• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மீண்டும் வருகிறான் “லூசிஃபர்” பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் மோகன்லாலின் ‘எம்புரான்’ (லூசிபர் 2) ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

by Tamil2daynews
November 12, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மீண்டும் வருகிறான் “லூசிஃபர்” பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் மோகன்லாலின்  ‘எம்புரான்’ (லூசிபர் 2) ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

 

லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் மற்றும்  ஆசீர்வாத் சினிமாஸ் ஆண்டனி பெரும்பாவூர்ஆகியோர் இணைந்து தயாரிக்க, பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில், மலையாள சூப்பர்ஸ்டார்  மோகன்லால் நடிப்பில், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான   ‘எம்புரான்’ படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான பிருத்விராஜ் சுகுமாறன் முதன்முறையாக இயக்க, மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மோகன் லால் நடிப்பில், வெளியான  திரைப்படம் ‘லூசிபர்’.  இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி, தென்னிந்தியாவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற, இப்படத்தின் அடுத்த பாகம் தற்போது எம்புரான் என்ற பெயரில் உருவாகியுள்ளது.
லைக்கா புரொடக்ஷன்ஸ் வழங்கும் 'எம்புரான்' (லூசிபர் 2) ஃபர்ஸ்ட் லுக் !மிகப்பெரிய பொருட்செலவில், லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் – ஆசீர்வாத் சினிமாஸ் ஆண்டனி பெரும்பாவூர் – இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர்.

இந்த ஆண்டில், மலையாளத்தில் மட்டுமல்லாது தென்னிந்தியா முழுக்க,  மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மோகன்லாலின் அதிரடியான தோற்றம் அவரது ரசிகர்களுக்கு தீபாவளிப் பரிசாக, பெரும் கொண்டாட்டமாக அமைந்துள்ளது. இணையம் முழுக்க இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வைரலாக பரவி வருகிறது.

ஜி.கே.எம் தமிழ் குமரன் லைக்காவின் தலைமை பொறுப்பு வகிக்க, இப்படத்தின் திரைக்கதையை முரளி கோபி எழுத, சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, தீபக் தேவ் இசையமைக்கிறார்.சுரேஷ் பாலாஜி மற்றும் ஜார்ஜ் ஃபயஸ் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றுகிறார்கள். இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகிறது.

மோகன் லால் ‌- பிருத்விராஜ் சுகுமாறன் என முன்னணி திரை ஆளுமைகளின் கூட்டணியில் தயாராகும் ‘எம்புரான்’ திரைப்படம், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Previous Post

சென்னை ரைபிள் கிளப் கவுரவ செயலாளராக தயாரிப்பாளர் ராஜ்சேகர் பாண்டியன் மீண்டும் தேர்வு.

Next Post

“ஜிகர்தண்டா 2” படத்தில் நடிப்பில் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் ராகவா லாரன்ஸ் – நடிகர் தனுஷ் பாராட்டு !

Next Post

“ஜிகர்தண்டா 2” படத்தில் நடிப்பில் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் ராகவா லாரன்ஸ் - நடிகர் தனுஷ் பாராட்டு !

Popular News

  • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டோர்ம்- The Dorm’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

    0 shares
    Share 0 Tweet 0
  • ’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபூடி, பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி-சீரிஸ் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் ‘ஃபௌஜி‘ – படத்திலிருந்து சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் புதிய போஸ்டர் வெளியீடு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்டாண்ட் அப் காமெடியில் வரலாறு படைத்த கூத்து கலைஞர் மாயா எஸ். கிருஷ்ணன் ‌!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.