• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘மகாராஜா’ – விமர்சனம்

by Tamil2daynews
June 15, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘மகாராஜா’ – விமர்சனம்

 

நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா.இந்தப் படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கி கவனம் ஈர்த்த நித்திலன் சாமிநாதன் இயக்கியிருக்கிறார். பாலிவுட்டின் பிரபல இயக்குநரான அனுராக் காஷ்யப் இந்தப் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.இவர்கள் தவிர, மகாராஜா படத்தில் மம்தா மோகன்தாஸ், நட்டி (நட்ராஜ்), பாரதிராஜா, அபிராமி, முனிஷ்காந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சமூகத்தில் சரி தவறு என்று இரு விஷயத்துக்குள் உட்படாத எல்லா விதமான கதைகளையும் பேசும் சுதந்திரத்தை கலை ஊடகங்கள் நமக்கு அளிக்கின்றன. எதார்த்தத்தில் நாம் பார்க்கும் தினசரி குற்றங்களான பாலியல் வன்முறை , தீண்டாமை, போன்ற பிரச்சனைகள் அடிப்படையில் அறம் இல்லாத செயல்கள். இந்த நிகழ்வுகளை படமாக மாற்றுவதன் நோக்கம் ஆகிய எல்லாமே அதில் குற்றம் செய்தவனின் நிலையையும் பாதிக்கப்பட்டவரின் நிலையையும் மறுவிசாரணைக்கு உட்படுத்துவதற்காகத்தான்.

மாறாக வெகுஜன சினிமா அப்படியான கதைகளை  சுவாரஸ்ய நோக்கத்திற்காக கற்பனையால் மிகைப்படுத்தவும் திரைக்கதை யுத்திகளையும் கையாள்கிறார்கள் வெகுஜன சினிமா இயக்குநர்கள்.

பொழுதுபோக்கிற்காக கொலை செய்வது , வில்லனை வில்லனாக காட்ட அவர்களை பெண்கள் மீது பாலியல் வன்முறை நிகழ்த்துபவர்களாக காட்டுவது, போன்ற அம்சங்கள் இந்த மாதிரியான கதைகளை பக்குவமாக கையாள்வதில் இன்னும் சிக்கலை தாம் ஏற்படுத்துகின்றன.
Maharaja trailer: Tamil star Vijay Sethupathi's 50th film stars Anurag Kashyap as a villain

மகாராஜா படம் திறமையாக கையாளப்பட்ட ஒரு திரைக்கதை யுத்தி. ஆனால் அதன் கதை இன்னும் உண்மைக்கு நெருக்கமாக நாம் உணர்ந்திருக்க வேண்டும்.

சலூன் கடை வைத்திருப்பவர் மகாராஜா ( விஜய் சேதுபதி) பெயருக்குதான் மகாராஜா ஆனால் தனது பெயருக்கு நேர்மாறான தன்மை கொண்டவர். எந்த வகையிலும் அதிகாரத்தன்மை இல்லாத ஒரு மனிதர். ஒரு விபத்தில் தனது மனைவி இறந்துவிட தன் மகளை தனியாக வளர்த்து வருகிறார். சலூன் கடை , மகள் இது இரண்டும் தான் மகாராஜாவின் உலகம்.  இவர்கள் தவிர்த்து இவர்கள் வீட்டில் உயிருள்ள இன்னொரு கதாபாத்திரமாக இருப்பது லஷ்மி என்கிற இரும்பு குப்பைத் தொட்டி. அந்த விபத்தில் தனது மகளின் உயிரை காப்பாற்றியதே அந்த குப்பைத் தொட்டிதான்.

இப்படியான நிலையில் தனது குப்பைத் தொட்டியை திருடிவிட்டார்கள் என்று காவல் நிலையத்தில் புகாரளிக்கிறார் மகாராஜா. ஒரு குப்பைத் தொட்டியை காணவில்லை என்று சொல்லும் ஒருவனை பொதுவாக இந்த உலகம் என்னவாக புரிந்துகொள்ளும் என்பதை நமக்கு தெரியும் இல்லையா. இதற்கிடையில் படத்தின் வில்லன் கதாபாத்திரமான அனுராக் கஷ்யப் அறிமுகப்படுத்தப்படுகிறார். வீடுபுகுந்து கொள்ளையடித்து கொலை செய்யும் அனுராக் கஷ்யப் தனது மனைவி அபிராமி மற்றும் மகள் மீது அதீத பாசம் வைத்திருக்கிறார்.

