• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

பெப்சி சிவா வெளியிட்டுள்ள  ” கள்ளக்காதல் ” குறும்படம் தற்போது இணையத்தை கலக்கிவருகிறது

by Tamil2daynews
July 13, 2020
in சினிமா
0
பெப்சி சிவா வெளியிட்டுள்ள  ” கள்ளக்காதல் ” குறும்படம் தற்போது இணையத்தை கலக்கிவருகிறது
0
SHARES
28
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“கள்ளக்காதலால் மனைவி வெட்டிக்கொலை” என்ற செய்திகள் எல்லாம் தற்போது மிகச்சாதரணமாக நம்மைக் கடந்து செல்கிறது. ஆனால் அதற்குப் பின்னால் எவ்வளவு மனிதர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அப்படியான மனநிலைக்கு இச்சமூகத்தின் கலாச்சார மீறல் நம்மை தள்ளிவிட்டது.
அது ஆபத்தானது என்பதை அறிவுறுத்த வந்திருக்கும் ஒரு நேர்த்தியான குறும்படம் தான் “ஆர்டிகள் 497 கள்ளக்காதல்”
நெக்ஸ்ட் லெவல் புரொடக்சன் தயாரித்துள்ள இப்படத்தை சிலம்புச் செல்வன் எழுதி இயக்கி இருக்கிறார். விஜய் ஆண்டனி நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் மிகச்சிறப்பாக உருவாகியுள்ள தமிழரசன் படத்தைத் தயாரித்துள்ள பெப்சி சிவா தனது tamizh media  yutube சேனலில் இக்குறும்படத்தை வெளியிட்டுள்ளார்.
இளைய தலைமுறையில்  சமுதாய சிந்தனையுள்ள படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விதமாக தயாரிப்பாளர் பெப்சி சிவா இப்படியான குறும்படங்களை வெளியிடுகிறார். இது நிச்சயமாக வளரும் இளம் படைப்பாளிகளுக்கு பெரும் உந்துதலாக இருக்கும்
ஒரு போலீஸ் விசாரணையோடு துவங்கும் படம் பல்வேறு திருப்பங்களோடு பயணிக்கிறது. கள்ளக்காதலில் ஆண்/பெண் இருபாலருமே தவறுகள் செய்வதை சுட்டிக்காட்டும் இக்குறும்படம் பெண்களுக்கான பாதிப்பு அதிகம் என்பது போலவே ஆண்களுக்கான பாதிப்பும் அதிகம் என்பதைப் பேசுகிறது. பெண்களுக்கு அதிக சலுகைகள் எவ்வளவு முக்கியமோ அதேபோல் பெண்களுக்கு பொறுப்பும் மிக அவசியம் என்பதை படம் பேசியுள்ளது. படத்தில் வயதான பின் திருமணம் ஆகி மனைவியின் பழைய காதலனால் ஏற்படும் இயலாமையைச் சுமக்கும் பாத்திரத்தில் நாயகன் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பவர் படத்தின் இறுதியில் தனக்குள் இருக்கும் மனிதத்தன்மையை வெளிப்படுத்தும் போது கவர்கிறார். படத்தின் ஒளிப்பதிவு பின்னணி இசை எல்லாம் குறும்படம் என்பதைத் தாண்டி ஒரு பெரும்படம் பார்க்கும் உணர்வைத் தருகிறது.
வசனங்களிலும் காட்சியமைப்பிலும் நன்றாக கவனம் ஈர்த்துள்ளார் இயக்குநர் சிலம்புச் செல்வன். நேற்று யூட்யூபில் வெளியான இக்குறும்படம் 20 ஆயிரம் பார்வையாளர்களைக் கடந்து பாசிட்டிவான பயணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
சரியான நேரத்தில் வெளியாகியுள்ள தரமான படம் இது.
மேலும் இந்த “ஆர்ட்டிகள் 497 கள்ளக்காதல்” என்ற குறும்படம் பேசும் அறம் சார்ந்த விசயம் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக ஒரு பிரம்மாண்டமான திரைப்படத்திற்கு நிகராக இப்படத்திற்கான விளம்பரங்களைச் செய்துள்ளார் பெப்சி சிவா. பெரிய நடிகர்கள் படங்களுக்கு இணையான போஸ்டர் டிசைனிங், பெரிய பத்திரிகைகளில் விளம்பரம், மதுரை, நெல்லை  உள்ளிட்ட நிறைய மாவட்டங்களில் படத்தின்  போஸ்டர்கள் என இக்குறும்படத்தைப் பெரிதாக ரீச் செய்துள்ளார் பெப்சி சிவா
https://youtu.be/zlcmFWC557w
Previous Post

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உடன் இணையும் விஜய்மில்டன்!

Next Post

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவர்கள் ரசிகர்கள் செய்த பிரம்மாண்டம்

Next Post
நடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவர்கள் ரசிகர்கள் செய்த பிரம்மாண்டம்

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவர்கள் ரசிகர்கள் செய்த பிரம்மாண்டம்

Popular News

  • சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மறைந்த தலைவர் கே.ராஜன் திருவுருவப் படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம்: தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரையுலகினர் நெகிழ்ச்சி அஞ்சலி!

    0 shares
    Share 0 Tweet 0
  • “மூன்றாம் கண்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் : பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நோவா’ படத்தில் ஆக்சன் காட்சிகளில் மிரட்டி இருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ புகழ் ரைசா வில்சன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“மூன்றாம் கண்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

June 9, 2026

சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மறைந்த தலைவர் கே.ராஜன் திருவுருவப் படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம்: தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரையுலகினர் நெகிழ்ச்சி அஞ்சலி!

June 9, 2026

கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் : பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு

June 9, 2026

‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

June 9, 2026

‘நோவா’ படத்தில் ஆக்சன் காட்சிகளில் மிரட்டி இருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ புகழ் ரைசா வில்சன்

June 9, 2026

விறுவிறுப்பான படப்பிடிப்பில் வேகமாக தயாராகும் நடிகர் ‘விக்கல்ஸ்’ விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி’

June 9, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.