• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இளையராஜா இசையில் ஆதிராஜன் இயக்கும் “நினைவெல்லாம் நீயடா” படத்தின் முதல் பாடல்!

by Tamil2daynews
October 28, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இளையராஜா இசையில் ஆதிராஜன் இயக்கும் “நினைவெல்லாம் நீயடா” படத்தின் முதல் பாடல்!

இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக உருவாகி வருகிறது “நினைவெல்லாம் நீயடா”.லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு, சிலந்தி, ரணதந்த்ரா, சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட “அருவா சண்ட” படங்களை இயக்கிய ஆதிராஜன்  கதை திரைக்கதை வசனங்களை எழுதி இயக்கியிருக்கிறார்.

பள்ளிப் பருவத்தில் உருவாகும் முதல் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கு இதயம் வருடும் 5 பாடல்களை இசைத்துக் கொடுத்திருக்கிறார் இசைஞானி. அந்த பாடல்களை ஆதிராஜன் மிகுந்த ரசனையுடன் படமாக்கி இருக்கிறார்.
பாடல் காட்சிகளை பார்த்து ரசித்த ஜீ மியூசிக் நிறுவனம் பாடல்களின் தரத்தையும் எடுக்கப்பட்ட விதத்தையும் பாராட்டியதுடன் இசை உரிமையையும் வாங்கி இருக்கிறது.
பழனி பாரதியின் வார்த்தை ஜாலங்களில் கார்த்திக்கின் மயக்கும் குரலில் உருவான “மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்…” என்ற முதல் பாடல்  ஜீ மியூசிக் சவுத் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது. பிரபல இயக்குநரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன், பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரிலீஸ் செய்தனர். நன்றி அவர்களுக்கு. பாடல் எல்லோராலும் விரும்பப்படுகிறது என்பதை பின்னூட்டங்களில் பார்க்க முடிகிறது. அருமையான ஒரு மெலடியாக அப்பாடல் அமைந்து இணையத்தைக் கலக்கி வருகிறது.
தீனா நடன வடிவமைப்பில் உருவான இந்த பாடல் காட்சியில் ரோகித், யுவலட்சுமி ஜோடி நடித்துள்ளனர். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பிரஜன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக மனீஷா யாதவ் நடிக்கிறார். மற்றொரு நாயகியாக சினாமிகா அறிமுகமாகிறார். முக்கிய கதாப்பாத்திரங்களில் ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, அபிநட்சத்திரா, டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், முத்துராமன், பி எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
Previous Post

திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் காயத்ரி மற்றும் புஷ்கர் மற்றும் இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் சுதா கொங்கரா ஓ வுமெனியா! அறிக்கை 2023-யின் பின்னணியில் இந்திய பொழுது போக்கில் பெண் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதற்கு அவர்களுடைய ஆதரவு அளிப்பதாக உறுதி மொழி அளித்தனர்

Next Post

அன்பை  மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்தும்  “அனிமல்”  படத்தின் அருமையான  தமிழ்ப் பாடல் டிராக் ‘போகாதே’  தற்போது வெளியாகியுள்ளது !!

Next Post

அன்பை  மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்தும்  "அனிமல்"  படத்தின் அருமையான  தமிழ்ப் பாடல் டிராக் ‘போகாதே’  தற்போது வெளியாகியுள்ளது !!

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் விஷ்வாவின் புது அவதாரம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

    0 shares
    Share 0 Tweet 0
  • இருமுடி கட்டு – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.