பிரபலமான தயாரிப்பு நிறுவனமான ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட், திரு எல்ரெட் குமார் தலைமையில், தனது 16வது தயாரிப்பு முயற்சியாக “மண்டாடி” எனும் புதிய திரைப்படத்தை உருவாக்குவதை பெருமையுடன் அறிவிக்கிறது. உணர்வும் உறுதியும் கலந்த, ஆழமான கதையுடன் கூடிய இந்த விளையாட்டு ஆக்ஷன் டிராமா திரைப்படம், பாரம்பரிய சூழலோடு எதிர்பார்ப்புகளை தூண்டும் படமாக அமையவிருக்கிறது.
“செல்ஃபி” என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டைப் பெற்ற இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, இப்படத்தையும் எழுதி இயக்குகிறார். கடந்த படத்தைவிட பெரிய களம் மற்றும் ஆழமான உணர்வுகளை மையமாகக் கொண்டு இந்த படத்தில் களம் இறங்கி இருக்கிறார்.
இப்படத்தில் கதாநாயகனாக சூரி நடிக்கவுள்ளார். கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் தனது நடிப்புத்திறனை நிரூபித்து வரும் அவர், இப்படத்தினால் மேலும் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வார். இப்படத்தின் மூலம் தெலுங்கு நடிகர் சுஹாஸ் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார், இதனால் படம் தெற்கிந்தியாவில் பரந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.கதா நாயகியாக மஹிமா நம்பியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி படத்தை பற்றி கூறியதாவது:
ஏற்கனவே இப்படத்தின் look test முடிந்த கையோடு pre production பணிகளுக்காக பட குழு ராம்நாடு சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளில் குழுமி இருக்கிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது. காதல், விடாமுயற்சி, மீட்பு மற்றும் உறவுகளின் பின்னணியுடன் விளையாட்டு உலகத்தை மையமாகக் கொண்ட உணர்ச்சிப்பூர்வமான பயணமாக, இது உருவாகிறது.
மண்டாடி என்றால் என்ன?மீன்பிடிக்கப் போகும் போது படகையும் உடன் வரும் மீனவர்களையும் வழிநடத்துவதைப் போல,பாய்மரப் படகுப் போட்டியின் போதும் வழிநடத்தக்கூடியவர் மண்டாடி.







