• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கென் கருணாஸ் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா

by Tamil2daynews
October 25, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கென் கருணாஸ் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா

 

தமிழ் திரையுலகில் பன்முக ஆளுமை கொண்ட கலைஞர்களான கருணாஸ் – கிரேஸ் கருணாஸ் தம்பதிகளின் வாரிசும், ‘அசுரன்’ படத்தின் மூலமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரபல நடிகர் கென் கருணாஸ் கதையின் நாயகனாக அறிமுகமாகும் பெயரிடப்படாத திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் திரையுலகத்தை சார்ந்த முன்னணி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் கென் கருணாஸ், அனிஸ்மா அணில் குமார், மீனாட்சி தினேஷ் , பிரியான்ஷி யாதவ், சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விக்கி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேசிய விருதினை வென்ற ‘இசை அசுரன்’ ஜீ. வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராமு தங்கராஜ் கவனிக்கிறார். தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான தனுசின் பிரத்யேக உடை அலங்கார நிபுணரான காவ்யா ஸ்ரீராம் இப்படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். பள்ளிக்கூட பின்னணியில் கலகலப்பான படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை பார்வதா என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ட்ரீட் பாய் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கருப்பையா சி. ராம் – காளி ராஜ்குமார் – சுலோச்சனா குமார் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள்.

இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான கார்த்தி, விஷால் , இயக்குநர் வெற்றிமாறன், நடிகரும், இயக்குநருமான ஆர். ஜே. பாலாஜி, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ். தாணு, டாக்டர் ஐசரி கே. கணேஷ், அருண் உள்ளிட்ட பலர் நேரில் வருகை தந்து படக் குழுவினரை வாழ்த்தினர்.

இதனிடையே ‘அசுரன்’, ‘வாத்தி’, ‘விடுதலை 2’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் மனதை தன்னுடைய தனித்துவமான நடிப்பால் கவர்ந்த நடிகர் கென் கருணாஸ் முதல் முறையாக கதையின் நாயகனாக நடிப்பதுடன் இப்படத்தை இயக்குவதால்… படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்கும், “ஆர்யன்” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

Next Post

சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் பேனரில் சமீர் அலி கான் தயாரித்து இயக்கி நாயகனாக நடிக்கும் கலகலப்பான காதல் கதை ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ பொங்கல் வெளியீடாக ஜனவரி 9 அன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது

Next Post

சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் பேனரில் சமீர் அலி கான் தயாரித்து இயக்கி நாயகனாக நடிக்கும் கலகலப்பான காதல் கதை 'தமிழ் பையன் இந்தி பொண்ணு' பொங்கல் வெளியீடாக ஜனவரி 9 அன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது

Popular News

  • பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படம் “மஞ்சணத்தி” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • அறிமுக இயக்குநர் படத்தில் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த்..!!

    0 shares
    Share 0 Tweet 0
  • தயாள் பத்மநாபனின் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பத்திரிகையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அறிமுக இயக்குநர் படத்தில் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த்..!!

June 2, 2026

தயாள் பத்மநாபனின் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பத்திரிகையாளர் சந்திப்பு!

June 2, 2026

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படம் “மஞ்சணத்தி” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

June 2, 2026
சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

June 2, 2026

‘பென்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவராக இணைந்திருப்பது LCU மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது!

June 2, 2026

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.