அப்படி அந்த குப்பைத் தொட்டியில் என்னதான் இருக்கிறது. அதை யார் தான் திருடுகிறார்கள். ? குப்பைத் தொட்டிக்கும் வில்லனாக வரும் அனுராக் கஷ்யப்பிற்கும்  என்ன தொடர்பு. இருவருக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை என்பது அவர்கள் இருவரும் மகள்மீது பாசத்தைக் கொட்டும் தந்தைகள். மேலோட்டமாக பார்க்கும்போது  மிக அபத்தமாக தோன்றக்கூடிய  கதை ஒன்றுக்குப் பின் மிக உணர்ச்சிவசமான கதை ஒன்றையும் இணைத்து ஒரு கதைசொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் நித்திலன் ஸ்வாமிநாதன்.

படத்தில் இருக்கும் சில  கதாபாத்திரங்களுக்கு ஒரு பொது அம்சம் இருக்கிறது. படத்தில் வரும் ஒரு சின்ன கதாபாத்திரம் செண்டிமெண்டாக ஒரு கூலிங் கிளாஸ் வைத்திருப்பார். அதை திருடிவிட்டார்கள் என்றதும் அவ்வளவு கோபப்படுவார். போலீஸ் என்று பெயர் வைத்த திருடன் ஒருவன் தன் கழுத்தில் செண்டிமெண்டாக ஒரு சாவியை தொடங்கவிட்டிருப்பான். இந்த இரு கதாபாத்திரத்திற்கு பெரிய அங்கம் கதையில் இல்லை என்றாலும் இரண்டு பேருமே சின்ன பொருளாக இருந்தாலும் உறவாக இருந்தாலும், அதன் மீது மனிதன் சில நேரம் எவ்வளவு அதீத உணர்ச்சி வைத்திருக்கக் கூடியவனாக இருக்கிறான் என்பதையே காட்டுகிறன.
Mahara Review, Maharaja Movie Review, Vijay Sethupathi Maharaja Movie Reviewஅது இல்லாதபோது ஒரு மனிதன் கிட்டத்தட்ட மிருகமாக மாறுகிறான். அதேபோல்தான் இன்னொரு படத்தின் நாயகன் குப்பைத் தொட்டியை திருடிவிட்டார்கள் என்று புகாரளிக்கும்போது நமக்கு அதை புரிந்துகொள்ள முடிகிறது.

முதல் பாதி முழுக்க தனி ஒரு கதையாக போய்க் கொண்டிருக்க இரண்டாம் பாதியில் எந்த வித ஒளிவு மறைவும் இல்லாமல் எமோஷனலான ஒரு கதையுடன் நம்மை தொடர்புபடுத்த வைக்கிறது. மகாராஜா திரைப்படம் இருவேறு  உணர்வு நிலைகளை இணைக்கும் வகையிலான திரைக்கதை முறையை பயண்படுத்துகிறது. முதல் பாதியில் பார்வையாளர்கள் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று இயக்குநர் நினைக்கிறார் . இரண்டாம் பாதியில் உணர்ச்சிவசப்பட வேண்டும் என்று நினைக்கிறார். முதல் பாதியில் இயக்குநர் நினைத்து வைத்த நகைச்சுவைத் தருணங்கள் ஒரு சில காட்சிகளைத் தவிர  கொஞம் வர்க் அவுட் ஆகவில்லை என்றாலும் . இரண்டாம் பாதியில் கொஞ்சம் அதன் தீவிரத்தன்மையால் நம்மை கதைக்குள் இழுக்கிறார். ஆனால் இதற்காக அவர் எடுத்துக் கொண்ட மைய கதையான மிகமுக்கியமான சமூக பிரச்சனை ஒன்று இரண்டிற்கும் இடையில் ஒரு வியாபார பண்டமாக மட்டுமே மாறிவிடுகிறது என்பது படத்தின் மிகப்பெரிய பின்னடைவு.

