• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘கேப்டன் மில்லர்’ விமர்சனம்

by Tamil2daynews
January 13, 2024
in விமர்சனம்
0
0
SHARES
26
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘கேப்டன் மில்லர்’ விமர்சனம்

நடிகர் தனுஷ் நடிப்பில் பொங்கல் வெளியீடாக ரிலீசாகியுள்ள படம் “கேப்டன் மில்லர்”. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், விஜி சந்திரசேகர், சந்தீப் கிஷன், வினோத் கிஷன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

தாங்கள் கட்டிய கோயிலுக்குள் செல்ல முடியாமல் மன்னர் ஆட்சியில்  மத்தளம் பாறை கிராமத்து மக்கள் அடிமை வாழ்க்கை வாழ்கின்றனர். அதனை பொறுக்க முடியாமல் பட்டாளத்தில் ஆங்கிலேய படையில்  சேர்ந்தால் மரியாதை கிடைக்கும் என அங்கு செல்கிறார் தனுஷ். ஆனால் அங்கோ ஆங்கிலேயர்களை எதிர்க்கும் இந்திய மக்களை சுட்டுக் கொல்லும் பணி வழங்கப்படுகிறது. இதனால் குற்ற உணர்ச்சியில் ஊர் திரும்பும் தனுஷை கிராமத்து மக்கள் ஊரை விட்டு துரத்துகிறார்கள்.
Captain Miller' movie review: A fantastic Dhanush spearheads Arun Matheswaran's mostly-engaging actioner - The Hindu

இதனால் காட்டில் நாடோடி வாழ்க்கை வாழும் அவரை புரட்சி கூட்டம் அரவணைக்கிறது. ஆங்கிலேயரை எதிர்த்து சண்டை செய்கிறார். இதனிடையே மன்னர் ஆட்சியில் பொக்கிஷமாக பாதுகாத்த கோயில் சிலை ஆங்கிலேய அரசால் அபகரிக்கப்படுகிறது. அதனை பொறுக்காத  மன்னர் குடும்பத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தனுஷின் கூட்டம் திருட செல்கிறது. சென்ற இடத்தில் தனுஷ் எடுக்கும் சுயநல முடிவு ஒட்டுமொத்த கிராமத்தையும் பாதிக்கும் நிலையில் ஆங்கிலேயர் – மன்னர் பகைக்கு நடுவே மத்தளம் பாறை மக்கள் பந்தாடப்படுகிறார்கள். யாரால் வெறுத்து துரத்த பட்டாரோ அந்த மக்களை காக்க கேப்டன் மில்லர் ஆக  தனுஷ் என்ன செய்கிறார் என்பதே இப்படத்தின் கதையாகும்.

சுதந்திரத்துக்கு முன்னால் நடக்கும் கதையாக, 5 அத்தியாயங்களை கொண்ட பகுதியாக, கேப்டன் மில்லர் படமாக்கப்பட்டுள்ளது. ஈசனாக இருக்கும் தனுஷ் கேப்டன் மில்லராக மாறி அதகளம் பண்ணியிருக்கிறார் என்றே சொல்லலாம். உடல் மொழி , உணர்வுகள் என மனிதர் அனைத்திலும் புகுந்து விளையாடி இருக்கிறார்.  3 பாகங்களை கொண்ட படம் என சொல்லப்பட்டுள்ள நிலையில் இந்தப் முழுக்க தனுஷ் தான் நிரம்பியிருக்கிறார். மேலும் செங்கோலனாக வரும் சிவராஜ் குமார், வேல் மதியாக வரும் பிரியங்கா மோகன், தேன் ஆக வரும் நிவேதிதா தொடங்கி சந்தீப் கிஷன், வினோத் கிஷன் என அனைவரும் தங்கள் கேரக்டருக்காக இந்த பாகத்தில் முழு பங்களிப்பை வழங்கி உள்ளார்கள். Captain Miller teaser: Dhanush plays an anti-colonial rebel
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தனது முந்தைய  ராக்கி மற்றும் சாணிக்காகிதம் ஆகிய படங்களை போல் இதையும் ஒரு ஆக்ஷன் படைப்பாக, சமகால அரசியல்,  சமூக நிகழ்வுகள் கலந்து கொடுத்திருக்கிறார். மொத்த படத்தை பார்க்கும்போது இப்படி ஒரு கதைக்கு எத்தகைய உழைப்பு தேவைப்படும் என்பதை உணர முடிகிறது. படத்தின் பெரும்பலம் என்று பார்த்தால்  சித்தார்த் நுனியின் ஒளிப்பதிவும், ஜிவி பிரகாஷ் குமார் இசையும் தான். குறிப்பாக இடைவேளை காட்சி அருமையாக படமாக்கப்பட்டுள்ளது.

மேலும் சமூகத்தில் காணப்படும் தீண்டாமை, பெண் அடிமைத்தனம், சுயநலத்துக்காக பயன்படுத்தப்படும் மக்கள், சமூக நீதிக்காக போராட செல்பவர்களால் அவர்களை சுற்றியுள்ள மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு என படத்தில் ஆங்காங்கே சமூகம் சார்ந்த நிகழ்வுகளையும் பதிவு செய்துள்ளார்கள். அதேபோல்,  “நம்பிக்கை தவறில்லை அது மக்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்”.. “மேல்- கீழ் ஜாதி, பணக்காரன் ஏழை எந்த நிலையாக இருந்தாலும் பெண் அடிமையாக தான் இருக்க வேண்டும்” , “பெண் பேச்சை கேட்க வேண்டுமென்றால் அவள் அதிகாரத்தில் இருக்க வேண்டும்”, “நீ யாரு… உனக்கு என்ன வேணும்ங்குறத பொறுத்து, நான் யாருங்குறது மாறும்”, “சிங்கம் – ஓநாய் கதை”  போன்ற வசனங்களும் கேப்டன் மில்லரை பளிச்சிட செய்கின்றன.

வன்முறைக்கும், சுயநலத்துக்கும் உள்ள கதைதான் ஆனால் அதை படமாக்கிய விதம் மிகவும் அருமை.

குறிப்பாக படத்தில் சொல்லக் கூடிய காட்சி என்றால் படத்தின் இறுதியாக வரும் 15 நிமிட காட்சிகள் எதிர்பார்க்காதவை.

மொத்தத்தில் இந்த ‘கேப்டன் மில்லர்’ அடிமைகளின் தோழன்.
Tags: Aditi BalanArun Matheswarancaptain millercaptain miller movie reviewcaptain miller movie review in tamilcaptain miller movie review tamilcaptain miller movie storyDhansuhNivedhithaa Sathishpriyanka mohanShiva RajkumarSundeep Kishan
Previous Post

மிஷன் சாப்டர்-1 விமர்சனம்

Next Post

திறமையானவர்களை நட்சத்திரங்களாக மின்ன வைக்க வருகிறது ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ நிகழ்ச்சி!

Next Post

திறமையானவர்களை நட்சத்திரங்களாக மின்ன வைக்க வருகிறது ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ நிகழ்ச்சி!

Popular News

  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரிஸ் கபே – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கிறிஸ்டினா கதிர் வேலன்’ திரைப்பட இயக்குனரின் புதிய படம்: “ஸ்கார்” (SCAR)

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026

வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

September 20, 2026

பீப் – விமர்சனம்

September 20, 2026

‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

September 20, 2026

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை – ஹிப்ஹாப் தமிழா ஆதி

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.