கள் தொடர்பு – பரணி அழகிரி, திருமுருகன்.
Previous Post

நான் புரட்சி தளபதியும் அல்ல தளபதியும் அல்ல என் பெயர் விஷால் அவ்வளவு தான் – நடிகர் விஷால்

Next Post

மீண்டும் இணையும் ‘ஈரம்’ பட வெற்றி கூட்டணி..!

Next Post

மீண்டும் இணையும் 'ஈரம்' பட வெற்றி கூட்டணி..!

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.