• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஆண்டனி படத்தின் டிஜிட்டல் உரிமையை பெரும் தொகைக்கு வாங்கிய அல்ட்ரா மீடியா!

by Tamil2daynews
January 13, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஆண்டனி படத்தின் டிஜிட்டல் உரிமையை பெரும் தொகைக்கு வாங்கிய அல்ட்ரா மீடியா!

 

பொழுதுபோக்கு துறையில் முன்னணி பெயர் பெற்ற அல்ட்ரா மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் மும்பை,  ஐன்ஸ்டின் மீடியாவுடன் ஒரு முக்கிய கூட்டணியில் இணைந்துள்ளது.  இது தென்னிந்தியவில் அல்ட்ராவின் குறிப்பிடத்தக்க நுழைவாக கருதப்படுகிறது.  அல்ட்ரா மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் மலையாள திரையுலகில் பிரமாண்டமாக நுழைந்துள்ளது.  ஐன்ஸ்டின் மீடியா தயாரிப்பில் உருவான பிளாக்பஸ்டர் திரைப்படமான ஆன்டனியின் டிஜிட்டல் உரிமையை பெரும் தொகைக்கு வாங்கியுள்ளது.  இது மலையாள திரையுலகில் பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது.  இந்த புதிய கூட்டணி மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் சிறந்த திரைப்படங்களை தயாரித்து சினிமா ரசிகர்களுக்கு நல்ல படங்களை கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அல்ட்ரா மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஐன்ஸ்டின் மீடியா இடையேயான இந்த புதிய கூட்டாண்மையானது உயர்தர மற்றும் கலாச்சார ரீதியாக வளமான சினிமாவை பல்வேறு ரசிகர்களுக்கு வழங்குவதற்கான உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது.  இந்த புதிய கூட்டணி மூலம், அல்ட்ரா மீடியாவானது ஐன்ஸ்டின் மீடியா தயாரிக்கும் திரைப்படங்களுக்கு ஒரு பரவலான இணைய அணுகலை உறுதியளிக்கிறது மற்றும் ஒரு மெகா OTT இயங்குதளத்துடன் கூட்டுசேர்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இரு நிறுவனங்களும் இந்த கூட்டணியில் இருந்து வெளிப்படும் ஒத்துழைப்பு மற்றும் ஆக்கப்பூர்வமான ஒருங்கிணைப்புகள் குறித்து உற்சாகத்தை வெளிப்படுத்துகின்றன.

அல்ட்ரா மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட்டின் சார்பில் சுஷில்குமார் அகர்வால், ஐன்ஸ்டின் மீடியாவுடனான கூட்டணி தென்னிந்தியாவில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.  “மலையாளம், தமிழ் மற்றும் தென்னிந்தியாவின் பிற பிராந்திய மொழிகளின் செழுமையான கலாச்சாரத்தை ஆராய்வதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். இந்த புதிய கூட்டணி தேசிய அளவில் பார்வையாளர்களுடன் புதிய மற்றும் மாறுபட்ட அனுபவத்தை வழங்கும் என்பதில் உறுதியாக உள்ளோம்” என்று கூறியுள்ளார்.

“அல்ட்ரா மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் மும்பையுடன் இந்தப் பயணத்தைத் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த கூட்டணி, ஆக்கப்பூர்வமான மொழி சார்ந்த படங்களை தருவதிலும் மற்றும் தென்னிந்திய ரசிகர்களுக்கு தனித்துவமான கதைகளை கொண்டு வருவதற்கும் எங்களின் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. இருநிறுவனங்களும் ஒன்றாக இணைந்து பொழுதுபோக்கு உலகில் புதிய மாற்றத்தை கொண்டுவருவதற்கும், மறக்கமுடியாத சினிமா அனுபவங்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்று ஐன்ஸ்டின் மீடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஐன்ஸ்டின் சாக் பால் கூறினார்.

இந்த இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தின் பற்றிய தகவல்கள் எதுவும் தற்போதுவரை வெளியாகவில்லை.  மேலும் பல ரகசிய திட்டங்களை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.  இந்த கூட்டணி பொழுதுபோக்கு துறையில் ஒரு மைல்கல்லை முடியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மொழியியல் மற்றும் கலாச்சார எல்லைகளைத் தாண்டிய அழுத்தமான கதைகளை வடிவமைக்க இரண்டு நிறுவனங்களும் இணைந்துள்ளன.  அல்ட்ரா மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஐன்ஸ்டின் மீடியா ஆகியவை இணைந்து செயல்படுவதால், ரசிகர்களுக்கு புதுமையான, பன்முகத்தன்மை மற்றும் இணையற்ற புதிய தொடர்களுக்கு உறுதியளிக்கும் ஒரு புதிய பொழுதுபோக்கு சகாப்தத்தை எதிர்பார்க்கலாம்.
Previous Post

பிரித்திவிராஜ் சுகுமாரன் நடித்திருக்கும் ’தி கோட் லைஃப்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை ரெபல் ஸ்டார் பிரபாஸ் வெளியிட்டுள்ளார்!

Next Post

‘அயலான்’ – விமர்சனம்

Next Post

'அயலான்' - விமர்சனம்

Popular News

  • ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும்  ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’  படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

    ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும் ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘அக்கா’ டீசர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மானின் அடுத்த திரைப்பயணம் ‘ஏ ஒ டி’ (AOT) – குடும்பப் பார்வையாளர்களைக் கவரும் அழகான திரைப்படமாக உருவாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் ‘ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு! வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • டி. இமான் இசையமைப்பில் தந்தை- மகள் பாசத்தை பேசும் ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் ‘ஜோ ஜோ மா’ பாடல்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் ‘ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு! வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிப்பு!

October 22, 2026

நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘அக்கா’ டீசர்!

October 22, 2026

டி. இமான் இசையமைப்பில் தந்தை- மகள் பாசத்தை பேசும் ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் ‘ஜோ ஜோ மா’ பாடல்!

October 22, 2026

சாய் துர்கா தேஜின் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் ‘சம்பராலா ஏடி கட்டு’! (Sambarala Yeti Gattu) 160 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவு!

October 22, 2026

ரன்பீர் கபூர், யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் லாஸ் ஏஞ்சல்ஸ் அகாடமி மியூசியத்தில் நடைபெறுகிறது!

October 22, 2026

நடிகர்கள் ரன்பீர் கபூர், யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் முன்பதிவு இன்று தொடங்குகிறது!

October 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.