ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் & G. ஜெயராம் வழங்கும் ‘ஜெயம்’ ரவி, நயன்தாரா நடிப்பில், I. அஹமத் இயக்கத்தில் ‘இறைவன்’ படத்தின் டைட்டில் & முதல் பார்வை வெளியீடு

by Tamil2daynews
January 19, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் & G. ஜெயராம் வழங்கும் ‘ஜெயம்’ ரவி, நயன்தாரா நடிப்பில், I. அஹமத் இயக்கத்தில் ‘இறைவன்’ படத்தின் டைட்டில் & முதல் பார்வை வெளியீடு

 

பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் & ஜி. ஜெயராம் ஆகியோர் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையில் பாராட்டத்தக்க பொழுதுபோக்கு படங்களை உருவாக்கியுள்ளனர். நம்பிக்கைகுரிய நிறைய படங்கள் தயாரித்து இருந்தாலும் இந்த வருடம் 2023-லும் வித்தியாசமான கதைக்களங்களை கைவசம் வைத்திருக்கின்றனர். அதில், I. அஹமது இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி- நயன்தாரா நடிப்பில் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வரும் ‘இறைவன்’ திரைப்படமும் ஒன்று. இதன் டைட்டில் மற்றும் முதல் பார்வையை ஹேண்ட்ஸம் நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார்.

படம் குறித்து தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் பேசியதாவது, “‘இறைவன்’ படத்தின் டைட்டில் & முதல் பார்வையை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ‘இறைவன்’ படம் உருவான மொத்த புராசஸும் சுவாரஸ்யமானது. ‘ஜெயம்’ ரவி, நயன்தாரா போன்ற நட்சத்திரங்களுடன் ஒரு சுவாரஸ்யமான கதைக்களத்தை இயக்குநர் அஹமத் உருவாக்கி இருக்கிறார். அவர் ஏற்கனவே திட்டமிட்டபடி சரியான நேரத்தில் படப்பிடிப்பை முடித்தது தயாரிப்பாளராக பேஷன் ஸ்டுடியோஸிற்கு மகிழ்ச்சியான விஷயம். எங்கள் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கார்த்தி சார் அவர்களுக்கு நன்றி. படத்தின் டிரெய்லர், ஆடியோ மற்றும் உலகம் முழுவதும் வெளியாகும் தேதிகளை விரைவில் அறிவிப்போம்” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “இயக்குநர் அஹமதுவின் முந்தைய படங்களான ‘வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’, ‘ஜனகனமன’ ஆகிய படங்களைப் போலவே ‘இறைவன்’ திரைப்படமும் தனித்துவமான கதைக்களத்தில் இருக்கும்.   ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக இது இருந்தாலும் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய சினிமா பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கும். ‘ஜெயம்’ ரவி சார், நயன்தாரா மேம் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவின் ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நடிகர்களது ஸ்டார் வேல்யூ மற்றும் கடந்த 2022-ல் வெளியாகி வெற்றிப் பெற்ற அவர்களது படங்களும் இந்தப் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ‘இறைவன்’ படம் எங்கள் ஒட்டுமொத்த குழுவுக்கும் பேஷன் ஸ்டுடியோஸூக்கும் நிச்சயம் ஒரு மைல்கல்லாக அமையும் என நம்புகிறேன்”.

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தின் வில்லன் ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன், விஜயலட்சுமி, சார்லி, அழகம் பெருமாள், வினோத் கிஷன், பக்ஸ், படவா கோபி,  பொற்கொடி இன்னும் பல முக்கிய கதாபாத்திரங்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.

படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:

ஒளிப்பதிவு : ஹரி கே வேதாந்த்,
இசை : யுவன் ஷங்கர் ராஜா,
படத்தொகுப்பு : மணிகண்ட பாலாஜி,
கலை இயக்குநர் : ஜாக்கி,
சண்டை பயிற்சி : டான் அசோக்.

Previous Post

நகரத்தில் ஒரு புதிய கெட்டவன்.!!!

Next Post

Quotation Gang உண்மைச் சம்பவங்களை உரக்கச் சொல்லும் விறுவிறுப்பான படம் என இயக்குநர் விவேக் கே கண்ணன் தெரிவிக்கிறார்

Next Post

Quotation Gang உண்மைச் சம்பவங்களை உரக்கச் சொல்லும் விறுவிறுப்பான படம் என இயக்குநர் விவேக் கே கண்ணன் தெரிவிக்கிறார்

Popular News

  • நடிகர் நாசர் ன் தம்பி ஜவஹர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடித்து உள்ளார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • பழந்தமிழர் மருத்துவ கண்டுபிடிப்புகள்‌ பற்றி பேசும்‌ “பெல்‌”

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • வெளியானது தோனி என்டெர்டெய்ன்மென்ட் எல்.ஜி.எம். செகண்ட் லுக் போஸ்டர்

    0 shares
    Share 0 Tweet 0
  • டக்கர்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பழந்தமிழர் மருத்துவ கண்டுபிடிப்புகள்‌ பற்றி பேசும்‌ “பெல்‌”

May 31, 2023

டக்கர்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

May 31, 2023

‘சூப்பர் ஸ்டார்’ வெளியிட்ட ‘காவி ஆவி நடுவுல தேவி’..!

May 31, 2023

செந்தில் ராஜலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் ‘லைசென்ஸ்’ பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்

May 30, 2023

வெளியானது தோனி என்டெர்டெய்ன்மென்ட் எல்.ஜி.எம். செகண்ட் லுக் போஸ்டர்

May 30, 2023

நடிகர் நாசர் ன் தம்பி ஜவஹர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடித்து உள்ளார்.

May 30, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!