சீரியஸான ஒரு சப்ஜெக்ட்டை கொஞ்சம் புதிய முறையில் விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் கலந்து சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர். ஆனால் ஒரு பாலியல் வன்கொடுமை பற்றிய கதை சுவாரஸ்யமாக தான் இருக்க வேண்டும் என்கிற நிபந்தனைக்கு ஏன் இவ்வளவு கட்டுப்பட வேண்டும். த்ரில் , ட்விஸ்ட் என்று நகரும் கதையில் ஒரு கட்டத்திற்கு மேல் பார்வையாளர்கள் எமோஷனை விட்டுவிட்டு ட்விஸ்ட்டில் கவணம் செலுத்த தூண்டப்படுகிறார்கள்.
Maharaja Review: Vijay Sethupathi film is bogged down by convenient writing - India Todayவிஜய் சேதுபதி சலூன் கடை வைத்திருப்பது படத்தில் பெரிய பங்காக இருக்கும் என்று எதிர்பார்த்தால் அது எதுவும் இல்லை. ஒரு முக்கியமான கதை திருப்பத்திற்காக மட்டுமே அவர் முடி திருத்தும் ஒருவராக வடிவமைக்கப்பட்டிருக்கிறார். விஜய் சேதுபதியின் நடிப்பைத் தவிர்த்து மகாராஜா கேரக்ட்ரை தனித்துவமாக நாம் நினைவில் வைத்திருக்க எழுத்தில் போதுமான பலம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். படத்தின் கதாபாத்திரங்களுக்கு இருக்கும் செண்டிமெண்ட் மாதிரி இயக்குநருக்கு பாரதிராஜா செண்டிமெண்ட்போல. அதான் இரண்டே காட்சிகளில் மட்டும் வரும் ஒரு கேரக்டரை அவருக்கு கொடுத்து வைத்திருக்கிறார்.

அனுராக் கஷ்யபின் நடிப்பு  வில்லனாக நம்ப வைத்தாலும், இந்த கதாபாத்திரத்தை எந்த நடிகர் வேண்டுமானாலும் நடித்திருக்கலாம், பி.டி வாத்தியாராக சும்மா வரும் மம்தா மோகன்தாஸ் , சில காட்சிகளில் அபிராமி என முழுமைபெறாத குறைகள். நடராஜன் நடித்திருக்கும் போலீஸ் கதாபாத்திரம் ரசிகர்களை கவரும் தருணம் ஒரு நல்ல சர்ப்ரைஸாக இருக்கும்.

ஒரே ஒரு பாடல் தான் என்றாலும் பின்னணி இசையில் படத்தை வேகத்தை இசையால் கூட்டுகிறார் அஜ்னீஷ் லோக்நாத்.
ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறார்  நித்திலன்.

விஜய் சேதுபதிக்கு இது  அவரது சினிமா பயணத்தில் மறக்க முடியாதாத படம்.

இந்த வருடம் தேசிய விருது இப்படத்திற்கு நிச்சயம்.

மொத்தத்தில் இந்த மகாராஜா படம் வீருகொண்டு நிமிர்ந்து  நிற்கும் மகா, மகாராஜா.
Tags: AbhiramiAnurag KashyapBharathiraja | maharajaBoys ManikandanMaharaja Movie ReviewMamta MohandasMunishkantNatarajan SubramaniamVijay sethupathi
Previous Post

அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் ‘பயமறியா பிரம்மை’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

Next Post

விதார்த் நடிக்கும் ‘லாந்தர்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

Next Post

விதார்த் நடிக்கும் 'லாந்தர்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

Popular News

  • டீசரில் ஒரு சாதனை படைத்த பான் இந்தியா திரைப்படம் ‘கரிகாடன்’.

    0 shares
    Share 0 Tweet 0
  • வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் வழங்கும் ‘அன்கில்_123’— புகழ் மற்றும் அதன் விளைவுகளை ஆராயும் மனோதத்துவ த்ரில்லர்

    0 shares
    Share 0 Tweet 0
  • சிவகார்த்திகேயனுக்கு அப்புக்குட்டி வாழ்த்து!

    0 shares
    Share 0 Tweet 0
  • “Love Oh Love” — பவீஷ் நடிப்பில், மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் கலகலப்பான ரொமான்டிக் காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • காந்தா – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“ரஜினி கேங்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

November 13, 2025

காந்தா – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

November 13, 2025

“Love Oh Love” — பவீஷ் நடிப்பில், மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் கலகலப்பான ரொமான்டிக் காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது!

November 13, 2025

சிவகார்த்திகேயனுக்கு அப்புக்குட்டி வாழ்த்து!

November 13, 2025

‘மிடில் கிளாஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

November 13, 2025

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் வழங்கும் ‘அன்கில்_123’— புகழ் மற்றும் அதன் விளைவுகளை ஆராயும் மனோதத்துவ த்ரில்லர்

November 13, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.