• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மனதில் இடம்பிடிக்கும் நம் வாழ்வின் காதல் பயணம் “ஓ மை கடவுளே” – இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து

Director Ashwath Marimuthu on Oh My Kadavule

by Tamil2daynews
February 12, 2020
in சினிமா செய்திகள்
0
மனதில் இடம்பிடிக்கும் நம் வாழ்வின் காதல் பயணம் “ஓ மை கடவுளே” – இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து
3
SHARES
124
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இளமை ததும்பும் காதல் கதைகள் தமிழ் சினிமாவில் அருகிவிட்டது. அந்த ஏக்கத்தை நீக்கி, தற்கால இளைஞர்கள் கொண்டாட, காதலை நவீன வடிவில் ஃபேண்டஸி கலந்து சொல்லும் படைப்பாக வருகிறது “ஓ மை கடவுளே”. டிரெய்லர், டீஸர் பெரும் வரவேற்பு பெற்று கண்டிப்பாக திரையரங்கில் பார்த்தே தீரவேண்டுமென, ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை விதைத்திருக்கும் இப்படம் 2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகிறது.

இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் அஷ்வத் மாரிமுத்து படம் குறித்து பகிர்ந்துகொண்டதாவது….

“ஓ மை கடவுளே” நம் வாழ்க்கையை சொல்லும் படைப்பு. நம் தினசரி  வாழ்வில்  நிகழ ஆசைப்படும் அதிசயங்களை, திருப்பங்களை, மற்றொரு வாய்ப்பை  இப்படம் திரையில் காட்டும். இப்படத்தின் நாயகனுக்கு தன் வாழ்வை தானே வடிவமைக்கும் வாய்ப்பு ஒரு அதிசயமாக கிடைக்கிறது. அந்த பயணம் தான் படம்.


டிரெய்லர், டீஸர் வீடியோக்கள் சில திருப்பங்களை சொல்லிவிட்டது. விஜய்சேதுபதி பாத்திரம் வீடியோவில் வெளிப்படுத்தியது படத்தின் மையத்தை சொல்லியது போன்று இருக்கும் நிலையில், நீங்கள் கூறுவது  கதையின் சுவாரஸ்யத்தை  உடைத்து விடாதா என வினவியபோது …

படகுழுவாக நாங்கள் ரசிகர்களை இப்படத்தின் வித்தியாசமான பயணம் நோக்கி தயார் செய்யவே விரும்புகிறோம். அது ரசிகர்கள் படத்தை ரசிப்பதற்கு ஏதுவாகவே இருக்கும். மேலும் படத்தில் இன்னும் நிறைய திருப்பங்களும் ஆச்சர்யங்களும் காத்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் வெறும் திருப்பங்கள் மட்டுமே இதன் கதை அல்ல. இது காதல் உணர்வுகளை, உறவின் சிக்கல்களை, நட்பின் வலிமையை சொல்லும் படைப்பு. ரசிகர்கள் படம் பார்க்கும்போது தங்கள் வாழ்வோடு இப்படத்தை தொடர்புபடுத்தி கொள்வார்கள். அவர்கள் வாழ்வின் பிரதிபலிப்பாக படம் இருக்கும். திருப்பங்களை சொல்லிவிடுவதால் படத்தின் ஆச்சர்யங்கள் தீராது. இது எல்லோர் மனதிற்கும் நெருக்கமான படைப்பாக இருக்கும்.

படக்குழு பற்றி பேசும்போது …

அசோக் செல்வனுடன் எனது நட்பு நீண்ட கால நினைவுகள் கொண்டது. படம் செய்ய வேண்டுமென்கிற எங்களது நெடுநாள் கனவு இப்படம் மூலம் நனவாகியிருக்கிறது. அசோக் செல்வனின் திறமைக்கு சரியான தீனி அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை. அவரை பெரும் உயரங்களில் காண விரும்புகிறேன். இப்படத்திற்கு பிறகு அவர் வெகு பிஸியான நடிகராக மாறிவிடுவார். ஒவ்வொரு காட்சியிலும் அவரது நடிப்பு பேசும்படி இருக்கும். ரித்திகா சிங் தான் இப்படத்தின் ஆத்மா அவர் இல்லையெனில் அனு கதாப்பாத்திரம் முழுமை பெற்றிருக்காது. தனது கடும் அர்ப்பணிப்பால் அனு கதாப்பாத்திரத்திற்கு உயிர் தந்திருக்கிறார் ரித்திகா சிங். வாணி போஜன் எங்கள் படத்திற்கு மற்றுமொரு பலம். பலர் நிராகரித்த நிலையில் அந்த கதாப்பத்திரத்தை புரிந்து மிக அழகாக செய்துள்ளார். விஜய் சேதுபதி எங்கள் படத்திற்கு கிடைத்த சிறப்பு. அவரது கதாப்பாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்படும். இப்படம் நம் வாழ்வை நாமே நெருங்கி பார்க்கும் பயணம். அனைவர் மனதிற்கு நெருக்கமான ஒரு படைப்பாக இப்படம் இருக்கும் என்றார்.

2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படம் சென்சார் ஃபோர்டில் U/A சர்டிஃபிகேட் பெற்றுள்ளது. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியுள்ள இப்படத்தை Axess Film Factory  சார்பில் தயாரிப்பாளர் G. டில்லிபாபு Happy High Pictures அபிநயா செல்வமுடன் இணைந்து  தயாரித்துள்ளார். Sakthi Film Factory இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

வாணி போஜன், M S பாஸ்கர், ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து , இயக்கம் – அஷ்வத் மாரிமுத்து

இசை – லியான் ஜேம்ஸ்

ஒளிப்பதிவு – விது அயன்னா

படத்தொகுப்பு  – பூபதி செல்வராஜ்

கலை இயக்கம் – இராமலிங்கம்

உடை வடிவமைப்பு – தினேஷ் மனோகரன்

உடைகள் – முகம்மது சுபையர்

சண்டைப் பயிற்சி – ராம்குமார்

பாடல்கள் – கோ சேஷா

புகைப்படம் – ராஜா

தயாரிப்பு மேற்பார்வை – சேதுராமலிங்கம், பூர்னேஷ்

நிர்வாக தயாரிப்பு – நோவா.

Previous Post

வித்தியாசமான சைக்கோ திரில்லர் கதை ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ” மிரட்சி “

Next Post

சந்திரா மீடியா விஷன் படக்குழுவினர் அனைவரும் நடிகர் ஆரி அருஜுனா விற்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

Next Post
சந்திரா மீடியா விஷன் படக்குழுவினர் அனைவரும் நடிகர் ஆரி அருஜுனா விற்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

சந்திரா மீடியா விஷன் படக்குழுவினர் அனைவரும் நடிகர் ஆரி அருஜுனா விற்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

Popular News

  • டார்க் ஜெயண்ட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆட்டி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.